திங்கள், 31 ஜனவரி, 2011

விரதம்

செவ்வாய் கிழமை விரதம்,சோமவார விரதம்,பௌர்ணமி விரதம்,சஷ்டி விரதம்
இவ்விரதங்களுக்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்யவேண்டும்.
இந்தநாட்களில் சிலமணி நேரமாகிலும் திருஅருட்பா,நடராஜர் பத்து படிக்க வேண்டும் .
உப்பில்லாமல் மூன்று வேளையும் சாப்பிடலாம்.
பாசி பருப்பை வேகவைத்து,அதில் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
பாசி பருப்பு வெந்த பின்  வடிகட்டி பருப்பை சாப்பிடலாம்.
பச்சைபயிர்  பாயசம் சாப்பிடலாம். இரவு இனிப்பு சேர்த்த சிற்றுண்டியை சாப்பிடலாம்.
அவலை சுத்தம் செய்து பாலில் ஊற வைத்து சர்க்கரை போட்டு சாப்பிடலாம்  .
அவலை உப்புமா போல் செய்து சாப்பிடலாம்.
பௌர்ணமி விரத நாளில் காலையில் குளித்து பூஜை செய்யவேண்டும். காலையில் பாலும் பிற்பகல்  பழமும் இரவு இனிப்புடன் கூடிய சிற்றுண்டியும் சாப்பிடலாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்ப  நாள் முதல் ஒரேவேளைகடவுளுக்கு படைத்துவிட்டு  உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் ,கடைசி நாளில் சர்க்கரை பொங்கல் ,பஞ்சாமிர்தம் செய்து படைத்து கும்பிடவேண்டும்.
திங்கள் கிழமை  துறவிகளுக்கு சிறப்பானது .சாதாரண குடும்பத்தாரர்களும் சோம வார விரதம் இருக்கலாம்.
பாசி பருப்பு அரைப்படி வேகவைத்து வெல்லம் போட்டு சாப்பிட்டால் சஷ்டி விரதத்திற்கும் எல்லா விரதங்களுக்கும் சிரேஷ்டமானது.பாலில் அவல் போட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.   பாசி பருப்பு வேகவைத்து வடிகட்டி பனைவெல்லம் தட்டி சேர்த்து சாப்பிடலாம். 








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக