.
தண்ணீரில் உள்ள செங்கொடி
செடியை வேருடன் பிடுங்கி, 120 வருடம் வேப்பமரத்தின்
பட்டை,காய்,கொட்டைகளுடன் சேர்த்து அரைத்து அதில் சிறிது எடுத்து முற்றின
வாழக்காயின் உள்ளே வைத்து ஏழு நாட்கள் வைத்து இருந்தால் வாழைக்காய் பழுக்காமல்
இருந்தால் அது பக்குவமானது.அதனை உட்கொண்டு வந்தால் ஞானமுள்ள குழந்தை
பிறக்கும்.குந்தி தேவிக்கு பிறந்த பாண்டவர்கள் பிறப்பு இவ்வகையான தெய்வீக பிறவிகள்
ஆகும்.அதுபோல் துறவிகள் நினைத்தால் ஒரு மணியில் குழந்தை பிறக்கும்.
சுவாமிகள் கூறியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமிகள் கூறியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
கருத்தரிக்காமல் குழந்தையும் பிறக்கும்
வியாழன், 10 நவம்பர், 2011
மனம் ஒடுக்குவது
நிலைக்கண்ணாடியின் முன் நாம் உட்கார்ந்து கொண்டு
நாம் நம் உருவத்தையே பார்த்து கொண்டு வரவேண்டும்.மண் ஒருமுகப்படும் பொழுதும்
ஒடுங்கும் போதும் நம் உருவம் நமக்கு கண்ணாடியில் தெரியாது.
பூஜை அறையில் குத்து விளக்கை எள் எண்ணை விட்டு
ஏற்றி நம் பின்புறம் வைக்க வேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடி வைத்திருக்க
வேண்டும் இவற்றின் நடுவில் உட்கார்ந்து கொண்டு சுடர் ஒளியை கண்ணாடியில்
பார்த்துகொண்டு வரவேண்டும்.கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை நாம் அடையும்
பொழுது நமது மனம் ஒருமுகமாக நின்றுவிட்டடதற்கு ஆரம்பமாகும்.
சுவாமிகள் கூறிய அருள் உரைகள்
அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும்
சாந்தியாகும்.
தொண்ணூறு வயதுக்கு மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.
நூற்றிஇருபது வயதுக்கு மேல்
தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.
கலசம் வைத்து யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.
பௌர்ணமி தீட்டு வந்தால் ஆண் பிறக்கும்.
அமாவாசையில் தீட்டு வந்தால் பெண்
பிறக்கும்.
ஆடியில் குழந்தை பிறந்தால் நல்லது
ஆடியில் தலைச்சன் கருவுற்றால் சித்திரையில்
குழந்தை பிறக்கும்.
தலைச்சன் ஆடி,சித்திரையில் குடும்ப பெண் பிறந்தால் அலசலாட்டும்.
குரு
திசையில் புதன் கிழமை,தைமாதத்தில்,பெண் பிறந்தால் புதையல் கிடைத்தது போல.
புதன் கிழமை பெண் பிறப்பது நன்று.
கண்டதையும்,காணததையும்,சொல்லக்கூடாது.
பெண்கள்தான் முதலில் நல்வழி படுத்திய
பின்,நம்முடன் சேர்ந்து ஞானத்திற்கு வழிபட்டால் தான் நாம் சீக்கிரம் அடைய
முடியும்.
கணவனும் மனைவியும் காலையில் ஒரு நிலையாக
சுவாமிகளை நினைக்க வேண்டும்.கணவனும்,மனைவியும்,பக்தி மார்க்கத்தில் இருவரும் ஒன்று
சேர்ந்து போகவேண்டும் என்ற நிலை வந்தால்தான் சீக்கிரம் புண்ணியத்திற்கு போகலாம்.
மனம். இரண்டும் ஒன்றாக ஒரு மனமாக இருந்தால்
எதையும் சாதிக்கலாம்.எல்லா கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து புண்ணியத்திற்கு போக
முடியும்.
மனம் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆணுக்கு பெண் ஆதரவு.பெண்ணுக்கு ஆண் ஆதரவு.
போதும் என்ற மனமே பொன் செய்த மனம்.ஆணுக்கும்
பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும்.
தாயும் ஒன்றுதான்,மனைவியும் ஒன்றுதான்.
சாதுக்களை நீ தேடி போக வேண்டும்.
கட்டையை ( சரீரத்தை ) வதக்கி சிவா சிவா என்று
போவது வைகுண்டம்.கட்டையை விட்டு போனதும் சொர்க்கம்.
மக்கள் பிரியப்பட்டு கொடுப்பதை செய்.அவனவன்
செய்த புண்ணியம் அவனவனை போய் சேரும்.
புண்ணியத்திற்கு போவதை அழிப்பது காசு.
வேகாத ஒரு புல் அருகம்புல்
வாடாத ஒரு பயிர் அன்பு
வருத்தம் இல்லாத ஒரு பாரம் கரு உருவாகி குழந்தை.
காயாத கானகத்தில் ஒரு மான் பெண்ணின் அழகு .
பெண்ணுக்கு இலட்சணம் கூந்தல்.
பெண்ணின் அழகு அன்பு.
தன்னை மறந்த நிலையில் சிவா சிவா என்று உணர்ந்து
தாய் வேறு சேய் வேறாக மாறுகிறது.
ஆண்கள் ஆயுதம்.
பெண்கள் புத்திரபாக்கியம்.
பிரமச்சாரி ஒரு லட்ச மந்திரத்திற்கு ஈடாகாது.
கரு உருவான மூன்றேமுக்கால் நாழிகைக்குள் யாரை
பார்த்தார்களோ அவர்களுடைய பிம்பத்துடன் குழந்தை சாயல் இருக்கும்.
நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வட்டிக்கு வட்டி சுவாமிகள் ( கடவுள் ) கொடுப்பார்.
நாம் கெட்டது செய்யாமல் இருந்தால் அதுவே
புண்ணியம்.
அன்னதானத்திற்கு மிஞ்சினது எதுவும் இல்லை.
சுவாமிகள் கூறிய அருள் உரைகள்
வேலிக்கு வைத்த முள் காலுக்கும் தைக்கும் .
பாதரச மணியை
தண்ணீரில் போடு அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் எல்லா பிணியும் குறையும்.
அன்னத்தை அளவு
பிடித்தவன் மன்னனையும் மலா வாங்கும்.
நல்ல உடம்பிற்கு நாலு
சொம்பு தண்ணீர்.
ஒரு மனிதனுடைய
சாப்பாடு அளவு முப்பத்திரெண்டு கையளவுதான்.
சூரிய கிரஹணத்தில்
குழந்தை பிறந்தால் அம்சமாக வளர்வான்.
வீட்டிற்கு
வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும்.காபி, டிபன்,வெற்றிலை,பாக்கு (
தாம்பூலம் ) கொடுக்க வேண்டும்.
நாயாட்டும் உழைத்தால்
ராஜாவாட்டும் சாப்பிடலாம்.ராஜாவாட்டம்
இருந்தால் நாய் போல் சாப்பிட வேண்டும்.
நாயாட்டம்
உழைத்து ராஜா போல் சாப்பிடவேண்டும்.ராஜா
போல் சும்மா இருந்தால் பின்னால் நாய் போல் சாப்பாட்டிற்கு அலைய வேண்டும்.
கடைசி
காலத்திலேயாகிலும் கடவுளை கும்பிட வேண்டி செய்யப்படுகிறது.
இலை : வில்வம்,துளசி,வன்னி,அருகம்புல்,திருநீர்பத்ரி
பன்னீர் இலை :
திருசெந்தூரில் விபூதியை இந்த இலையில் தான் கொடுப்பார்கள்.
பாதபூஜை காலை பத்து
மணிக்குள்,மாலை நாலரை மணிக்கு மேல் செய்ய வேண்டும்.
திங்கள்கிழமை :
சிவனுக்கு, சந்நியாசி.
செவ்வாய்க்கிழமை :
சக்தி
புதன்கிழமை : பொருள்
வாங்கி வைத்தால் நல்லது, யாருக்கும் கொடுக்க கூடாது. தாய் சாந்தப்படுத்தும்.
வியாழக்கிழமை :
குருவுக்கு
வெள்ளிக்கிழமை :
தாய்க்கு,எல்லா தெய்வமும்,முருகன்,துர்க்கை,விநாயகர், சம நாள் .
குறையில்லாத மனிதனே
கிடையாது.சாது,சந்நியாசி இவர்களுக்கு கஷ்டம் அதிகம் இருக்கிறது.குறையுடன் கடவுள்
பிறப்பித்தார்.குறையில்லாமல் யாரையும் பிறப்பிக்கவில்லை.
அத்திவரதன் :
சக்திக்கு பிறந்தவர்.
கஷ்டத்தை அனுபவித்த
பிறகுதான் நன்மை ஏற்படும்.
கஷ்டம் வந்தாலும்
நம்பிக்கை இழக்கக்கூடாது.
கஷ்டம் வரும்
காலங்களில் நம்பிக்கை அதிகம் இருக்க வேண்டும்.
கஷ்டத்தையும்,கசப்பையும்
இனிப்பாக நினைக்க வேண்டும்.
காசை கீழே
வைத்துவிட்டு பிறகு எடுத்து கொள்ள வேண்டும்.நேராக வாங்கினால் கடன் வாங்குவதாக
அர்த்தம்.
இன்னும் கும்பிட்டு
இப்படி நடக்கிறது என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும்,எல்லாம்
போய் விடும்.
ஆண்
பாடுபடுபவன்,சம்பாதித்து கஷ்டம் வரும்போது தைரிய லக்ஷ்மியை கைவிடக்கூடாது.பெண்கள்
ஊக்கம் கொடுத்து தைரியமாக ஆணை காவாத்து பண்ண வேண்டும்.
பெண்கள் நல்ல ராசியாக
இருந்தால் எல்லாம் நல்லபடியாக ஆணுக்கு நடக்கும்.
பெண்கள் செய்யும்
தவறுக்கு ஆணுக்கும் பங்கு உண்டு.
பெண்கள் மதிப்போடு
சென்றால் தான் ஆணுக்கு மதிப்பு.
செய்கிற தொண்டையோ,நன்மையோ,தர்மத்தையோ
அடுத்தவனுக்கு சொல்லக்கூடாது.
நம்பிக்கைக்கு ஆதாரம் மனைவி,சண்டை
போட்டுக்கொண்டாலும் கணவனிடம் அன்பு செலுத்தி சந்தோஷமாக நடந்து கொண்டுவரவேண்டும்.
கால் கட்டு – பெண்.
கழுத்திலே கட்டு – ஆண்
மொச்ச காட்டிலே மேய்ந்த மாடு கோசம் சேராது.
பெண் தன் கணவனை நல்லவன் என்று எப்பொழுதும்
சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அறையின் சுவர் : ஆண்,தகப்பன்.
சாமான்கள் : பெண் ,தாய்.
ரத்தம்,சதை : தாய்.
எலும்பு : தகப்பன்.
காற்று,நீர்,நெருப்புதான் கடவுள்.நம்பிக்கை
இழக்காமல் இருக்கத்தான் கோயில்.
முதல் பிள்ளை பிரம்மா.
இரண்டாவது பிள்ளை : நாரதர்.
மூன்றாவது பிள்ளை : மகாவிஷ்ணு.
நான்காவது பிள்ளை : எமன்.
நாமம் : வலம் ஈஸ்வரன், இடம் மகாவிஷ்ணு.சிகப்பு
தாய்.
விபூதி : வலம் ஈஸ்வரன்,நடுவில் தாய்,இடது
புறம் மகாவிஷ்ணு.
சுவாமிகள் அச்சமில்லாமல் நிர்வாணமாக பதினேழு
வயதில் திரிந்தவர்.
யாதாகிலும் ஒன்று கெட்டது ஏற்பட்டால் நேராக
சுவாமிகளிடம் சென்றால் சுவாமிகளே அதனை நல்லபடியாக முடிப்பார்.
இப்பொழுது இருந்தே கோபத்தை குறைத்து கொள். எந்த
நேரத்திலும் கோபமில்லாமல் சாந்தமாகவே இருக்க வேண்டும்.ஐந்து விரல்களும் ஒன்று போல்
இல்லை,இதுவும் கடவுள் செயல் எதுவும் நல்லதிற்கே என்று இரு.
சக்தி கோயிலில் தின்றவனுக்கு உடனே கெடுதி ஏற்ப்படும்.
பன்றியும்,நாயும்,வண்டியில் மாட்டிக்கொண்டால்
தீமை.பறவை அடித்தால் திருஷ்டி வராது.ஆறு மாததிற்க்கு ஒரு கோழி காவு கொடுக்க
வேண்டும்.பன்றி அடிபட்ட வண்டி போன இடத்தில உருப்படாது.
உலக்கை,அம்மிக்கல்,தெய்வமாக
கும்பிடுவார்கள்.இலக்ஷ்மி கடாட்சம்.அறுவாமனையை பெண்ணுக்கு
கொடுக்கமாட்டார்கள்.பையனுக்கு கொடுப்பார்கள்.
தாய் மடியில் தங்கம் இருந்தாலும்,தன் மடியில்
தவிடாவது இருக்க வேண்டும்.
தற்பெருமையும் கௌரவத்தையும்,ஒழி.
இடாதவனுக்கு இட்டு காட்டு.பிறகு விலகி விடு.
களவும் கற்றுக்கொள்.கற்று மறந்து விடு.
தாய் வயிற்றில் ஒன்பது மாதம் + பத்து நாள்
குழந்தை இருக்கும்.
(270 + 10 = 280 நாட்கள்)
ஆகாது என்று சொல்லும்
குழந்தை பிற்காலத்தில் நன்றாக இருக்கும்.
ஆண் ஆகிலும்,பெண்
ஆகிலும்,பயந்து திக் என்றால், அந்த திக் என்ற பயந்த சமயத்தில் தான் பேய்
பிடிக்கும்.பெரிய கால் விரல்களை ஊன்றி நடந்தால் எதுவும் பிடிக்காது.
மனைவி
விட்டுக்கொடுத்தால் தான் கணவன் மோட்சம் போவான்.
அடித்தாலும்,உதைத்தாலும்,கணவனிடம்
மனைவி தொண்டு செய்ய வேண்டும்.
தினை அரிசியை மூன்று விரல்களால் எடுத்து எறும்புக்கு
போடு.குளத்தில் உள்ள மீனுக்கு பொறி போடு.
சண்டி முடிஞ்சால்
சமத்துவம் ஆகும்.
சண்டி மாட்டை அரை
விலைக்கு வாங்கி திமிரியில் கத்தியை பாய்சினால் நன்றாக ஓடும.தேன் மெழுகினால் கத்தி
குத்தின இடத்தில மூடி ரத்தத்தை அடைத்து விடுவார்கள்.சண்டி மாட்டின் பின்புறம்
சேவல் தலையை நுழைத்தால் அந்த சேவல் புரளும்.அதன் பிறகு சண்டி மாட்டு சாதாரண மாடு
போல் ஆகிவிடும்.பிறகு அந்த சேவலை எடுத்து விட்டால் சேவல் உயிரோடு இருக்கும்.
எலுமிச்சம் பழம் நாலாக
அறுத்து குங்குமம் வைத்து கற்பூரம் வைத்து திருஷ்டி கழித்து சாறு பிழிந்து வலது
கையில் உள்ளதை இடது கை பக்கமும்,இடது கையில் உள்ளதை வலது கை பக்கமும்,மற்ற
இரண்டையும்,முன் பக்கமும்,பின் பக்கமும் போட வேண்டும்.
விஷத்தை விஷத்தாலும்
,முள்ளை முள்ளாலும் எடுக்க வேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)