ஞாயிறு, 9 ஜனவரி, 2011

மந்திரம்

 மந்திரம் கரும காண்டம். நம்மையும் உலகத்தையும் படைத்த தாயை மந்திரம் செய்து தன் கட்டுபாட்டில் கொண்டு வந்து எவ்வளவு வேலை மந்திரவாதி வாங்குகிறானோ அந்த பாவமெல்லாம் போகாது. எத்தனையோ பேர்களுக்கு அது செய்கிறேன் இது செய்கிறேன் என்று அவனிடம் காசு வாங்கும் போது அது பாதிக்கும். அந்த காசை வேறு ஒருவரிடம் கொடுக்கும் போது  அவனையும் பாதிக்கும் .

பத்மாசுரனின் தாய் எவ்வளவோ துறவிகளிடம் வரம் பெற்று தவம் செய்து பத்மாசுரனை பெற்றார். அவனும் வாங்கிய வரங்கள் பத்தாது என்று மேலும் வரங்கள் வாங்க பிரியப்பட்டு ஈஸ்வரனை குறித்து கடுந்தவம் செய்தான். ஈஸ்வரன் இவனுக்கு வரங்கள் கொடுக்க கூடாது என்று மறைந்தே இருந்தார். ஆனால் பத்மாசுரனின் கடும் தவத்தால் ஈஸ்வரனுக்கு பதிலாக சக்தி தோன்றி உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல், என் சந்தேகங்களை நீக்கு என்றான்.
உன் சந்தேகங்களை நீக்க ஈஸ்வரன் தான் பதில் சொல்ல முடியும் என்று சக்தி சொல்ல , அவன் அவரையே வரச்சொல் என்று கூறி மீண்டும் தவம் செய்தான். அதனால் வேறு வழியின்றி ஈஸ்வரனும் வேறு வழியின்றி காட்சி கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்க " நான் யார் தலை மீது கை வைத்தாலும் அவன் உடன் தீ பற்றி எறியவேண்டும் என்று கேட்டான்" ஈஸ்வரனும் வரம் அளித்தார். வரத்தை பரிசோதனை செய்ய நினைத்த பத்மாசுரன் ஈஸ்வரன் தலையிலே கை வக்க சென்றான். ஈஸ்வரன் ஓட பத்மாசுரனும் விடாமல் துரத்த இதனை பார்த்து கொண்டு இருந்த சக்தி அழகிய வடிவத்துடன் அசுரனில்  பின்னால் ஓடினாளாம். பின்னே யாரோ வருவதை அறிந்த அசுரன் சற்று நின்று திரும்பி பார்த்தானாம். அந்த சமயம் ஈஸ்வரன் அரளி மரத்தின் பின்னால்  மறைந்து வேர் வழியாக புகுந்து அரளி பூவாகி இருந்தார். அசுரன் திரும்பி பார்த்ததும் சக்தி மறைந்து போனாள்.அசுரனும் அங்கேயே ஒரு மரத்தின் கீழ் படுத்து கொண்டு எப்படியும் ஈஸ்வரன் தாம் உண்பதற்கு படி அளிக்க வரவேண்டும் அப்போது பார்த்து கொள்வோம் என எதுவும் உண்ணாமல் இருந்தான்.
இதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த மகாவிஷ்ணு முன்பு சக்தி அழகிய வடிவம் கொண்டு வந்தது போல் அதே வடிவம் கொண்டு உருமாறி பத்மாசுரனின் முன் தோன்றி னாராம்.அந்த அழகியை கண்டு பத்மாசுரன் அவள் மீது மோகம் கொண்டு தன்னை மணக்கும் படி கேட்டான், அதற்கு அவளும் சரி என்று கூற,அசுரன் தன் பின்னால் வரும்படி கூறினான்.அதற்கு அவள் எங்கே என்னை கூட்டி செல்கிறாய் என்று கேட்க அவன் என் தாய் பந்துக்களிடம் அழைத்து செல்கிறேன் என்றான்.சரி நான் உன் பின்னே வரவேண்டும் என்றால் நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து தர வேண்டும் என்றாள். அவன் என்ன சத்தியம் செய்து தர வேண்டும் என்று கேட்க அவள் "இதோ இங்கு ஓடும் ஆற்றில் மூழ்கி எழுந்து உன்கையால் இந்த பூமி மீது அடித்து உன் தலை மீது கை வைத்து எந்த நாளும் என்னை கை விட மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்" என்றாள். அதற்கு அசுரன் ஒப்புக்கொண்டு அப்படியே செய்ய எரிந்து மாய்ந்து போனான்.பின் ஈஸ்வரன் வெளிவர அழகிய பெண் வடிவத்தில் இருந்த மகாவிஷ்ணுவை கண்டதும் அவர்மீது சந்தோசம் உண்டாக ஈஸ்வரனிடமிருந்து விந்து ஒரு துளி வெளி வர அதனை மகாவிஷ்ணுவும்  ஈஸ்வரனும் சேர்ந்து எடுக்க அந்த விந்துஒரு குழந்தையாக மாறியது. அக்குழந்தையே கையப்பன் பின் மெய்யப்பன் பின் ஐயப்பன் பின் மணிகண்டன் என நான்கு பெயர்களை கொண்ட ஐயப்பன் தோன்றினான் . இதுவே ஐய்யப்பன் கதை .

வரம் கொடுத்த ஈஸ்வரன் தலையிலே கை வைப்பது போல நம்மை படைத்த சக்தியையே வேலை வாங்குவது பாவமல்லவா அதெல்லாம் எங்கு போகும் என்றார். ஒருவனுடைய கஷ்டத்தை போக்க காசு வாங்காமல் செய்யும் வரை ஒன்றும் பாதிக்காது. காசு வாங்கும் போது அதனை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக