சுவாமிகள் கூறிய கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவாமிகள் கூறிய கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூன், 2011

அர்ச்சுனனின் கர்வம்

ஒருமுறை அர்ச்சுனனுக்கு கர்வம் வந்து விட்டது .பீமன் கதாயுதத்தை எடுத்து சண்டை போடுகிறான் ,நானோ ஒரு அம்பு விட்டால் போதும் என்று நினைத்தான்.மகாவிஷ்ணு அர்ச்சுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார் .
அங்கு பெண்கள் ஒரு பூச்செடியில் மலர் பறிக்க பறிக்க மீண்டும் பூக்கள் பூத்து கொண்டே இருந்தன.அர்ச்சுனன் அப்பெண்களிடம் சென்று யாருக்காக பூஜை?எப்படி இந்த பூ பறிக்க பறிக்க பூத்து கொண்டே இருக்கிறது என்று கேட்க அவர்கள் பீமனை பூஜிக்க என்றனர் .

பின்பு பசியை தூண்டிவிட்டார் மகாவிஷ்ணு .இருவருக்கும் நல்ல பசி .ஒரு வீட்டின் முன் பசி என்று கேட்டனர் ,எதுவுமில்லை என்று விரட்டினார் அவ் வீடு பெண்மணி ,தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று விரட்டினாள்.அவளை பார்த்து மகரசியாய் இரு அம்மா என்றார்.
இன்னொரு வீட்டிற்க்கு வந்து பசி என்று கேட்க நன்கு உபசரித்து மோர் கொடுத்தார் அந்த வீட்டு அம்மா. மோர் முழுவதையும் மீதி வைக்காமல் குடித்து விட்டார் மகாவிஷ்ணு. மீண்டும் ஒரு சொம்பு அர்ச்சுனனுக்கு  கொடுத்தார்.பசி அடங்கியது.அப்போது அவ்வீட்டு பசுங்கன்றுதுள்ளி ஓடி  அருகிலுள்ள கிணற்றில்   விழுந்து விட்டது ,அதை கண்ட தாய்ப்பசுவும் உடன் கிணற்றில் விழுந்தது ,அந்த வீட்டு பெண்ணும் இதை பார்த்து கிணற்றில் விழுந்தார் , உடன் கணவனும் கிணற்றில் விழுந்து விட்டான் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவிடம் காப்பாற்றி இருக்கலாமே என்று கேட்க?போனால் போகட்டும் என்று மகாவிஷ்ணு கூறி பேசாமல் இருந்தார் .
பின்பு இருவரும் நடந்தார்கள் நடக்கும் போது ஒரு முள் மகாவிஷ்ணுவின் காலில் ஏறி விட்டது அதை எடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூற அவன் இவர் மீது கோபமுற்று மனதிற்குள் படுபாவி அவர்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கலாமே தண்ணீர் கூட கொடுக்காதவளை மகராசியை இரு என்றாய் ,பசி ஆத்தியவர்களை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே என்று முள்ளை வெளியே எடுப்பதற்கு பதில் நன்கு உள்ளே தள்ளி விட்டார். மகாவிஷ்ணு பின்பு முள்ளை எடுத்து  விட்டு நன்றாக உற்று பார் என்றார் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவின் காலில் முள் குத்திய இடத்தை பார்க்க கன்று,பசு,கணவன்,மனைவி யாவரும் பாதம் வழியே சொர்கத்திற்கு செல்வதை கண்டான் .பின்பு மகாவிஷ்ணுவிடம் மனிப்பு கேட்டான் .                      

சனி, 25 ஜூன், 2011

தீட்டு

  சக்தி ஒரு சமயம் சிவன் பேரில் சந்தேகம் கொண்டு சகல ஜீவராசிகளுக்கும் இவர் படி அளப்பது உண்மையா என்று அறிய ஒரு எறும்பை பிடித்து ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்துவிட்டு,சகல  ஜீவராசிகளுக்கும் உணவளித்து விட்டீரா என்று கேட்க, ஈஸ்வரன் ஆம் என்றார். இல்லை இந்த பெட்டிக்குள் உள்ள எறும்புக்கு நீர் உணவளிக்க வில்லை என்று சொல்லி திறந்து காட்ட அதில் இருந்த எறும்பு சிறு துண்டு உணவை சாப்பிட்டுகொண்டு இருப்பதை பார்த்த சக்தி அசந்து போனாள்.ஈஸ்வரனுக்கு சக்தி நம்மீதே சந்தேகம் கொண்டு விட்டாளே என எண்ணி கோபம் கொண்டு அவளை அடக்கி வைக்கவும்,தண்டனையாக தள்ளி வைக்கவும் எண்ணினார்.அப்போது சக்தி பயந்து போய் நிக்க அதிர்ச்சியினால் அவள் உடலில் இருந்து உதிரம் வெளியேறியது.இதனை கண்ட சக்திக்கு பயமும், அச்ச உணர்வும்,நாண உணர்வும் ஏற்பட்டு ஈஸ்வரனை விட்டு தள்ளி ஒதுங்கி நின்றாளாம்.மூன்று நாள் கழித்துதான் ஈஸ்வரனிடம் வந்தாளாம்      

புதன், 22 ஜூன், 2011

கொங்கனர்

கொங்கனர் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டார் .கல்யாணம் முடிக்க வழியில்லாமல் காவி தரித்து மலை காடுகளுக்கு சென்று சிவ சிவா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். காய் கனிகளை மட்டும் உண்டார். அப்படி இருக்கையில் ஒரு கொக்கு மரத்தின் மேல் இருந்து கீழே விழுந்தது. இவர் மேலே பார்க்கவும் கொக்கு கீழே  விழவும் சரியாக இருந்தது.உடனே இவர் தவ வலிமை தமக்கு கூடி விட்டது என்று நினைத்தார்.நம் பார்வை பட்டவுடன் கொக்கு கருகி கீழே விழுந்து விட்டது என்று நினைத்தார். அவருக்கு நான் என்ற நினைவு வந்தவுடன் பசித்தது .மலையில் இருந்து கீழே இறங்கினார்.ஒரு வீட்டிற்கு சென்று பசிக்கிறது என்று கேட்டார்.அந்த அம்மா அமருங்கள் சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று கூறி சமையல் செய்ய தொடங்கினார்.சிறிது தாமதமாக சமையல் ஆனது. இவருக்கு கோபம் வந்து விட்டது,அந்த அம்மாவை முறைத்து பார்த்தாராம். அந்த அம்மா கொங்கனரே நான் என்ன கொக்கா பொக்குன்னு போகிறதுக்கு என்று கேட்டார். நம்மை விட இந்த அம்மா விஷயம் தெரிந்தவர் என்று அங்கிருந்து கிளம்பி வேறு வீடிற்கு சென்று அங்கிருந்த ஆளிடம் பசிக்கிறது என்று கேட்டார்.அந்த ஆள் சிறிது நேரம் அமர்ந்திருங்கள் என்று கூறி ஒரு ஆட்டை வெளியே ஓட்டி   சென்றார்.ஆட்டை கசாப்பு போட்டு விற்று விட்டு வந்து சமையல் செய்து முதலில் கண் தெரியாத தாயாருக்கு ஊட்டி விட்டு பின்பு கொங்கனரை சாப்பிட அழைத்தார் ,இவருக்கு கோபம் வந்து முறைத்தார் அதற்கு அந்த ஆள் உங்களைப்போல் அம்மாவை நான் அனாதையாக விட்டு விடவில்லை அம்மாவை கவனித்துவிட்டுதான் எனக்கு மறுவேலை என்றார்.இவனுக்கும் நம்மை விட விஷயம் அதிகம் தெரிந்துள்ளது நாம் அம்மாவை விட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று வியந்தார்.பின்பு தாயிடம் வந்து தொண்டு செய்தார்.
பின்பு புலிப்பாணி மந்திரம் கற்றுகொண்டார்.பக்கத்தில் உள்ள ஆடு மாடு மேய்பவர்கள் எல்லாம் இவரை பார்த்து புலி வாயை கட்டிவிடுவார் என்று புகழ்ந்தனர்.
பின்பு ஆசிரமம் வைத்து சிஷ்யர்கள் சேர்ந்தனர்.சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுக்க எதுவும் தெரியவில்லை,ஏதாவது சொல்லவேண்டுமே என்று இந்த சரீரம் மக்களுக்கே சொந்தம்,மக்கள் சந்தோஷமாக இருக்க வழி செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.சிஷ்யர்களில் 32 அங்க லட்சணம் பொருந்தியவர்  போகர் அவரை பார்த்தாலே தொட வேண்டும் போல் இருக்கும் .ஆசிரமத்திற்கு வரும் பெண்கள் அவரை தொட்டு  பார்த்து சந்தோசம் அடைவார்கள்.மக்கள்கூட்டம் எல்லோரும் போகரை சுற்றியே இருக்கும் இதை பார்த்த மற்ற சிஷ்யர்கள் போகர் மீது வெறுப்புற்றும்,பொறாமையுற்றும் கொங்கனரிடம் புகார் செய்தனர் .கொங்கனர் போகரிடம் நீ தான் பெண் பிள்ளைகளோடு சிரித்து கொண்டு இருக்கிறாய்  நீ சம்சாரியா என்று கேட்க நீங்கள் தானே எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க சொன்னீர்கள் என்றார் .கொங்கனவர் மற்றவர்களின் பேச்சை கேட்டு போகரை நாட்டை விட்டே  வெளியேற சொன்னார் .அதன் பின்னர் போகர் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட்டார்.அங்கு சென்று இறந்தவர்களுக்கு எல்லாம் உயிர்ப்பு சக்தி கொடுத்தார் மற்ற எல்லா விஷயங்களையும் கற்று கொடுத்தார் .கொங்கனவருக்கு இறக்கும் சமத்தில் ஞானம் வந்தது மற்ற சிஷ்யர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் வெட்டி அருமையான சிஷ்யனை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டார்.எப்படி இருந்தாலும் போகர் தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றார் நம்பிக்கையான ஒரு சிஷ்யனை கூப்பிட்டு போகர் எங்கிருந்தாலும் அழைத்து வரச் சொன்னார் .சிஷ்யன் ஜப்பானுக்கு சென்று எல்லா மருந்தும் என்னிடம் உள்ளது என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நாட்டினுள் சென்றார் .ஒருவன் கையில் அடிபட்டு ரத்தம் வர அதற்கு மருந்து கேட்க இதற்கு மட்டும் இல்லை என்று கூற ,அவரை ராஜாவிடம் கூட்டி சென்றனர்.போகருக்கு ஞான திருஷ்டி மூலம் விவரம் தெரிய வந்தது.தானே தண்டனை கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை அனுப்பி விட்டார் . உப்பு சாப்பிட்ட இடத்தில் துரோகம் செய்ய கூடாது என்று மாறு வேடமிட்டு இந்தியா வந்தார்கள் .பின்பு திருப்பதியில் கொங்கனவரை போகர்  அடக்கம் செய்தார்.       
                    

பகாசூரன்

பகாசூரன் மிகுந்த  அட்டகாசம் செய்து வந்தான்.ஊர் மக்கள் கூடி வீட்டில் தினம் ஒருவர் மாட்டு வண்டியில் ஆடு கோழி அடித்து சமையல் செய்து எடுத்து சென்று கொடுத்து வர வேண்டும் என்று முடிவு செய்தனர் . சாப்பாடு எடுத்து செல்லும் ஆளையும் சாப்பிட்டு விடுவான் பகாசூரன்.ஒரு வீட்டில் பிள்ளையே இல்லை யாரை அனுப்புவது எந்ரூ அழுதார் ஒரு மூதாட்டியார் .மகாவிஷ்ணு பீமனை அனுப்பினார் .பீமன் மூதாட்டி வீட்டில் நன்கு சாப்பிட்டு  விட்டு  வண்டியில் சாப்பாடு எடுத்து சென்றான் .பீமன் சென்ற நேரம் பாகசூரன் வெளியே சென்று இருந்தான் . பீமனுக்கு பசி வந்து விட்டது வண்டியில் எடுத்து வந்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தான் . அந்த நேரம் பகாசூரன் வந்து நமக்கு வந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவது  என்று சத்தம் போட்டு மிரட்டினான் .இருவரம் பலத்த சண்டை போட்டனர் . பீமன் கதாயுதத்தால் பகாசூரனை வீழ்த்தினார் .     

நூறு சக்திகள்

மொத்தம் நூறு சக்திகள் .ஒவ்வொரு சக்தியும்[ 99 சக்தியும் ]  சிவனிடம் அவர்களுக்கு வேண்டிய வரம் பெற்றார்களாம்.இறுதியாக உனக்கு என்ன வரம் வேண்டும் என்று சிவன் கமலதரணியை பார்த்து கேட்டாராம்.அதற்கு அந்த அம்மன் நான் யாரை கண் திறந்து பார்கிறேனோ, அவர்களுக்கு எந்த குறையும் இருக்கக்கூடாது என்று கேட்டாராம்.அதற்கு சிவன் அது எப்படி நல்லது கெட்டது கலந்து தானே உலகம் இந்த வரத்தை என்னால் கொடுக்க இயலாது துறவிகளால்தான் முடியும், எனவே துறவியையே கேள் என்று கூறிவிட்டார். கமலதரணீ அம்மன் துறவியை நினைத்து தவம் இருந்தார்களாம். அப்போது முன்று துறவிகள் வந்தார்களாம், அவர்களுக்கு விருந்து பரிமாற செல்கையில் துறவிக்கு முன் அச்சத்ததைதவிர்த்து வர  வேண்டும் .எனவே ஆடை இல்லாமல் வா  என்று கூறினார்களாம். அந்த அம்மையார் சிவனிடம்  இவர்கள் மூன்று பேர் கண்ணுக்கு மட்டும் நான் தெரியவேண்டும் மற்றவர் யாருக்கும் தெரியக்கூடாது என வரம் கேட்டு பின் அவர்களுக்கு பரிமாறி வரத்தை பெற்றார்களாம் கமலதரணீ அம்மன்    [ நிர்வாண அம்மன் ].  
   
  

புதன், 15 ஜூன், 2011

முருகர்

சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகர் தோன்றினார் .
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் முதலில் விநாயகரை பிறப்பித்தனர் . ஈஸ்வரி விநாயகரை கொஞ்சிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரர் விநாயகரை தூக்க ஈஸ்வரி மறுத்தார். அப்போது சிவன் இன்னொரு பிள்ளையும் இருந்தால் இருவரும் கொஞ்சலாமே என்று முருகனை பிறப்பித்தார் .முருகருக்கு ஐந்து வயது ஆகையில் எல்லா கலைகளிலும் தேர்ச்சிபெற்றார்.சிவனிடம் எல்லா வரங்களையும் பெற்றார்.பிள்ளையார் எதுவும் கேட்கவில்லை எல்லா வரங்களையும் தம்பிக்கே கொடுத்துவிடுங்கள் என்றார்.முருகர் யார் சண்டைக்கு வந்தாலும் அடித்து போட்டு விடுவார் .ஒருமுறை சிவன் துரு துரு என்று இருக்கிறானே அமைதியான பிள்ளையை பிறப்பித்து இருக்கலாமோ என்று நினைத்தார்.முருகர் பேசாமல்  ஊமை   போல் ஆகிவிட்டார் .பார்வதிக்கு இது தெரிந்தவுடன் ஏன் அது போல் நினைத்தீர்கள்  என்று    கேட்க சிவன் தவறாக நினைத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டார் .
குழந்தையிலே அழித்துவிடலாம் என்று அசுரர்கள் திட்டம் போட்டனர் .முருகன் தொட்டிலிலே இருக்கும் பொழுது ஆராரோ நீ யாரோ நான் யாரோ வயது வாலிபன் ஆனேன் அம்மா என்றார் .உடனே வயது வாலிபன் தோற்றம் அடைந்தார் .பின்பு ஆராரோ நீ யாரோ நான் யாரோ ஏழு அடுக்கு மாளிகையை கண்டேன் அம்மா என்றார் உடனே ஏழு அடுக்கு மாளிகை தோன்றியது .அடுத்து  ஆராரோ நீ யாரோ நான் யாரோ கிழவனாய் ஆனேன் அம்மா என்றதும் கிழவனாய் காட்சி அளித்தார் .( அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கனிவாய் மொழி பேசி ...அதனால்தான் தொட்டிலில் உள்ள குழந்தைகளை ஆராரோ என்று தாலட்டுகிறோம் ) பின்பு முருகர் அசுரர்களை வதம் செய்தார்  

செவ்வாய், 14 ஜூன், 2011

குசேலர்

புல்லில் வரும் புல்லரிசியை தான் அவல் அரிசியாக குசேலர் கிருஷ்ணரிடம் செல்லும் பொது எடுத்து சென்றார் .கிருஷ்ணர் எல்லா இடத்திலும் இருக்கிறார் புல்,பூண்டு ,புழு ,பூச்சியிலும் கிருஷ்ணன் இருக்கிறார் .கிருஷ்ணன் இரண்டு பிடி அவல் சாப்பிட குசேலனுக்கு செல்வம் சேர்ந்தது .இலட்சுமி மூன்றாவது பிடியை சாப்பிட விடவில்லை தடுத்து விட்டார் .
அன்பான பொருள் புல்லரிசி  அவல்.
அன்பான பொருள்   அளவோடு இருக்க வேண்டும் அதிகம் கொடுத்தால் ( செல்வம் ) அகம்பாவம் வரும்.  

கிருஷ்ணன் பிறந்த கதை

யசோதைக்கு ஆண் குழந்தை பிறந்தால் அண்ணன் கம்சன் அழிப்பதாக இருந்தது.பிறக்கும் ஆண் குழந்தையை மட்டும் அழிப்பதாக இருந்தவன்  பிறக்கும் பெண் குழந்தைகளையும் கொன்று விட்டான் .   யசோதைக்கு( கிருஷ்ணன் ) ஆண் குழந்தை பிறக்கையில் ஈஸ்வரியே பெண் குழந்தையாக மாறி யாதவாள் குடும்பத்தில் மாற்ற முடிவு செய்தனர் .யசோதையின் அண்ணன் காவல் பலமாக போட்டு இருந்தான் கருங்கழுதை, கரு நாய், கரும் பூனை எல்லாம் காவலுக்கு இருந்தது .ஈஸ்வரன் கருங்கழுதையின் காலைப் பிடித்துகொண்டு 15 நிமிடங்கள் கத்தாமல் இரு என்று கெஞ்சினார் .குழந்தைகளை மாற்றி விட்டனர் . பெண் குழந்தையை தூக்கி வெட்டும் பொழுது குழந்தை மேலே சென்று உன்னை அழிக்க கிருஷ்ணன் தோன்றி விட்டான் என்று கூறி மறைந்தது        

பக்த ராமதாஸ்

பக்த ராமதாஸ் 32 இலட்சணங்கள் பொருந்தியவர்.தெய்வப்பிறவி .அவருக்கு 36  கூத்தியார்கள் இருந்தனர் .30 பேர் பணத்தாசை பிடித்தவர்கள் ,மீதி ஆறு பேர் நல்லவர்கள் .முப்பது பேரும் அவரிடமுள்ள சொத்துக்களை எல்லாம் வாங்கிவிட்டனர்,எல்லாம் வாங்கிய பிறகும் ஆசை போக வில்லை. அவரது மனைவியின் தோட்டை கேட்டனர் . அவரும் வாங்கி வருகிறேன் என்று கூறினார் .மனைவியிடம் தோட்டை கேட்க அவர் தர மறுத்துவிட்டார் இன்று தோட்டை கேட்பார்கள் நாளை தாலியையும் கேட்பார்கள் என்று கூறினார் மனைவி.இறுதியில் நான் தருகிறேன் ஆனால் ஒரு நிபந்தனை தோட்டை அவளிடம் கொடுக்கும் போது நிர்வாணமாக வந்து கவுட்டுக்குள் கையை விட்டு வாங்க வேண்டும் என்று என்று சொல்லுங்கள் என்றார் .அவரும் தோட்டை கேட்டவளிடம் இது போல் கூற அவளும் அதே போல் வந்து வாங்க ச்சே நம் மனைவியிடம் இருப்பது தானே இவளிடம் உள்ளது இதற்கு ஆசைப்பட்டா நாம் நம் சொத்து முழுவதும் இழந்தோம் என்று வருத்தப்பட்டார் .அன்று முதல் ராம ராம என்று சொலிக்கொண்டு இருந்தார் .
அந்த நாட்டு மன்னன்  இரண்டு ஜில்லா கந்தாயம் பாத்து வருடம் வரிப்பணம் ராமதாசிடம் கொடுக்க வேண்டும் யாரு எதுவும் கேட்க கூடாது என்றான் .வரும் பணத்தை எல்லாம் நகைகளாக மாற்றி ராமருக்கும் சீதைக்கும் போடு அழகு பார்த்தார் .அரசன் பணம் கேட்க   பணம் இல்லை என்றார் .அரசன் ராமதாசை சிறையில் அடைத்தான். 45 நாட்கள் சிறையில் இருந்தார் ராமர் லட்சுமனுருக்குதான்  கண்  தெரியவில்லை என்றால் சீதைக்கு கூடவா கண் தெரியவில்லை என்றார் .அன்று நாமம் போட்ட ஒருவர் நகை மூட்டையை மன்னரிடம் கொடுத்து மறைந்தார் .மன்னர் இது குறித்து ராமதாசிடம் கூறி விடுதலை செய்தார் .நான் பாவி எனக்கு தரிசனம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்பட்டார் .ஏன் இந்த சிறைவாசம் என்று ராமனிடம் கேட்க போனஜென்மத்தில் கிளி குஞ்சை தாயின் கூண்டில் இருந்து ஏழு நாட்கள் பிரித்துவிட்டாய் அதனால் தான் கஷ்டப்பட்டது என்றார் .             
 

பூதம் புதையல் காத்த கதை

பெரிய பணக்காரன் ஒரு வீடு கட்டினான் ,நான்கு அறைகள் போட்டு மெத்தை மேல் எழுப்பி அதில் யாருக்கும் தெரியாமல் மிளகாய் பவுன் சவரன்கள்  வைத்து மூடிவிட்டான்.பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று இருந்தவன் திடீரென்று இறந்துவிட்டான்.நான்கு வருடங்கள் ஆனது.இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .பிள்ளைகள் பயந்து வீட்டை வாடகைக்கு விட்டனர் .தொடர்ந்து இரவு நேரங்களில்  புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது.வாடகைக்கு வந்தவர்களும் பயந்து வீட்டை காலி செய்தனர் . வீட்டைவந்த விலைக்கு விற்றுவிட்டு போய்விடலாம் இந்த வீடே வேண்டாம் என்று முடிவு செய்து  விற்க முயன்றும் யாரும் வாங்க வில்லை.வீட்டருகில் உள்ள ஏரிக்கரையில் ஒருவன் டீக்கடை வைத்து இருந்தான் மழைக்காலம் வந்தவுடன் அந்த வீட்டின் தாழ்வாரத்தில் கடை வைத்து    கொள்கிறேன் என்று கேட்க தாரளமாக வைத்துகொள் என்று கூறி வீட்டு சாவியை   கொடுத்தனர் .இரவு நேரம் வீட்டினுள் படுக்கும் பொது புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று குரல் கேட்டது .டீக்கடைக்காரன் மறுநாள் நம் சுவாமிகளை போல் உள்ளவரிடம் சென்று இது குறித்து கூற ,அவர் டீக்கடைக்காரனுக்கு தைரியம் கூறி இரவு நேரத்தில் சத்தம் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று  கேட்கும் போது  நீ போடு புடிசிக்கிறேன் என்று கூறி முந்தி ஏந்து என்று கூறி அவன் கையில் அவருடைய நகத்தை கொடுத்தார் .அன்று இரவு அவன் சுவாமிகளை நினைத்து கொண்டு படுத்து இருந்தான் இரவு நேரத்தில் புடிச்சிக்கோ புடிச்சிக்கோ என்று சத்தம்  கேட்கையில் சுவாமிகளை நினைத்துகொண்டு தைரியமாக போடு புடித்து கொள்கிறேன் என்று கூற மேல் இருந்த சுவர் வெடித்து தங்க காசுகள் கீழே விழுந்தது .அதை அவன் யாருக்கும் தெரியாமல் அப்படியே வைத்து ஒரு வருடம் கழித்து அந்த வீட்டையே வாங்கி நன்கு தொழில் செய்தும்  தான தருமங்கள் செய்தும் நன்கு வாழ்ந்தான் .    

திங்கள், 13 ஜூன், 2011

இடும்பன்

இடும்பாசூரனுக்கும் முருகனுக்கும் சண்டை வந்தது .சண்டை நீடித்து கொண்டே இருந்தது.முடிவது போல் தெரியவில்லை .இடும்பன் காலால் தூக்கி அடிக்க முருகை மேலே சென்று தலைகீழாக விழ அப்போது மகாவிஷ்ணு நெற்றியிலே நீறு  இருக்க உனக்கு நினைவு தப்பி போனதென்ன உச்சியிலே முருகையா சடையிருக்க உள்ளங்கையில் பழனியப்பா உனக்கு புத்தி தடுமாறி போனதென்ன என்றார் .அப்போதுதான் முருகருக்கு அன்னை கொடுத்த வேல் ஞாபகம் வந்தது .இடும்பன் உட்கார்ந்து இருந்த மலையை நோக்கி வேலுடன் பாய நடுவில் புகுந்து மகாவிஷ்ணு சமாதானம் செய்தார் .
இடும்பனுக்கு தேங்காய் உடைத்துவிட்டுத்தான் பழனி கோயிலுக்கு செல்ல வேண்டும் .

ஆஞ்சநேயர்

ஆஞ்சனேயரிடம் சஞ்சீவி மலையை எடுத்துவர சொன்னார் மகாவிஷ்ணு .முருகருக்கு கொடுத்ததுபோல் எனக்கு வரம் தர வேண்டும் என்று ஆஞ்சநேயர் கேட்க பொய் வரம் கொடுத்தார் மகாவிஷ்ணு .ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை எடுத்து வருகையில் சிற்றரசன் ஒருவர் காலமாகி விட்டார் வரம் உள்ளதே என்று ஆஞ்சநேயர் மந்திரம் கூறி உயிர்ப்பு சக்தி கொடுத்து மன்னரை எழுப்பினார்.பொய் வரம் ஆனதால் ஆஞ்சநேயர் சக்தி முழுவதும் போய் விட்டது.பின்பு அரசியிடம் சென்று புருஷன் வேண்டுமா குழந்தை வேண்டுமா என்று கேட்க அரசி புருஷன் வேண்டும் என்று கூற குழந்தையிடம் இருந்து இழந்த சக்தியை பெற்றார் .

வெள்ளி, 10 ஜூன், 2011

குருடனுக்கு கண் கிடைத்த கதை

 கண்ணன் [ மகாவிஷ்ணு ]  வெண்ணை  திருடுகையில் யார் திருடர்கள் என்று கேட்டால் மாமியார் இடம் மருமகள் என்றும் மருமகளிடம் மாமியார் என்றும்  கூறி தப்பித்துகொள்வார் .ஒரு நாள் எல்லோரும்  சேர்ந்து  திருடனை தேடுகயில்    அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடிக்கொண்டு இருந்தார் ஒரு அறுவது  வயதான கிழவர்  ஒரு கூடையின்  மேல் அமர்ந்து கொண்டிருந்தார்  ஓடி வந்த    கண்ணன் கிழவரை  எழுப்பி கூடைக்குள்சிறிது நேரம்  ஒளிந்து கொள்வதாக கூறி கூடைக்குள் ஒளிந்து கொண்டு  கிழவரை  மேலே அமர்ந்து கொள்ள சொன்னார். அவரும் சம்மதித்தார் .  தேடிவந்தவர்கள் திருடனை காணவில்லை என்று சென்றுவிட்டனர் . கிழவருக்கு கண் தெரியவில்லை என்றாலும் ஞானக்கண் உண்டு .உள்ளே ஒளிந்து கொண்டு இருப்பது கண்ணன் என்பதை அறிந்தார் .கூடையை திற என்று கண்ணன்  சொல்ல கிழவர் கண்பார்வை கொடுத்தால் தான் கூடையை திறப்பேன் என்றார் .கண்ணபிரானும் கண் பார்வையையும் ஆசியையும் கொடுத்தார் .










   

புலிக்கு குரு பூனை

முதன்முதலில் புலிக்கு வேட்டை ஆடத் தெரியாது .காட்டு பூனை நன்கு வேட்டை ஆடும் .புலி பூனையிடம் சென்று எனக்கு வேட்டை ஆட கற்றுகொடு என்று கெஞ்சியது . பூனையும் எப்படி பதுங்கவது எப்படி  பாய்வது  என்று கற்றுகொடுத்தது .தினமும் புலி வேட்டையாடி சாப்பிட்டது .ஒரு நாள் புலிக்கு இரை எங்கு  தேடியும் கிடைக்கவில்லை பூனையையே அடிக்க வந்தது ( காட்டு பூனை கொழு கொழு என்று இருக்கும் ) உடனே பூனை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது ,நீ இப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும் அதனால்தான் உனக்கு மரம் ஏறும் வித்தையை கற்றுகொடுக்கவில்லை .நான் பேண்ட குண்டியை கூட நீ பார்க்க முடியாது என்று மரத்தின் மீது ஏறி விட்டது .

பூனை மலம் கழித்தவுடன் மண் போட்டு மூடிவிடும் .பூனை சாப்பிட்டவுடன் நாக்கினால் சுத்தம் செய்யும் புலிக்கு அது போல் செய்ய தெரியாது .

பூனையை அடித்தால் பாவம் ,சாபம் கொடுக்கும் .
வீட்டுப்பால் சாப்பிடும் போது கண்ணை திறந்து குடிக்கும்,திருட்டுப்பால் குடிக்கும் போது( கண்ணை திறந்து கொண்டு குடித்தால் பாவம் வரும் என்று ) கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்             

இந்து முஸ்லீம்

முன்பு இந்துக்களும் முஸ்லீம்களும் ஒன்றாகவே இருந்தனர் .அம்மியும் குழவியும் வைத்து வழிபட்டு வந்தனர் .பின்பு இருவருக்கும்அம்மி குழவி யாருக்கு சொந்தம் என்று சண்டை வந்தது . அப்போது மருள் வந்து குறி சொன்னார்கள் அதில் அம்மியை ஒரு ஆளும் குழவியை ஒரு ஆளும் தலையில் தூக்கிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தூக்கி கொண்டு செல்ல வேண்டும் எங்கும் கீழே வைக்க கூடாது .இருவரும் தூக்கி செல்லும் போது இருவருக்கும் வயிற்றை கலக்கியது என்ன செய்வது என்று கேட்க மருளில் கீழே வைத்து விட்டு போய் வாருங்கள் மூன்று முறை குரல் கொடுப்பேன் அதற்குள் வந்து தூக்கி கொள்ள வேண்டும் தாமதம் செய்பவனுக்கு சொந்தம் இல்லை என்றது .குரல் கிடைத்தவுடன் முஸ்லீம் கால் கழுவாமல் ஓடி வந்து தூக்கி கொண்டான் .இந்து தண்ணீர் தேடி ஓடி கழுவி வர தாமதம் ஆகி விட்டது .அம்மியும் குழவியும் முஸ்லீமுக்கே சொந்தமாகி விட்டது .இந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் .பிறகு நம்பி உடனே வந்தவனுக்கு உருவ வழிபாடு தேவை இல்லை என்று கூறி அம்மியும் குழவியும் இந்துவுக்கே கொடுத்துவிட சொன்னார்கள் .     
( முஸ்லீமிடம் ஒன்று கூறினால் அதை நம்பி அப்படியே செய்வார்கள் இந்து நம்பமாட்டார்கள் முஸ்லீமுக்கு இருக்கும் அறிவு இந்துக்களுக்கு இல்லை என்று கூறுவார் சுவாமிகள் )

புதன், 1 ஜூன், 2011

ஆரவல்லி சூரவல்லி

ஆரவல்லி சூரவல்லிஇருவரும் ஆண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தனர் .
இருவரும் சாகா வரம் பெற்றவர்கள் .அவர்களுக்கு ஒரே பெண் பல்வரிசை அவள் பெயர் .அவளை திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகளை விதித்தார்கள் .ஒரு பெரிய இரும்பு குண்டை கையாலே தேய்த்து கரைக்க வேண்டும் ,இரும்பு கம்பத்தை ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் .இப் போட்டிகளில் ஜெயித்தால் திருமணம் இல்லையென்றால் அடிமையாக இருக்க வேண்டும் .எவராலும் ஜெயிக்க முடியவில்லை எல்லோரும் அடிமையாகினர் .பீமன் போட்டிக்கு சென்றான் எல்லாவற்றிலும் ஜெயித்தான் ஆனால் இரும்பு கம்பத்தை  ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க முடியவில்லை இரண்டு துண்டுகள்தான் ஆகியது .பீமனையும் சிறையில் அடைத்து விட்டனர் .மகாவிஷ்ணு பெருசாளியாகப்  போய் சிறையில் இருந்து பீமனை விடுவித்து வந்தார் . தர்மர் இதை அறிந்து ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் காதிற்கு வந்தோம் பீமனை ஜெயிலில் விட்டு விட்டு வாருங்கள்   போட்டியில் ஜெயிக்க பாருங்கள் என்றார் .மகாவிஷ்ணுவான கண்ணபிரான் சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அந்த பெண்ணின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அவன் துரியோதனின் தங்கையின் பிள்ளை அவர்    தருமரிடம்   பாசமாக  இருப்பவர் தகவல் கூறி அழைத்துவரச் சொன்னார்கள் பின்பு அவனை அழைத்து கொண்டு துறவியிடம் சென்று ஆசி பெற்று முட்டை வாங்கி கொண்டு போட்டிக்கு அனுப்பினார்கள் . அல்லி முத்துக்கு இரும்பு கம்பத்தை வெட்ட மகாவிஷ்ணு சொல்லி கொடுத்தார் .கம்பத்தை வெட்டும் போது முதலில் கம்பத்தை U போல் வளைத்து பின்பு வெட்ட சொன்னார் .அல்லிமுத்து எல்லா போட்டிகளிலும் ஜெயித்துவிட்டான்.பேசியபடியே பெண்ணை மணம் முடித்து   எங்கள் ராஜியத்திலேயே இரு என்றனர் .அல்லிமுத்து  உங்கள் ராஜ்யமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்றான். நம்மை மதிக்கவில்லையே என்று பெண்ணிடம் விஷம் கலந்த பலகாரத்தை கொடுத்து உன் கணவனுக்கு மட்டும் ஊருக்கு செல்லும் வழியில் கொடு என்றனர் பெண்ணுக்கு பலகாரத்தில் விஷம் உள்ளது தெரியாது .வழியில் தின்ன கொடுத்தாள் தின்னவுடன் அவன் உடம்பு நீலம் பாய்ந்தது. அதைபார்த்து பல்வரிசை கதறி அழுதாள்.துறவியிடம் வரம் பெற்றதால் அல்லிமுத்து இறக்கவில்லை .ஆனால் அவன் நான் இறந்ததற்கு சமம் என்றான் அப்போது பாடிய பாடல் தான் இப்போது சுடுகாட்டிற்கு செல்லும்போது வெட்டியான் பாடுவது . இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் கோபமடைந்தான் அவர்களை வீழ்த்த சென்றான் . ஆரவல்லியும் சூரவல்லியும் சாகாவரம் பெற்றவர்கள் அர்ச்சுனன் பாணம் விட்டால்தான் இறப்பார்கள் .அர்ச்சுனன் வருவதை கேள்விப்பட்டு இருவரும் நாட்டை விட்டு ஓடிவிட்டனர் பின் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்து    கொண்டனர் .அவர்களின் ஆவி திருமூர்த்தி மலையில் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டு இருந்தது. மரமே நடந்து வருமாம் அப்படி சக்தி அவர்களுக்கு .திருமூர்த்தி மலையில் யாரும் ஏற முடியாது ஏறியவர்கள் திரும்பியது இல்லை .அப்படி இருக்கும் பொழுது நம் சுவாமிகள் திருமூர்த்தி மலைக்கு மேல்  செல்லும் போது போகவேண்டாம் என்று எல்லோரும் தடுத்தார்கள்.சுவாமிகள் மலை மேலே ஏறிப் போய் படுத்து கொண்டார். மரங்களின்  மீது நெருப்பும் பெரிய சத்தங்களும் கேட்டது சுவாமிகள் அமைதியாக இருந்தார் .ஆவிகளின் ஆரவாரத்தை அடக்கினார் .                            

வியாழன், 21 ஏப்ரல், 2011

சாதுவின் மகத்துவம்

உலகை ரட்சிக்கும் மகாவிஷ்ணு ஈஸ்வரரிடம் தன்னிலும் அதிக மகத்துவம் உடையவர் யாராகிலும் உண்டா என கர்வத்தோடு  கேட்டார். சாதுவின் பெருமை அறியாதவர்கள் உண்டா என ஈஸ்வரர் பதில் சொன்னார்.அப்படி என்றால் காட்டு என்றார்  விஷ்ணு.அதற்கு ஈஸ்வரர் ஒரு காட்டில் ஒரு பாழ் அடைந்த கிணற்றில்  ஒரு ஓணான் இருக்கிறது   அதனை கேள் என்றார்.விஷ்ணு ஓணானை கேட்டதற்கு விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து இறந்தது .சில காலம் கழித்து விஷ்ணு ஈஸ்வரரிடம் ஓணான் இறந்ததை சொன்னார்.மற்றொரு காட்டில் மரத்தின் மேல் ஓர் அன்னபட்சி உட்கார்ந்து இருக்கும் அதை கேள் என்றார். விஷ்ணு அன்னபட்சியை  கேட்க அன்னபட்சி விஷ்ணுவின் கால்களில் விழுந்து இறந்தது. விஷ்ணு கோபம் அடைந்து இனி இந்த பூலோகத்தை ஏறத்சிக்க மாட்டேன் என்றார் . ஈஸ்வரர் இந்த உலகத்தில் நீதி நேர்மை தர்மம் தவறாத அரசன் இருக்கிறானா என்று கேட்க மகாவிஷ்ணு இருக்கிறார் என்று சொன்னார்.அரசனுக்கு என்ன குறை என்று கேட்டார்.பிள்ளை இல்லாத குறை மட்டும் என்றார் மகாவிஷ்ணு . அப்படியானால்   அந்த அரசனுக்கு குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை கேள் என்றார். குழந்தை இறந்தால் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று மகாவிஷ்ணு கூற ஈசன் குழந்தை சாகாது நீ பொய் கேள் என்றார். விஷ்ணு சந்நியாசி வேடத்தில் அந்த அரசனிடத்தில் குழந்தை பேசும் என்றார். பிறந்த குழந்தையை தங்க  தாம்பாளத்தில் தாதியர்கள் ஏந்திவர விஷ்ணு குழந்தையை பார்த்து சாதுவின் மகிமை எத்தன்மையது என்று கேட்க? குழந்தை நான் ஓணான் ஆக இருந்தபோது சிவ சிவா என்று உச்சரித்து கொண்டு இருந்தபோது  நீங்கள் வந்து கேள்வி கேட்டீர்கள் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன், அடுத்து அன்னபட்சியின் உள்ளே சென்றேன் மறுபடியும் நீங்கள் சாதுவின் மகத்துவம் என்ன என்று கேட்டதற்கு மறுபடியும் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன்.பிறகு இப்போது அரசனின் குழந்தையில் புகுந்து பிறந்தேன் . நான் இப்பொழுது உலகத்துக்கெல்லாம் குழந்தை . இதுதான் சாதுவின் மகத்துவம் என்றது .              

செவ்வாய், 1 மார்ச், 2011

மதனகாமப்பூ

   ஒரு ராஜாவும் மந்திரியும் ஒரு நாட்டில் இருந்தார்கள் இருவருக்கும் ஒரே வயது நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்தது .
இருவரும் பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று சத்தியம் செய்து கொண்டனர் .சிறிது காலம் கழித்து ராஜாவிற்கு மூன்று பெண்களும் மந்திரிக்கு ஆண் குழந்தை ஆமையாக பிறந்தது.
குழந்தைகள் பருவமடைந்தார்கள்.ஏற்கனவே செய்த சத்தியத்தின்படி மந்திரி ராஜாவிடம் பெண் கேட்டான்.அரசன் தருகிறேன் என்று ஏமாற்றி இரு பெண்களை வேறு இடத்தில் மனம் செய்து கொடுத்தான் இறுதியாக ஏமாற்ற என்ன செய்யலாம்  ஆமைக்கா  பெண் கொடுப்பது என்று இருந்தான்.இளவரசி திட்டம் தீட்டினாள் மந்திரி மகன் மதனகாமப்பூ எடுத்து வந்தால் மணப்பதாக கூறினாள்  

மதனகாமப்பூ  கடலில் உள்ள ஏழு கன்னிகளில் இளையவளிடம் உள்ள பூ யாரும் அங்கே செல்ல முடியாது அப்படியே போனாலும் உயிரோடு திரும்பி வரமுடியாது எனவே அவ்வாறு கூறினாள்.  மந்திரி மகன் இதை கேட்டவுடன் மணந்தால் ராஜாவின் மகளை மணப்பது இல்லையேல் மரணமடைவது என்று  முடிவு செய்தான்.தந்தையிடம் என்னை கடலில் போட்டு விடுங்கள் நான் மதனகாமப்பூவுடன் வருகிறேன் என்றான் . மந்திரி கவலையுடன் கடலில் சென்று போட்டு வந்தான் .

ஆமை நீண்ட நாட்கள் கடலில் நீந்தியது.ஒருநாள் சூரியனை அடைந்து சூரியனுக்கு தெரியாமல் அவனது ஆயுதத்தை மறைத்து வைத்து விட்டது .சூரியன் ஆயுதத்தை கேட்க எனக்கு தேவையானதை கொடுத்து விட்டாயானால் தருகிறேன் என்றது ஆமை .என்ன வேண்டும் என்று சூரியன் கேட்க தன் வாழ்கையும் மதனகாமப்பூ பற்றியும் ஆமை  சூரியனிடம் கூறியது
அதை கேட்ட சூரியன் அது என்னிடம் இல்லை ஏழு கன்னிகள் இருக்குமிடத்தில் இளைய கன்னியிடம் உள்ளது உனக்கு எனது சக்தியை தருகிறேன் நீ நினைத்தபோது மனித ரூபத்தை அடையலாம் என் கவசங்களையும் நீயே வைத்துகொள் என்று சூரியன் கூறியது மேலும் மதனகாமப்பூ எடுக்கும் உபாயத்தை கூறியது காலையில் ஏழு கன்னிகள் குளிக்கும் போது நீ அவர்களுடைய துணிகள் அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடு அவர்கள் என்ன பயமுறுத்தினாலும் கொடுக்காதே இறுதியில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் மதனகாமப்பூ வேண்டும் என்று கேள் ஏன் என்று கேட்டால் உனது கதையை கூறு என்றது சூரியன் அவ்வாறே செய்தது ஆமை .அச்சத்தில் வெளியே வர இயலாத கன்னிகள் மதனகாமப்பூ கொடுப்பதாக சத்தியம் செய்தபின் ஆமை துணிகளை கொடுத்தது .பின்பு அவர்களிடம் மதனகாமப்பூ பெற்று மேலும் பல வரங்களையும் பெற்று வந்தது .
ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள   மரப் பொந்தில் சூரியன் கொடுத்த கவசங்களை மறைத்து வைத்து நாட்டுக்குள் வந்தது .மதனகாமப்பூ கையில் இருந்ததால் நீண்ட தூரத்திற்கு வாசனை கமகம என்று வந்தது. பேசியபடியே மன்னன் பெண்ணை அழுதுகொண்டே மணம் முடித்து வைத்தான்.மந்திரிகுமாரன் யாருமில்லாதபோது உருமாறி வாழ்ந்து கொண்டு இருந்தான் .காலையில்  உருமாறி குளியல் அறைக்கு சென்று  சுடுதண்ணீரில் நன்கு குளிப்பான்.
சிலநாட்கள் கழித்து பக்கத்துக்கு நாட்டரசன் படை எடுத்து வந்தான் இரு மருமகன்களும் சண்டையிட்டு தோற்று திரும்பினர் அப்போது மந்திரி குமாரன் மரத்தின் பின் மறைந்து தோற்று திரும்பியவர்களையும் படையினரையும் பார்த்து குரல் கொடுத்தான் மற்றவர்கள் அசரீரி என்று நினைத்தனர் .அப்போது அவன் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் உங்கள் காதுகளின் முனைகளை அறுத்துகொண்டால் ஜெயிப்பீர்கள் என்றான் அனைவரும் அப்படி செய்ய மந்திரி குமாரன் உருமாறி போரிட்டு நாட்டை மீட்டான்.ஒருநாள் மந்திரிகுமாரன் மனைவி சதிதிட்டம் தீட்டினாள் குளியல் அறையில் அவன் குளிக்கும் போது நெருப்பு வைத்துவிட்டாள்.    சூரியனிடம் வரம் பெற்றதால் நெருப்பு ஒன்றும் செய்யவில்லை அப்போதுதான் அவன் தன்  அழகான சொருபத்தை காட்டினான் .
மனைவி செய்த தவறுக்கு மனமார மனிப்பு கேட்க மந்திரி குமாரன் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டான் . 
            .
       

திருவண்ணாமலை மகத்துவம்

வல்லாளன் என்ற அரசன் ஆண்டுவரும் காலத்தில் அண்ணாசாமி என்ற சாமியார் எப்பொழுதும் மலையை சுற்றிக்கொண்டு இருப்பாராம். (வல்லாளன் கஞ்சன்,குழந்தை பாக்கியம் இல்லை )  சுவாமிகளை பார்த்து ஏன் சுற்றுகிறீர்கள் என்று கேட்க கடவுளை சுற்றி வருகிறேன் என்றார் சாமியார்.எனக்கு காட்டுகிறீர்களா என்றான் அரசன், நீயும் தொடர்ந்து சுற்று கடவுள் காட்சி அளிப்பார்கள் என்று சுவாமிகள் கூறினார்.அரசனும் தொடர்ந்து சுற்ற ஒருநாள் பெரிய மின்னல் மலையின் உச்சியில் இருந்து கீழ்வரை தெரிந்தது அதுதான் அடிமுடிகண்ட உண்ணாமலையுடன் கூடிய அண்ணாமலை என்றார் சுவாமிகள்     அரசன் வேண்டியபடி குழந்தை அவனுக்கு பிறந்தது பின் தான தருமங்கள் நிறைய செய்து அண்ணாமலையாருக்கு கோயில் கட்டினான் .

 அந்த மின்னல் தெரிந்த அன்றுதான் கார்த்திகை தீபம் என்கிறோம் .அன்றுதான் திருவண்ணாமலை ஜோதி என்று நம் சுவாமிகள் கூறினார்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

கொடிமரம்

 ஒரு ராஜா பெரிய கோயில் ஒன்றை கட்டினான் எல்லா வேலையும் முடிந்துவிட்டது,கொடிமரம் ( கருட கம்பம் ) வைக்க வேண்டும் என்ன செய்தாலும் எவ்வளவு பேர் தூக்கினாலும் அதை நிற்க வைக்க முடியவில்லை .அங்குள்ளவர்கள் தானம் நிறைய செய்தால் கொடிமரம் நின்று விடும் என்று கூறி அரசனை ஏமாற்றி பொன் பொருள் வாங்கி கொண்டார்கள் .அப்போது ஒரு பைத்தியக்காரன் ( நம் சுவாமிகளை  போல் பற்று அற்ற துறவி ) யாராவது அபசாரி தொட்டால் கொடிமரம் தானாகவே நின்றுவிடும் என்று கூற அருகில் இருந்தவர்கள் அபச்சாரம்  அபச்சாரம் என்று கூறினார்கள்.ஒரு நாள் ஒரு பெண் வந்து எல்லோரும் கஷ்டப்படுகிறார்களே என்று நாமும் பொய் தூக்கிவிடலாம் என்று பொய் தொட்டாளாம் உடனே கொடிமரம் நின்று விட்டதாம். எல்லோரும் அவள் காலில் விழுந்து வணங்கினார்கள் அம்மா மகாலட்சுமி நீ யார் ? எந்த ஊர் என்று விசாரிக்கையில் அவள் பக்கத்துக்கு ஊரில் தாசியாக இருப்பதை கூறினாள்.ஆயிரத்துக்கு ஒன்று குறைவாக உள்ள அபசாரி,அபசாரி யாரிடமும் பணம் வாங்காமல் அன்பை கொடுத்ததினால் அந்த சக்தி அவளிடம் இருந்ததாம்.