சனி, 9 அக்டோபர், 2010

அழகு

அழகு
ஆணுக்கு மீசை அழகு கால் கை கட்டை விரல் அழகு
பெண்ணுக்கு கூந்தல் மார்பு அழகு
ஆணுக்கு அவனுடைய கட்டை விரலை வெட்டி விட்டால் அவனுடைய பலம் போய்விடும் .
பெண்ணுக்கு மார்பின் நுனியோ மூக்கின் நுனியோ பின்னப் பட்டால்அவளின் பலம் போய் விடும் .
இலட்சுமணன் சூர்பனகை மூக்கை அறுத்ததன் கரணம் இதுதான்
மந்திரவாதி கட்டை விரல் வெட்டிவிட்டால் அவனது மந்திரம் எதுவும் பலிக்காது .
மந்திரவாதியின் முன் உள்ள நான்கு பற்களை உடைத்தாலோ அல்லது தானாக விழுந்தாலோ மந்திரம் வேலை செய்யாது     
 அப்போது மீசை வைக்காமல் இருந்தேன்
என்னடா மீசை இல்லாமல் இருக்கிறாய் என்று சுவாமிகள் கேட்டார் ?
மீசை வைக்காமல் இருந்தால் தான் முருகரின் அருள் எளிதில் கிடைக்கும் அதனால் தான் மீசை வைக்கவில்லை என்றேன் .
யாரடா கூறியது என்றார் .
அந்தக் காலத்தில் யாரும் வைக்கவில்லையே என்றேன் .
முட்டாள் அந்தக் காலத்தில் மீசை வளர்த்து எலுமிச்சை பழத்தை இருபக்கமும் நிறுத்தி வைப்பார்கள் , அக் காலத்தில் இப்போது போல் அரிசி சாதம் கிடையாது வெறும் கம்பங் கூழ் தான் . மீசை உள்ளவன் குடித்தால் மீசையெய் கழுவ இரண்டு குவளை நீர் வேண்டும் . சோம்பேறிகள் தான் மீசை வைக்காமல் இருந்தார்கள் அதுதான் உண்மையான காரணம் என்றார்                            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக