சனி, 9 அக்டோபர், 2010

கருப்பு குழந்தை

கருப்பு  குழந்தை .
ஒரு நாள் ஒரு சிகப்பான பெண்மணி சுவாமிகளிடம் வந்து தன் கணவன் தன்னை சந்தேகப் படுவதாக கூறி அழுதார் . ஏன் என்று சுவாமி கேட்கையில் " நானும் சிகப்பு என் கணவனும் சிகப்பு எங்களுக்கு பிறந்த குழந்தை கருப்பாக உள்ளது " எனவே என் மீது சந்தேகப் படுகிறார் .
என்றார் . சுவாமிகள் உன் கணவனை என்னிடம் கூட்டி வா என்றார் . மறு நாள் அப் பெண்மணி கணவனை சுவாமிகளிடம் கூட்டி வந்தார் .
அப்போது  சுவாமிகள் கணவனை மனைவியும் , மனைவியெய்  கணவனும் மனமாற நம்ப வேண்டும் நம்பிக்கை இல்லாவிட்டால் வாழ்கை இல்லை .மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் இருக்கவேண்டும் என்று அறிவுரை  கூறினார் .
ஏன் குழந்தை கறுப்பாக பிறந்தது என்று கணவன் கேட்கையில் சுவாமிகள் கூறினார் " இருவரும் கூடிய பிறகு மூன்றே முக்கால் நாளிகை கழித்து அப்பெண் யார் முகத்தில் முழிக்கிறார்களோ அல்லது நினைகிறார்களோ அவர்களை போல் தான் குழந்தை பிறக்கும் என்றார் . பிறகு அப் பெண்மணியிடம் நீ காலையில் எழுந்து என்ன செய்வாய் என்று சுவாமிகள் கேட்டார் அதற்கு அப்பெண்மணி காலை நான்கு  மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவேன் அப்போது எதிர் வீட்டில் வயதான கருப்பாக உள்ள  பெரியவர் திண்ணையில் உட்கார்ந்து இருப்பார் அவரைத்தான் தினமும் பார்ப்பேன் என்றார் .
கணவனுக்கும் சந்தேகம் தீர்ந்தது .பிறகு இருவரும் ஒற்றுமையாக குடும்ப வாழ்கை நடத்தினார்கள் .
பின் எப்போதும் காலை எழுந்தவுடன் கணவனை மட்டுமே பார்ப்பாள் .இரண்டாவது குழந்தை கணவனைபோலவே பிறந்தது .
இதுவே காரணம் குழந்தை கணவனைப் போல பாட்டி பாட்டனை போல் இருப்பது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக