சனி, 9 அக்டோபர், 2010

நம்பிக்கை

நம்பிக்கை
மனிதனுக்கு நம்பிக்கை தான் முக்கியம் அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் துறவியிடமிருந்து வரம் கிடைக்கும் .

எதை செய்தாலும் நமிக்கையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும் .முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பாக பலன் உண்டு .

நம்பிக்கையுடன் தான் எதையும் செய்ய வேண்டும் , இரு மனமும் இணைய வேண்டும் .

வைத்தியம் செய்யும் போது வைத்தியர் மருந்து கொடுக்கும் போது நோய் சரியாகி விட வேண்டும் என்று நினைத்து கொடுக்க  வேண்டும். நோயாளியும் இந்த மருத்துவர் கொடுக்கும் மருந்தால் நோய் குணமாகி விடும் என்று நம்பிக்கை இருக்க வேண்டும் அப்போதுதான் நோய் குணமாகும் .
தங்கத்தில் அணிகலன் செய்வது எப்படி ?
தங்கமும் , செப்பும் வேண்டும் .
இரண்டும் பக்கத்தில் வைத்தால் போதுமா?
 தங்கமும் , செப்பும் உருக வேண்டும் . இரண்டும் உருகி இணைந்தால் தான் அணிகலனாக மாறும் .
நாமும் இறைவனிடமும் ஸ்வாமிகளைடமும் மனமுருகி அன்பு கொண்டு நம்பிக்கை வைத்து அருள் ஆசியெய் பெற வேண்டும் .

கஷ்டம் சோதனை கொடுக்கும் மன நிம்மதி , மன நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும் .
எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும். ஆன்மாவால் கும்பிட வேண்டும்
தைரியத்தை வைத்துதான் கஷ்டத்தை குறைக்க வேண்டும் .
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு  காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் எல்லாம் போய்விடும் .
நம்பிக்கை  தான் சற்குரு ( கடவுள் ) யார் கை விட்டாலும் சற்குரு மட்டும் கைவிடமாட்டார் என்ற திடமான வைராக்கியம் இருக்க வேண்டும் .
மனிதனை மனிதன் நம்பாமல் இருப்பது கெட்டதாகும்.
அன்பு மட்டுமே  அழியா சொத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக