திங்கள், 4 அக்டோபர், 2010

மடிப்பிச்சை

மடிப்பிச்சை 
 அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும் , குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி , வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப் படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்து போட்டு விட்டு பத்திரப் படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம்.
கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது விசேஷம். குழந்தைஇல்லை என்று பிரம்மன் எழுதி இருந்தாலும் பிரம்மாவின் தலை எழுத்தையே மடிப்பிச்சை மாற்றிவிடும் .      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக