வியாழன், 25 நவம்பர், 2010

சரணாகதியின் மகத்துவம்

சரணாகதியின் மகத்துவம்

நம் சற்குருநாதர் அப்பா பைத்தியம் சுவாமிகளின் திருவடிகளில் சரணடைந்து எல்லா நிலைகளிலும் எல்லா சந்தர்பங்களிலும் கடைசி வரை அவரையே சரணடைந்து இருப்பவர்கள் உண்மையில் சுவாமிகளின் கிருபையை பெறுவார்கள் .

நமது குருநாதர் தம்மிடம் சரணடைந்தவர்களை காத்து இரட்சித்து திருவருள் புரிகிறார் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைக்கவேண்டும்.

சுவாமிகளிடம் சரணாகதி அடையும் போது அவன் வாழ்கையில் பெற வேண்டியவை எல்லாம் பெறுவான் .
சுவாமிகளிடம் சரண்புக விரும்புவர்கள் தங்களையே சுவாமிகளிடம் ஒப்படைத்து விட வேண்டும் .
உயிருக்கு சுதந்திரம் இல்லை அது சுவாமிகளையே சார்ந்து வாழ வேண்டும் .எனவே பற்றுகோடு சுவாமிகளே . நாம் பைத்தியக்காரனை போல் எதையோ பிடித்துகொண்டு இருக்கிறோம் . இந்த பைத்தியமும் பித்தும் தெளிவதற்கு மாமருந்தாக விளங்குபவை சுவாமிகள் திருவடிகளை பற்றி கொள்வதேயாகும் .
அனைத்தும் சுவாமிகள் திரு அருளால்தான் நடைபெறுகிறது என்று நினைப்பது   பண்பட்ட உள்ளத்தின் அடையாளம் .
சுவாமிகள் கூறும் வழி முறைகளை இயன்றவரை பின்பற்றுவதற்கு எப்பொழுதும் முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும்.
மனிதன் அற்ப விஷயங்களுக்கு  எல்லாம் தன் உள்ளத்தில் இடம் கொடுத்தால் அவன் வாழ்வே பாழாகும், நிலைகுலைந்து விடும் .
சாதகமான சூழ்நிலையோ ,பாதகமான சூழ்நிலையோ எது நேர்ந்தாலும் சுவாமிகள் திருவடிகளை மறக்காமல் இருப்பதே எவ்விதத்திலும் நன்மை தரும் .
திரு அருட்பா , நடராஜர் பத்து எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்க வேண்டும் .
 சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும் கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும் .ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .அச்சமும் ஆசையும் அறிவுள்ளவர்களுக்கு இல்லை .அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம் .
ஒரே வீடு கடவும் கட்டின வீடு அதில்தான் வாழ வேண்டும் ( ஆன்மா ) சரீரத்தை கட்டுவித்தவர் கடவுள் .
அச்சம், ஆசை, மர்மம் இம்மூன்றையும் போக்கினால் தான் தெரியும் .அதற்கும் நேரம் வர வேண்டும் .இம்மூன்றையும் விட்டால் கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் மனம் நிதானமாக இருக்கும் ,இரண்டையும் சமமாக நினைக்கும் மனம் வரும் . இம்மூன்றையும் அடக்கினால் கடவுளை சீக்கிரம் அடையலாம் .வைராக்கியம் விடா முயற்ச்சி சிரத்தை முக்கியமானவை .
அன்பே தெய்வம் நம்பிக்கையே தெய்வம் .
எத்தனை சோதனைகள் வந்து நம்மை துன்புறுத்தினாலும் கஷ்டப்படுத்தினாலும் சுவாமிகளை ஒரே நிர்ணயமாய் அவரையே பிடித்துக்கொள்ள வேண்டும் .
சுவாமிகள் கஷ்டங்களை கொடுக்கிறார் அந்த கஷ்டத்திலும் யாதோ நன்மை இருக்கத்தான் செய்கிறது அந்த நன்மையை நாம் உணரவேண்டும் .
நோயற்ற வாழ்வில் நாம் வாழ்வதும் சுவாமிகளின் திரு அருளால்தான் .
நன்மை தீமை சரிசமமாக ஒரே நிர்ணயமாக பிடித்து வந்தால் எந்த கவலையும் சுவாமிகள் தீர்ப்பார் .
நம்பிக்கை ஆதார பொருள் . சுவாமிகள் சொன்ன சொல்லை மனதில் பதிய வைக்க வேண்டும் . நம்பிக்கை இழக்காமல் பூரண நம்பிக்கையுடன் சுவாமிகளை நம்பினால் எல்லாம் கிடைக்கும் .
சுவாமிகளின் திருவடிகளை தொட்டு கும்பிடும் பொழுது சுவாமிகளின் கடைக்கண் பார்வையாவது தேவை என்றும் ,சுவாமிகளை என்றென்றும் மறவாதிருக்க வேண்டும் என்றும் , சுவாமிகளின் அன்பும் அருளும் ஆசிர்வாதமும் எப்பொழுதும் நமக்கு வேண்டும் என்றும் அவருடைய தரிசனமும் தொடர்ந்து கிடைத்து கொண்டு இருக்கவேண்டும் என்றும் மனமார சுவாமிகளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் .        
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக