புதன், 27 ஜூலை, 2011

ஒருமுறை தெலுங்கில் காண்டம் புத்தகம் ஒன்றை படித்தார்கள். அதில் துறவியிடம் அன்பை பெறுவது முக்கியம்,துறவி என்றால் தனக்கென்று ஒரு பொருள் வைத்திருக்க கூடாது, உயிர் அணுக்கள் யார் தலையில் வைத்து இருக்கிறார்களோ, அவர்களே துறவி,குறிஞ்சிப்பூ 12  வருடங்களுக்கு ஒரு முறை பூப்பது போல் 12 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்படும் என்றும்,அச்சத்தை தவிர்த்து இருப்பவரே துறவி என்று இருந்தது .
இது போன்று யார் உள்ளார்கள் , நம் சுவாமிகள் தான் உள்ளார்கள், வேறு யாருமில்லை என்று பேசிக்கொண்டார்கள்.இதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த அந்த வீட்டு பெண்கள் இருவரும் சுவாமியின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்டு சுவாமிகளின் கைகளால் தாலி கட்டுமாறு கேட்டனர்.அதற்கு சுவாமி சிரித்து கொண்டே கொட்டாங்குச்சியில் கட்டுகிறேன் ,வயதான காலத்தில் காட்டிற்கு சென்று விட்டால் ஒருத்தியை நண்டு பிடித்து வா என்று கூறலாம்,ஒருத்தியை நரி பிடித்துவா என்று கூறலாம் என்றார் . பிறகு எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்றால் நான் எங்கே போவது,பிறகு என் தாடியை பிடித்து இழுப்பீர்கள்  என்றார்.  நான் இரண்டு முடிச்சு தான் போடுவேன் மூன்றாவது முடிச்சு உனது கணவன் தான் வந்து போடுவான் என்றார் . அது முதல் கல்யாணம் ஆகாத பெண்கள் தாலி காட்டுங்கள் என்பார்களாம்.சுவாமிகளின் கையால் தாலி கட்டினால் நல்ல கணவன் கிடைப்பான் என்று அடம்பிடித்து கட்டி செல்வார்கள் , சுவாமிகளும் ரசமணியை கழுத்தில் போட்டு விடுவார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக