வெள்ளி, 1 ஜூலை, 2011

துறவியின் சாபம்

சின்ன தச்சூர்  இந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் காலையிலும் மாலையிலும் பற்றி எரியும் .எல்லோரும் தண்ணீர் ஊற்றி அணைப்பார்கள் .ஊரில் உள்ள எல்லோரும் மந்திரவாதிகள் ,சங்கராச்சாரி மற்றும் பலரையும் பார்த்தார்கள். யாராலும் சரி செய்ய முடியவில்லை .

நம் சுவாமிகள் அவ்வூர் பக்கத்தில் சென்று இருக்கையில் ஒரு சிறுவன் மடிபிச்சை வாங்கும் பொது இரண்டு தடவை வாங்கினானாம், ஏன் இருமுறை வாங்குகிறாய் பத்தாதா என்று சுவாமிகள் சிறுவனை கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் பின் வரும் விவரத்தை கூறினான் .

ஒரு நாள் காலையில் காவி கட்டி வந்த ஒருவர் அவ்வூர் ப்ரெசிடென்ட் வீட்டின் முன் பசிக்கிறது என்று கேட்டாராம் , அதற்கு அந்த ப்ரெசிடென்ட் அவரை திட்டி விட்டான் .அவர் கோபமுற்று எல்லாம் பத்திகிட்டு போகட்டும் என்று சொல்லி விட்டு போனார் .அன்று முதல் அவ்வூரில் உள்ள எல்லா வீடுகளும் எரிய ஆரம்பித்து விட்டது எவராலும் சரி செய்ய இயலவில்லை என்று கூறினான்.

சுவாமிகள் அவனிடம் சாபம் கொடுத்தவர் பிச்சைகாரன் அல்ல துறவி என்று கூறினார் .மடிப்பிச்சை வாங்கிய அரிசியுடன் ஊரில் உள்ள எல்லார் வீட்டிற்கும்     சென்று சிறிது அரிசி வாங்கி பிள்ளையார் கோயிலில் காஞ்சி காய்ச்சி யாவருக்கும் கொடுக்க சொன்னார் .
ஊரில் உள்ள அனைவரும் அரிசி கொடுத்தார்கள் ப்ரெசிடென்ட் மட்டும் அரிசி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டான் . சிறுவன் சுவாமிகளிடம் வந்து இது குறித்து கூற இனி உங்கள் வீடு பத்தாது எவன் வீட்டில் அவர் சொன்னாரோ அந்த வீடு மட்டும் எரியட்டும் என்று சுவாமிகள் கூறினார் .
அன்று முதல் மற்றவர்கள் வீடு எரியவில்லை ப்ரெசிடென்ட் வீடு மட்டும் பத்தி எரிந்தது .பிறகு தான் சுவாமிகளை ப்ரெசிடென்ட் தேடி வந்தான் ,சுவாமிகள் அவனை திட்டி பின் சரி செய்தார் .

சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் எல்லாம் சரியாகி விடும் ,அது அந்த துறவிக்கு தெரியும்,தெரிந்தவுடன் கோபம் சாந்தியாகிவிட்டது .

ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்றமுடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக