திங்கள், 4 ஜூலை, 2011

உழைப்பு

சில வருடங்களுக்கு முன் ஒரு ஏலேக்ட்ரிசியன் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்யும் போது தவறி கீழே விழுந்து இறந்து விட்டார்.அவருக்கு ஐந்து பிள்ளைகள் கணவன் இல்லாத அந்த அம்மாள் பிள்ளைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார் .குடியான் குப்பம் முதலியார்கள் எவரும் ஆதரவு தரவில்லை .சுவாமிகளிடம் வந்து அந்த அம்மாள் அழுதார்கள்.தெருவில் இட்லி சுட்டு விற்கிறீர்களா என்று கேட்டார் சுவாமி.நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்றார் அந்த அம்மாள். வீடு இருக்கிறது,தோடு அரை சவரன் உள்ளது ,வீட்டிற்க்கு பக்கத்தில் இடம் உள்ளது தோடை விற்று இட்லி பாத்திரம்,அரிசி பருப்பு  வாங்கி   சுவாமிகள் ஆசியுடன் இட்லி கடை ஆரம்பித்தார் .

முதலில் மூன்று  படி  அரிசி போட்டார்கள்,பாதிதான் விற்றது மீதியை பிள்ளைகள் சாப்பிட்டார்கள் .மறுநாள் மூன்று படியும் விற்று விட்டது .பிள்ளைகள் சாப்பிடகூட இட்லி இல்லை .அடுத்து காபியும் டீயும் போட்டனர்,பாத்து நாட்களில் ஆறுபடி வியாபாரம் ஆனது .பின்பு ஒரு ஆளை ஆட்டுக்கல்லில் மாவாட்ட வேலைக்கு வைத்தார்கள்.பின்பு பத்து படி விற்றது.வந்த வருமானத்தில் செலவு போக சேமித்து பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கடை கட்டி 250 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டனர் .பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார் 16 சவரன் நகை சேர்த்து பெண்ணுக்கு திருமணம் நடத்தினார் .பதினெட்டு ஆட்கள் வேலைக்கு இருந்தனர் கூரை வீடு மெத்தை வீடாகியது.பணம் கையில் 50000 உள்ளதாக சுவாமிகளிடம்  வந்து கூறினார்கள் .

உழைப்பு தான் முன்னுக்கு வரவைத்தது ,சுவாமிகள் ஆசியால் எல்லாம் நல்லபடியாக நடந்தது .

நாஷ்டா கடையில் இலாபம் உள்ளது போல் வேறு எந்த தொழிலும் லாபம் இல்லை .மளிகை கடை ,ஹோட்டல், ஜவுளி கடை இவை வைத்து ஒருவன் முன்னுக்கு வரவில்லை என்றால் வேறு எதிலும் முன்னேற முடியாது என்று சுவாமிகள் கூறினார்          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக