திங்கள், 4 ஜூலை, 2011

சுவாமிகள் மோளாம்பாக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு அய்யரும் அவர் மனைவியும்  வந்து அழுதார்கள் ( இருவரும் தானதருமங்கள் செய்வதில் சிறந்தவர்கள்) .ஏன்அழுகிறீர்கள்  என்று சுவாமிகள் கேட்க அவர் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சிறு வயதில் நன்கு இருப்பார்கள் பதினாறு வயதானவுடன் கைகால்கள் விளங்குவதில்லை முடமாகிப்போகிறது .கட்டிலிலே படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்னவென்று தெரியவில்லை என்றார்கள் .

உண்மையிலே தெரியாதா என்று சுவாமிகள் கேட்டார்?

தெரியாது என்று அவர்கள் கூற 

உன் மூதாதையர்கள் முக்கால் பங்கு தங்கம் கால் பங்கு பஞ்சலோகத்தால் ஆன சக்தி விக்ரகத்தை   திருடி எடுத்து நாட்டுகோட்டை செட்டியார் ஆடைஆபரணங்களை யும்  விக்ரகத்தை இடுப்பு அருகே அறுத்து  பாதிப்பாதி    படையாச்சி மேல் பாகத்தையும் அய்யர் உனது பாட்டன் கீழ் உள்ளதையும் எடுத்து கொள்ளவில்லையா ?    மேலும் உனது பாட்டன் கோயில் நிலம் ஆறு காணியை அவன் பேருக்கு பட்டா செய்து கொள்ள வில்லையா?
 மூன்று மாதத்தில் அவனுக்கு பைத்தியம் பிடிக்கவில்லையா ? அவன் பெண் மேளக்காரனுடன் சிநேகிதம் வைத்து சொத்துக்காக கொலை செய்யவில்லையா? இந்த பஞ்சமா பாதகங்கள் செய்ததினால் தானடா உன் வீட்டு குடும்பத்தில் பதினாறு வயது ஆனதும் கை கால் முடங்கிபோகிறது .அம்மன் விக்ரகத்தை  பின்னப்படுதியதால் வந்தது என்று சுவாமிகள் கூறினார். ஆமாம் சுவாமி பாட்டன் காலத்தில் இது போல் நடந்தது என்று ஐய்யரும் ஒத்துகொண்டார் .

இதற்கு எல்லோரும் கூடி சாந்தம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.
அதற்கு எல்லோரும் கூடி செய்வது கடினம் மற்றவர்கள் வரமாட்டார்கள் ,ஐயர்  மனைவி நாங்கள் என்ன பாவம் செய்தோம் ,எங்களுக்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும் என்று அழுதார் .பிறகுதான் சுவாமிகள் மற்றவர்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை உனது பிள்ளைகள் அது போல் அவஸ்தை வராமல் இருக்க வழி சொல்கிறேன் என்றார். 

பரிகாரமாக சுவாமிகள் பசுமாட்டை கன்றுடன் யாருக்காவது தானமாக கொடுக்க சொன்னார் .
ஜில்லா விட்டு ஜில்லா பிள்ளையாரை திருடி எடுத்து வந்து வழிபட சொன்னார் .
வருடம் மூன்று பேருக்கு தாலி, கூறை   சேலை வாங்கி கொடுக்க சொன்னார்.

அவர்களும் சுவாமிகள் கூறியபடி இருப்பதிலேயே நல்ல நல்ல பசுமாட்டை கன்றுடன் தானம் செய்தனர்,அவர்கள் அப்பா திருடி எடுத்து வந்த பிள்ளையாரை தான் அவர்கள் வழிபடுவதாக சொன்னார்கள், தாலியும் கூறை புடவையும் வாங்கி கொடுத்தனர் , 4000  பேருக்கு அன்னதானமும் செய்தனர் .
இப்போது சுவாமிகள் அருளால் நலமாக உள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக