திங்கள், 25 ஜூலை, 2011

மருந்தும் நான் அறியேன் மந்திரமும் நான் அறியேன்

ஒருவருக்கு குளிர் ஜுரம் இரண்டு பேர் அமுக்கினாலும் நடுக்கம் நிற்கவில்லை .இருபது நாட்களாக அப்படியே இருந்தது .சுவாமிகளிடம் அழைத்து வந்தார்கள் .சுவாமிகள் அருகில் இருந்த ஆளிடம் செங்கலை தூள் செய்து ஐந்து பொட்டலங்களாக எடுத்து வர சொன்னார். ஒரு பொட்டலத்தை தண்ணீரில் போட்டு  குடிக்க சொன்னார். மதியம் இன்னொரு பொட்டலம்  சாப்பிட்டார் .மீதி மூன்று பொட்டலங்களை பீரோவில் வைத்து விட்டனர் .இரண்டு வேளை மருந்து சாப்பிட்டதில் முற்றிலும் குணமாகி விட்டது .மறுநாள் சுவாமிகளிடம் வந்து அருமையான மருந்து கொடுத்தீர்கள் என்று கூறினார்கள். நான் எங்கே மருந்து கொடுத்தேன் செங்கல் தூள் தான் கொடுத்தேன் என்றார் சுவாமிகள் .அவர்கள் நம்பவில்லை மீதி தூளை எடுத்து பார் என்று கூறினார்கள் சுவாமிகள் .

 அதே  போல் ஒரு ஜோசியருக்கு TB ஜுரம் மருத்துவ மனைக்கு செல்ல பணம் இல்லை சுவாமியிடம் அழைத்து வந்தார்கள். அச்சமயம் சுவாமிகள் எங்கோ வெளியே சென்று இருந்தார்,தாழ்வாரத்தில் படுக்க வைத்து இருந்தார்கள் .சுவாமிகள் இரவு பத்து மணிக்குதான் வந்தார் ,ஜோசியரை தூக்கினால் கூட எழுந்திருக்க முடியவில்லை . பெரு விரலால் மண்ணை எடுத்து பல் பொடியுடன் கலந்து வாயில் போட்டு இரண்டு குவளை ரசம் குடிக்க சொன்னார்.
பிறகு உடனே சரியாகி விட்டது . இது வரை அவர் நோய் என்று படுக்கவில்லை.

இது குறித்து எழுதும் போது  சுவாமிகள் என்னடா எழுதுகிறாய்? இது எல்லாம் ( வைத்தியம் எல்லாம் ) வறுமைக்கு உதவாதடா என்று கூறினார் .


  . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக