ஞாயிறு, 24 ஜூலை, 2011

வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு கோயில் கட்டி இருந்தபோது அன்னதானம் செய்ய இருந்தார்கள். எல்லோரும் அரிசி போட்டு செய்யுங்கள் என்றார் சுவாமிகள்.ஒரு பணக்காரன் நானே செய்கிறேன் என்றான்.நீ ஒருவன் மட்டும் செய்யாதே, எல்லோரும் சேர்ந்து செய்யுங்கள் அப்போதுதான் புண்ணியம் அனைவருக்கும் கிடைக்கும் என்றார் சுவாமிகள் .இறுதியில் எல்லோரும் அரிசி போட பணக்காரன் மட்டும் அரிசி போடவில்லை.எல்லோரும் சுவாமியை கும்பிட இவன் மட்டும் கும்பிடவில்லை சாமியார் என்கிறீர்களே பெரிய சாமியாரா என்றான் . சுவாமிகள் இதை கேட்டு அமைதியாக இருந்தார் .இராமலிங்க சவாமியாவது,கீமலிங்க சவாமியாவது,திரு அருட்பாவது ,இரு வருட்பாவது என்றான் . 
ராமலிங்க சுவாமிகளை பற்றியும் ,திரு அருட்பா பற்றியும் அவன் தரக்குறைவாக பேசியவுடன் சுவாமிகள் அருகில் இருந்த கரி துண்டை எடுத்து நிலத்தில் கட்டம் போட்டு ஏதோ எழுதினாராம் .அதன் பின்பு அவனுடைய சொத்து எல்லாம் போய்விட்டது .சாப்பாட்டுக்கு கூட வழியில்லை ,இப்போது பிச்சை எடுத்து கொண்டு இருக்கிறான் .
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக