செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஒருமுறை ஒரு ஊரில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்தார்கள் . அம்மன் சிலைக்கு கீழ் யந்திரம் வைக்க வேண்டும்,இந்திரஸ்தாபனம் தங்கத்தில் இருந்தால் விசேஷம் என்றார்கள் .கொடுக்கூர் ரெட்டியார் அம்மா தங்கம் தருவதாக கூறினார்கள் .சுவாமி வேண்டாம் என்று கூறி சில செப்பு தகடு துண்டுகளை எடுத்து வர சொன்னார் ,அவர்களும் எடுத்து வந்தார்கள் .அதை ஒரு ஜாடியில் போட்டு தலைமாட்டில் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வருமாறு சொன்னார்.இந்த ஒரு வார காலத்தில் சுவாமிகள் அதில் எச்சிலை துப்பி கொண்டு இருந்தார் .மறு வாரம் ஆட்கள் வந்தனர் அச் செப்பு  தகடு துண்டுகளை  கொடுத்து உருக்கச் சொன்னார் .உருக்கி பார்த்தால் செப்பு சொக்கத் தங்கமாகி இருந்தது .அதை எடுத்து சுவாமிகள் தெய்வ திருப்பணிக்கு முழுவதும் உபயோகப்படுத்த வேண்டும் ,மேலும் இது சொக்கத்தங்கம் ,சந்தேகப்பட்டு இதை பரிசோதிக்க கூடாது என்றார் .
சுவாமிகள் சொன்னதை மீறி அவர்கள் பரிசோதனை செய்தனர் .சொக்கத்தங்கம் என்று உறுதியானது .பின்னர் அவர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகினர் .
சுவாமிகளிடம் வந்து அழுதனர் .

சுவாமிகள் தங்கத்தை பரிசோதனை செய்தாயா?என்னை பரிசோதனை செய்தாயா?என்று கேட்டார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக