வெள்ளி, 1 ஜூலை, 2011

மாமியார் மருமகள் சண்டை

மாமியாரும் மருமகளும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள் .மாமியார் செருப்பை எடுத்தால் மருமகள் துடபத்தை எடுத்துகொள்வாள் .கணவன் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான் .மாமியார் செய்தது சரி என்றால் மனைவி கோவித்துகொள்வாள்.மனைவி செய்தது சரி என்றால் மாமியார் கோவித்துகொள்வாள்.இவர்களிடம் இருப்பதை விட சாமியாராக போகலாம் என்று கணவன் முடிவு செய்தான்.சுவாமிகளை கேள்விப்பட்டு வந்தான் .சுவாமிகள் ஒருவாரம் அவன் செலவுக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு தாயிடமும் மனைவியிடமும் கோவித்து கொண்டு எங்கேயாவது சென்று உயிர் விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வர சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று கூறி வக்கீல் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் .
மாமியாரும் மருமகளும் ஊரில் உள்ள ஜோசியர்கள் ,சாமியார்கள் அனைவரையும் பார்த்து மகன் எப்போது வருவான்   ,கணவன் எப்போது வருவான் என்று கேட்டார்கள் .யாரும் சொல்லவில்லை .சுவாமிகளை பற்றி யாரோ கூற இருவரும் ஒன்று சேர்ந்து வந்து அழுதார்கள் .நீங்கள் இருவரும் ஒற்றுமையாக  இருந்தால் அவன் ஏன் செல்கிறான் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்படி ஒற்றுமையாக இருப்பதாக சத்தியம் செய்தால் அவனை மந்திரம் போட்டு எங்கிருந்தாலும் வரச் செய்கிறேன் என்று கூறினார் சுவாமிகள் .இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சுவாமிகள் முன் சத்தியம்  செய்தனர் .சுவாமிகள் அருகில் இருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து மந்திரம் போடுவதுபோல் நடித்து அவர்களிடம் கொடுத்து இதை  வைத்து பூஜை செய்யுங்கள் மூன்றாவது நாள் அவன் இங்கே வந்துவிடுவான் நீங்கள் சென்று மூன்றாவது நாள் வாருங்கள் என்றார் அவர்களும் அவ்வாறே பூஜை செய்தனர் .அவர்கள் சென்ற உடன் சிறிது நேரத்தில் கணவன் சுவாமிகளை பார்க்க வந்தான் சுவாமிகள் அவனை பார்த்து ஏன்டா முண்டம் வெளியே வரவேண்டாம் என்று சொன்னேனே ஏன் வந்தாய் என்று திட்டினார் .பின் மூன்றாவது நாள் ஆளை அனுப்புவதாகவும் அப்போது வா என்று கூறினார் .வரும் போது ஒரு எலுமிச்சம் பழம்தான் என்னை கூட்டி வந்தது என்னை விடுங்கள் நான் எங்கேயாவது போகிறேன் என்று கூறி நடிக்க சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .அவனிடம் இருவரும் இனி சண்டை போடமாட்டோம் என்று கதறி அழுதனர்.அதற்கு  பின் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள் .கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பெற்று கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .      
            

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக