புதன், 29 ஜூன், 2011

விவசாயி

இராம்பாக்கம்  அருகில் உள்ள ஊரில் பெரிய பணக்காரன் ஒருவன் இருந்தான்.இன்னொரு சிறிய விவசாயி மூன்று ஏக்கர் நிலம் வைத்து இருந்தான் .பெரிய பணக்காரனுக்கு அந்த மூன்று ஏக்கர் நிலத்தையும் வாங்க வேண்டும் என்று பேராசை. சிறிய விவசாயி ஒத்து கொள்ளவில்லை.சிறிய விவசாயி கஷ்டப்பட்டு மோட்டார் ஒன்று வாங்கி தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்து வந்தான் .பணக்காரன் அந்த மோட்டாரை திருடி விட்டான் .மறுபடியும் கஷ்டப்பட்டு சிறிய விவசாயி மோட்டார் வாங்கினான் , அதனையும் பணக்காரன் மீண்டும் திருடி விட்டான் .

சிறிய விவசாயி சுவாமிகளிடம் வந்து மோட்டார் காணாமல் போகிறது சுவாமி யார் எடுத்தார்கள் என்று தெரியவில்லை என்று அழுதார் .

உனக்கு எத்தனை பிள்ளைகள் என்று சுவாமிகள் கேட்டார்?
இருவர் என்றார் விவசாயி
 யார் அதில் தைரியசாலி என்று கேட்டார் சுவாமி
            இளையவன் என்றார் விவசாயி .

இளையவனை வரச்சொல்லி அவனிடம் நம்பிக்கையான ஒருவனை இரவு காட்சி சினிமாவுக்கு அழைத்து செல் பின் பணக்காரன் வயலுக்கு சென்று அவனுடைய மோட்டார், ஸ்டார்ட்டர் களை திருடி எல்லாவற்றையும் தனித்தனியே கழற்றி மோட்டார் சாமான்களை ஆற்றங்கரை மணலில் புதைத்துவிடு, ஸ்டாட்டரை மட்டும் கிணற்றில் போட்டு விடு என்று கூறினார் .

அவனும் அது போல் செய்தான் .

மறுநாள் பணக்காரன் சுவாமிகளிடம் வந்து தனது மோட்டார் திருடு பொய் விட்டது என்று கூறி அழுதான் .

அதற்கு சுவாமிகள் உனது மோட்டார் மட்டும் காணமல் போனதா? மற்றவர்கள் மோட்டார் களும் காணாமல் போனது என்கிறார்களே உனது பக்கத்துக்கு வயல்காரனிடம் மோட்டார் திருடியவன் தான் உன் மோட்டார் களையும் திருடி இருக்க வேண்டும் .போலீஸ் ரிப்போர்ட் கொடு என்று சுவாமிகள் கூறினார்.

சுவாமிகளிடம் பணக்காரன் உண்மையை ஒப்பு கொண்டு செய்தது தவறு என்று ஒப்பு கொண்டான் .

சுவாமிகள் அவர்களிடம் திருடிய மோட்டார் களை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வயலில் போட்டு விடு உனது மோட்டார் மறுநாள் வந்து விடும் என்று கூறினார் .அவனும் அதே போல் செய்தான் 

மோட்டார்கள் கிடைத்தவுடன் சிறிய விவசாயி இளைய மகனும் மோட்டார் சாமான்களை எடுத்து வந்து  பணக்காரனின் வயலில் போட்டான்  .

மறுநாள் பணக்காரன் மோட்டார் கிடைத்து விட்டது சுவாமி ஆனால் ஸ்டார்ட்டர் கிடைக்கவில்லை என்றான் .
  அதற்கு சுவாமிகள் அவர்கள் சாமான்கள் எல்லாம் சரியாக கொடுத்தாயா என்று கேட்க ? அவன் ஒன்று இரண்டு விட்டு போய் இருக்கும் என்றான் .

அதற்கு ஸ்டார்ட்டர் சரியாக போய் விட்டது போ என்று சுவாமிகள் கூறினார் .

       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக