வெள்ளி, 17 ஜூன், 2011

சிறுவயதில் நடந்த நிகழ்ச்சி

ஒரு நாள் சுவாமிகள் அவருடைய சிறு வயதில் நடந்த நிகழ்ச்சியை கூறினார் .

அவர்கள் ஊரில் சுமை தூக்குபவர்கள் சிறிய பாதையில் கை வண்டி வைத்து இழுத்து வருவார்களாம் .அப்போது உள்ள போலீஸ் அதிகாரி வண்டியில் வருவானாம் ,அவன் வண்டியில் வருபோது எதிரே வருபவர்கள் ஒதுங்கி வழி விட வேண்டும் அப்படி வரும் போதுபாதை சிறியதாகவும் , சரியில்லாததாலும்    உடனடியாக ஒதுங்கி வழிவிட முடியாது .அப்படி உடன் ஒதுங்காதவர்களை பூட்ஸ் காலால் மிதித்து கீழே தள்ளி விடுவானாம் . இது பற்றி கூலி ஆட்கள் சுவாமிகளிடம் கூறினார்கள் .அதற்கு சுவாமிகள் அவர்களிடம் நான் எது சொன்னாலும் செய்வீர்களா என்று கேட்டார்கள், செய்கிறேன் என்று அவர்கள் கூறியதும் நீங்கள் கூட்டமாக செல்லுங்கள் போலீஸ்காரன்  வந்தவுடன்   அவனை கீழே தள்ளி உங்களுடைய செருப்பை இடது கையில் எடுத்து நன்றாக அடியுங்கள் அடித்து விட்டு வந்து விடுங்கள் பார்த்து கொள்கிறேன் என்றார் .
அவர்கள் அதே போல் அடித்தார்களாம் .போலீஸ்காரன் ஓடி சிலரை கூட்டி வந்து    அடித்தவர்கள் அனைவரையும் சிறையில் போட்டான்.அவர்களின் மனைவிமார்கள் அனைவரும் சுவாமிகளிடம் கூறி அழுதார்கள் .சுவாமிகள் வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாம் அரிசி பருப்பு மட்டும் கொடுக்க சொன்னார் ,பின்பு சிறையில் உள்ளவர்களிடம் கோர்ட்டில் எப்படி அடித்தீர்கள் என்று  கேட்கும் போது  செருப்பால் அடித்தேன் என்று கூறும்படியும் எந்த காரணத்தை முன்னிட்டும் மாற்றி சொல்லக்கூடாது என்று தகவல் தரும்படி கூறினார் .
கோர்ட்டில் இது  குறித்து விசாரிக்க அவர்கள் அனைவரும் செருப்பால் தான் அடித்தோம் என்று கூற அனைவரையும் விடுதலை செய்து போலீஸ் காரனுக்கு தண்டனை கொடுத்தார்கள் ,அவனுக்கு வேலை போகும் சூழ்நிலையும் ஏற்பட்டது. பின்பு சுவாமிகளிடம் வந்து மன்னிப்பு கேட்டானாம் .

அந்த காலத்து சட்டம் அப்படி இருந்தது.
"செருப்பால் யாரையும் அடிக்க கூடாது . அடித்தால் அவனுடைய பாவம் முழுவதும் ஒட்டி கொள்ளும் ( அடிபட்டவனின் பாவம் ) அடித்தவனின் புண்ணியம் அடிபட்டவனுக்கு போய் விடும்..அதற்கு தான் இடது கையால் அடிக்க சொன்னார் சுவாமிகள்"  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக