பரிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரிகாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 ஜூலை, 2011

சுவாமிகள் மோளாம்பாக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு அய்யரும் அவர் மனைவியும்  வந்து அழுதார்கள் ( இருவரும் தானதருமங்கள் செய்வதில் சிறந்தவர்கள்) .ஏன்அழுகிறீர்கள்  என்று சுவாமிகள் கேட்க அவர் எங்கள் குடும்பத்தில் அனைவரும் சிறு வயதில் நன்கு இருப்பார்கள் பதினாறு வயதானவுடன் கைகால்கள் விளங்குவதில்லை முடமாகிப்போகிறது .கட்டிலிலே படுத்த படுக்கையாக உள்ளார்கள் என்னவென்று தெரியவில்லை என்றார்கள் .

உண்மையிலே தெரியாதா என்று சுவாமிகள் கேட்டார்?

தெரியாது என்று அவர்கள் கூற 

உன் மூதாதையர்கள் முக்கால் பங்கு தங்கம் கால் பங்கு பஞ்சலோகத்தால் ஆன சக்தி விக்ரகத்தை   திருடி எடுத்து நாட்டுகோட்டை செட்டியார் ஆடைஆபரணங்களை யும்  விக்ரகத்தை இடுப்பு அருகே அறுத்து  பாதிப்பாதி    படையாச்சி மேல் பாகத்தையும் அய்யர் உனது பாட்டன் கீழ் உள்ளதையும் எடுத்து கொள்ளவில்லையா ?    மேலும் உனது பாட்டன் கோயில் நிலம் ஆறு காணியை அவன் பேருக்கு பட்டா செய்து கொள்ள வில்லையா?
 மூன்று மாதத்தில் அவனுக்கு பைத்தியம் பிடிக்கவில்லையா ? அவன் பெண் மேளக்காரனுடன் சிநேகிதம் வைத்து சொத்துக்காக கொலை செய்யவில்லையா? இந்த பஞ்சமா பாதகங்கள் செய்ததினால் தானடா உன் வீட்டு குடும்பத்தில் பதினாறு வயது ஆனதும் கை கால் முடங்கிபோகிறது .அம்மன் விக்ரகத்தை  பின்னப்படுதியதால் வந்தது என்று சுவாமிகள் கூறினார். ஆமாம் சுவாமி பாட்டன் காலத்தில் இது போல் நடந்தது என்று ஐய்யரும் ஒத்துகொண்டார் .

இதற்கு எல்லோரும் கூடி சாந்தம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.
அதற்கு எல்லோரும் கூடி செய்வது கடினம் மற்றவர்கள் வரமாட்டார்கள் ,ஐயர்  மனைவி நாங்கள் என்ன பாவம் செய்தோம் ,எங்களுக்கு நீங்கள் தான் வழி காட்ட வேண்டும் என்று அழுதார் .பிறகுதான் சுவாமிகள் மற்றவர்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை உனது பிள்ளைகள் அது போல் அவஸ்தை வராமல் இருக்க வழி சொல்கிறேன் என்றார். 

பரிகாரமாக சுவாமிகள் பசுமாட்டை கன்றுடன் யாருக்காவது தானமாக கொடுக்க சொன்னார் .
ஜில்லா விட்டு ஜில்லா பிள்ளையாரை திருடி எடுத்து வந்து வழிபட சொன்னார் .
வருடம் மூன்று பேருக்கு தாலி, கூறை   சேலை வாங்கி கொடுக்க சொன்னார்.

அவர்களும் சுவாமிகள் கூறியபடி இருப்பதிலேயே நல்ல நல்ல பசுமாட்டை கன்றுடன் தானம் செய்தனர்,அவர்கள் அப்பா திருடி எடுத்து வந்த பிள்ளையாரை தான் அவர்கள் வழிபடுவதாக சொன்னார்கள், தாலியும் கூறை புடவையும் வாங்கி கொடுத்தனர் , 4000  பேருக்கு அன்னதானமும் செய்தனர் .
இப்போது சுவாமிகள் அருளால் நலமாக உள்ளனர்.




வியாழன், 13 ஜனவரி, 2011

வயது அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக

வயது  அதிகம் ஆகி திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் ஆக சூரிய உதயத்திற்கு முன் குளித்து விட்டு தனியாக இருக்கும் பிள்ளையாருக்கு
( வீதியிலோ,குளக்கரையிலோ,ஆற்றங்கரையிலோ உள்ள பிள்ளையார் ) அகல் விளக்கு ஏற்றி கற்பூரம் கொளுத்தி வலது கை பக்கம் ஒன்பது சுற்றும் இடது கை பக்கம் பத்து சுற்றும் ( சக்திக்கு ஒரு சுற்று கூடுதலாக ) சுற்றிவிட்டு பிள்ளையார் தலையில் மூன்று கொட்டுக்கள் கொட்டி விட்டு ( நீ தான் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறாய் எனக்கு நல்லபடியாக நல்ல குணமுள்ளவனை மணம் முடித்துவை)   வணங்க வேண்டும். நெய்வேத்தியம் பனைவெல்லம் அல்லது வெல்லம் அதன் மேல் நெய் கொஞ்சம் ஊற்றி வைக்க வேண்டும். விக்னம் அற விநாயகனை தொழு.உமா மகேஸ்வரி தன் பிள்ளைகளை கொண்டே மக்களுக்கு ஏற்படும் கஷ்டங்களை நீக்குகிறார்.

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக

திருமணம் ஆகாதவர்களும், பிள்ளைபேறு இல்லாதவர்களும்  நான்கு வெள்ளிகிழமை சுமங்கலிக்கு எண்ணை தேய்த்து குளிப்பாட்டி சாப்பாடு போட்டு சாப்பிட்ட இலைகளை குறை உள்ளவர்களே எடுக்கவேண்டும்.  

கூடாத கல்யாணத்தை கூட்டுவிப்பது

  இடது கை பக்கமுள்ள கோயில் உண்டியலில் கல்யாணம் ஆகாத பேத்தியின் கழுத்தில் தாத்தாவே தாலி கட்டி பின் தாலியை உண்டியலில் போட வேண்டும். அப்படி செய்தால் கூடாத கல்யாணமும் கூடும்.

சனி, 8 ஜனவரி, 2011

குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு

ஒரு வண்டி ஓட்டுனர்  கல்யாணமாகி சிலவருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை என்று சுவாமிகளிடம் கூறினார் .அதற்கு சுவாமிகள்அவரது மனைவியை  இலந்தை இலை ஓர் கைப்பிடி, பூண்டு 5 பல் , மிளகு 5 , தூரமான நாள் முதல் 15 நாட்கள்  வரை தொடர்ந்து 3 தூரங்கள் சாப்பிடுமாறு கூறினார். 5 வாரம் வெள்ளிகிழமைகளில் ஒருவருக்கு சாப்பாடு போட்டு இலையில் வெல்லம் எள் பிடித்து வைக்க வேண்டும் என்றார்.

அவர்களும் சுவாமிகள் கூறியது போல் செய்ய அழகான குழந்தை பிறந்தது .

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கெட்ட நேரம் விலக

கெட்ட நேரம் விலக

குறைந்தது   108 பேருக்கு சாப்பாடு போட்டு அவர்கள் சாப்பிட்ட இலைகளை எல்லாம் எடுக்க வேண்டும் .
குறைந்தது இரண்டு பேருக்காவது அரைசவரன் எடைக்கு குறையாமல் மாங்கல்யம் வாங்கி  ஏழை எளியவர்களுக்கு திருமணத்திற்கு  கொடுக்கவும்.
  

சனி, 27 நவம்பர், 2010

காலசர்ப்ப யோகம் நீங்க

காலசர்ப்ப யோகம் நீங்க
பற்று அற்ற துறவிக்கு அன்னம் அளித்து அவரை 48 நாட்கள் வலம் ஒன்பதும் இடம் பத்தும் சுற்றிவந்தால் காலசர்ப்ப யோகம் நீங்கும் .

நம் சுவாமிகளை 108 சுற்றுகள் சுற்றி விட்டு வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சுவாமிகள் கோயிலுக்கு சென்று கோயில் ஆருகில் இருக்கும் ஓடையில் குளித்து ஈரத் துணியுடன் அழுக்கு சுவாமிகள் சமாதியை நான்குமுறை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே நீங்கும் .

என்றென்றும் காற்றாக உலாவிக்கொண்டு இருக்கும் துறவிகள் ,சித்தர்கள், முனிவர்கள் சமாதியை அங்க பிரதஷ்டம் செய்தால் தன்னாலே எல்லா கஷ்டங்களும் குறைகளும் விலகி விடும் .
முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்           

வியாழன், 25 நவம்பர், 2010

ராகு திசை

ராகு  திசை

ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துக்கொண்டே இருக்கும்

ராகு  திசை அல்லல் விலக

பசுவுக்கு அவுத்தி கீரை கொடுக்க வேண்டும் . செவ்வாய் கிழமை , வெள்ளி கிழமைகளில் பச்சரிசியும் வெல்லமும் சேர்த்து கொடுக்க வேண்டும் .
வெள்ளிகிழமைகளில் மாட்டின் பின்புறத்தை கழுவி மஞ்சள் குங்குமம் இட்டு வலம் ஒன்பதும் இடம் பத்தும் ( சக்திக்கு ஒரு சுற்று அதிகம் ) சுற்றிவிட்டு பின்புறத்தை தொட்டு கும்பிடவேண்டும் ,விழுந்தும் கும்பிடவேண்டும்       

புதன், 17 நவம்பர், 2010

கெட்ட நேரம் , கிரக தோஷம் விலக

கெட்ட நேரம் , கிரக  தோஷம் விலக

பௌர்ணமி ,அமாவாசை இரவு 12 மணிக்கு சுவாமிகளை ஒன்பது சுற்று வலம்புரி ஒன்பது சுற்று இடம்புரி சுற்றி 108 வலம்புரி சுவாமிகளை மனதில் ஓம் சற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் துணை என்று மனதில் கூறிக் கொண்டே சுற்றிவர கெட்ட நேரம் ,கிரக தோஷம் எல்லாம் விலகும் .

செவ்வாய், 16 நவம்பர், 2010

மாங்கல்ய தோஷம் நீங்க

மாங்கல்ய தோஷம் நீங்க .

ஒரு முறை மாங்கல்ய தோஷம் உள்ள ஒரு பெண் மாங்கல்ய தோஷம் நீங்க பரிகாரம் சுவாமிகளிடம் கேட்டார் .
அதற்கு சுவாமிகள் மாங்கல்ய தோஷமோ அல்லது எந்த தோஷம் இருந்தாலும் இரவு   வாழை மரத்தையும் அருகில் வைத்து இருந்து அறுபத்து  மூன்று வயது நிரம்பிய பிரம்மசாரி சுவாமியார் அல்லது துறவி உடுத்தியிருந்த துணி மீது படுத்து,  காலை ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு பிள்ளையார் கோயிலைஒன்பது முறை  சுற்றி பின் வாழை மரத்தை வெட்டினால் சரியாகும் என்றார் .
அந்த பெண் துறவி யார் இருகிறார்கள் ? நீங்கள் தான் சுவாமி துறவி நீங்கள் தோஷம் நீங்க அனுமதியும் அருள் புரிய வேண்டும் என்று அழுதார்
சுவாமிகளும் அருள் புரிந்தார் சுவாமிகளின் ஆருளால் தோஷம் நீங்கியது .

சனி, 9 அக்டோபர், 2010

நியாயமான வழக்கு வியாஜங்களில் வெற்றி பெற

ஒரு பெரியவர் ஓய்வு  ஊதியம் ( பென்ஷன் )  கிடைக்காமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டார். இது குறித்து சுவாமிகளிடம் அவர் கேட்கையில் சுவாமிகள் கூறியது

நியாயமான  வழக்கு வியாஜங்களில் வெற்றி காண்பதற்கு பூச நட்சத்திரத்தில் நல்ல வேளைசெடிக்கு சுவாமிகளை நினைத்து காப்பு கட்டி தினமும் அச் செடியெய் மூன்று சுற்றுக்கள் சுற்றி வரவும் வழக்கு நிம்மித்தம் வெளியில் செல்லும் போது ஒரு இலையை பறித்து எடுத்து செல்ல அவ்வழக்கு வெற்றி கிட்டும்.