வியாழன், 21 ஏப்ரல், 2011

சாதுவின் மகத்துவம்

உலகை ரட்சிக்கும் மகாவிஷ்ணு ஈஸ்வரரிடம் தன்னிலும் அதிக மகத்துவம் உடையவர் யாராகிலும் உண்டா என கர்வத்தோடு  கேட்டார். சாதுவின் பெருமை அறியாதவர்கள் உண்டா என ஈஸ்வரர் பதில் சொன்னார்.அப்படி என்றால் காட்டு என்றார்  விஷ்ணு.அதற்கு ஈஸ்வரர் ஒரு காட்டில் ஒரு பாழ் அடைந்த கிணற்றில்  ஒரு ஓணான் இருக்கிறது   அதனை கேள் என்றார்.விஷ்ணு ஓணானை கேட்டதற்கு விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து இறந்தது .சில காலம் கழித்து விஷ்ணு ஈஸ்வரரிடம் ஓணான் இறந்ததை சொன்னார்.மற்றொரு காட்டில் மரத்தின் மேல் ஓர் அன்னபட்சி உட்கார்ந்து இருக்கும் அதை கேள் என்றார். விஷ்ணு அன்னபட்சியை  கேட்க அன்னபட்சி விஷ்ணுவின் கால்களில் விழுந்து இறந்தது. விஷ்ணு கோபம் அடைந்து இனி இந்த பூலோகத்தை ஏறத்சிக்க மாட்டேன் என்றார் . ஈஸ்வரர் இந்த உலகத்தில் நீதி நேர்மை தர்மம் தவறாத அரசன் இருக்கிறானா என்று கேட்க மகாவிஷ்ணு இருக்கிறார் என்று சொன்னார்.அரசனுக்கு என்ன குறை என்று கேட்டார்.பிள்ளை இல்லாத குறை மட்டும் என்றார் மகாவிஷ்ணு . அப்படியானால்   அந்த அரசனுக்கு குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை கேள் என்றார். குழந்தை இறந்தால் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று மகாவிஷ்ணு கூற ஈசன் குழந்தை சாகாது நீ பொய் கேள் என்றார். விஷ்ணு சந்நியாசி வேடத்தில் அந்த அரசனிடத்தில் குழந்தை பேசும் என்றார். பிறந்த குழந்தையை தங்க  தாம்பாளத்தில் தாதியர்கள் ஏந்திவர விஷ்ணு குழந்தையை பார்த்து சாதுவின் மகிமை எத்தன்மையது என்று கேட்க? குழந்தை நான் ஓணான் ஆக இருந்தபோது சிவ சிவா என்று உச்சரித்து கொண்டு இருந்தபோது  நீங்கள் வந்து கேள்வி கேட்டீர்கள் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன், அடுத்து அன்னபட்சியின் உள்ளே சென்றேன் மறுபடியும் நீங்கள் சாதுவின் மகத்துவம் என்ன என்று கேட்டதற்கு மறுபடியும் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன்.பிறகு இப்போது அரசனின் குழந்தையில் புகுந்து பிறந்தேன் . நான் இப்பொழுது உலகத்துக்கெல்லாம் குழந்தை . இதுதான் சாதுவின் மகத்துவம் என்றது .              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக