செவ்வாய், 1 மார்ச், 2011

மதனகாமப்பூ

   ஒரு ராஜாவும் மந்திரியும் ஒரு நாட்டில் இருந்தார்கள் இருவருக்கும் ஒரே வயது நல்ல நண்பர்களாகவும் இருந்தார்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்தது .
இருவரும் பெண் கொடுத்து பெண் எடுப்பது என்று சத்தியம் செய்து கொண்டனர் .சிறிது காலம் கழித்து ராஜாவிற்கு மூன்று பெண்களும் மந்திரிக்கு ஆண் குழந்தை ஆமையாக பிறந்தது.
குழந்தைகள் பருவமடைந்தார்கள்.ஏற்கனவே செய்த சத்தியத்தின்படி மந்திரி ராஜாவிடம் பெண் கேட்டான்.அரசன் தருகிறேன் என்று ஏமாற்றி இரு பெண்களை வேறு இடத்தில் மனம் செய்து கொடுத்தான் இறுதியாக ஏமாற்ற என்ன செய்யலாம்  ஆமைக்கா  பெண் கொடுப்பது என்று இருந்தான்.இளவரசி திட்டம் தீட்டினாள் மந்திரி மகன் மதனகாமப்பூ எடுத்து வந்தால் மணப்பதாக கூறினாள்  

மதனகாமப்பூ  கடலில் உள்ள ஏழு கன்னிகளில் இளையவளிடம் உள்ள பூ யாரும் அங்கே செல்ல முடியாது அப்படியே போனாலும் உயிரோடு திரும்பி வரமுடியாது எனவே அவ்வாறு கூறினாள்.  மந்திரி மகன் இதை கேட்டவுடன் மணந்தால் ராஜாவின் மகளை மணப்பது இல்லையேல் மரணமடைவது என்று  முடிவு செய்தான்.தந்தையிடம் என்னை கடலில் போட்டு விடுங்கள் நான் மதனகாமப்பூவுடன் வருகிறேன் என்றான் . மந்திரி கவலையுடன் கடலில் சென்று போட்டு வந்தான் .

ஆமை நீண்ட நாட்கள் கடலில் நீந்தியது.ஒருநாள் சூரியனை அடைந்து சூரியனுக்கு தெரியாமல் அவனது ஆயுதத்தை மறைத்து வைத்து விட்டது .சூரியன் ஆயுதத்தை கேட்க எனக்கு தேவையானதை கொடுத்து விட்டாயானால் தருகிறேன் என்றது ஆமை .என்ன வேண்டும் என்று சூரியன் கேட்க தன் வாழ்கையும் மதனகாமப்பூ பற்றியும் ஆமை  சூரியனிடம் கூறியது
அதை கேட்ட சூரியன் அது என்னிடம் இல்லை ஏழு கன்னிகள் இருக்குமிடத்தில் இளைய கன்னியிடம் உள்ளது உனக்கு எனது சக்தியை தருகிறேன் நீ நினைத்தபோது மனித ரூபத்தை அடையலாம் என் கவசங்களையும் நீயே வைத்துகொள் என்று சூரியன் கூறியது மேலும் மதனகாமப்பூ எடுக்கும் உபாயத்தை கூறியது காலையில் ஏழு கன்னிகள் குளிக்கும் போது நீ அவர்களுடைய துணிகள் அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடு அவர்கள் என்ன பயமுறுத்தினாலும் கொடுக்காதே இறுதியில் என்ன வேண்டும் என்று கேட்பார்கள் மதனகாமப்பூ வேண்டும் என்று கேள் ஏன் என்று கேட்டால் உனது கதையை கூறு என்றது சூரியன் அவ்வாறே செய்தது ஆமை .அச்சத்தில் வெளியே வர இயலாத கன்னிகள் மதனகாமப்பூ கொடுப்பதாக சத்தியம் செய்தபின் ஆமை துணிகளை கொடுத்தது .பின்பு அவர்களிடம் மதனகாமப்பூ பெற்று மேலும் பல வரங்களையும் பெற்று வந்தது .
ஆற்றங்கரையில் ஓரத்தில் உள்ள   மரப் பொந்தில் சூரியன் கொடுத்த கவசங்களை மறைத்து வைத்து நாட்டுக்குள் வந்தது .மதனகாமப்பூ கையில் இருந்ததால் நீண்ட தூரத்திற்கு வாசனை கமகம என்று வந்தது. பேசியபடியே மன்னன் பெண்ணை அழுதுகொண்டே மணம் முடித்து வைத்தான்.மந்திரிகுமாரன் யாருமில்லாதபோது உருமாறி வாழ்ந்து கொண்டு இருந்தான் .காலையில்  உருமாறி குளியல் அறைக்கு சென்று  சுடுதண்ணீரில் நன்கு குளிப்பான்.
சிலநாட்கள் கழித்து பக்கத்துக்கு நாட்டரசன் படை எடுத்து வந்தான் இரு மருமகன்களும் சண்டையிட்டு தோற்று திரும்பினர் அப்போது மந்திரி குமாரன் மரத்தின் பின் மறைந்து தோற்று திரும்பியவர்களையும் படையினரையும் பார்த்து குரல் கொடுத்தான் மற்றவர்கள் அசரீரி என்று நினைத்தனர் .அப்போது அவன் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் உங்கள் காதுகளின் முனைகளை அறுத்துகொண்டால் ஜெயிப்பீர்கள் என்றான் அனைவரும் அப்படி செய்ய மந்திரி குமாரன் உருமாறி போரிட்டு நாட்டை மீட்டான்.ஒருநாள் மந்திரிகுமாரன் மனைவி சதிதிட்டம் தீட்டினாள் குளியல் அறையில் அவன் குளிக்கும் போது நெருப்பு வைத்துவிட்டாள்.    சூரியனிடம் வரம் பெற்றதால் நெருப்பு ஒன்றும் செய்யவில்லை அப்போதுதான் அவன் தன்  அழகான சொருபத்தை காட்டினான் .
மனைவி செய்த தவறுக்கு மனமார மனிப்பு கேட்க மந்திரி குமாரன் அவளை மன்னித்து ஏற்றுக்கொண்டான் . 
            .
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக