புதன், 27 ஜூலை, 2011

ஒருமுறை தெலுங்கில் காண்டம் புத்தகம் ஒன்றை படித்தார்கள். அதில் துறவியிடம் அன்பை பெறுவது முக்கியம்,துறவி என்றால் தனக்கென்று ஒரு பொருள் வைத்திருக்க கூடாது, உயிர் அணுக்கள் யார் தலையில் வைத்து இருக்கிறார்களோ, அவர்களே துறவி,குறிஞ்சிப்பூ 12  வருடங்களுக்கு ஒரு முறை பூப்பது போல் 12 வருடங்களுக்கு ஒரு முறை வெளிப்படும் என்றும்,அச்சத்தை தவிர்த்து இருப்பவரே துறவி என்று இருந்தது .
இது போன்று யார் உள்ளார்கள் , நம் சுவாமிகள் தான் உள்ளார்கள், வேறு யாருமில்லை என்று பேசிக்கொண்டார்கள்.இதை ஒட்டு கேட்டுக்கொண்டு இருந்த அந்த வீட்டு பெண்கள் இருவரும் சுவாமியின் கால்களை கெட்டியாக பிடித்து கொண்டு சுவாமிகளின் கைகளால் தாலி கட்டுமாறு கேட்டனர்.அதற்கு சுவாமி சிரித்து கொண்டே கொட்டாங்குச்சியில் கட்டுகிறேன் ,வயதான காலத்தில் காட்டிற்கு சென்று விட்டால் ஒருத்தியை நண்டு பிடித்து வா என்று கூறலாம்,ஒருத்தியை நரி பிடித்துவா என்று கூறலாம் என்றார் . பிறகு எனக்கு இது வேண்டும்,அது வேண்டும் என்றால் நான் எங்கே போவது,பிறகு என் தாடியை பிடித்து இழுப்பீர்கள்  என்றார்.  நான் இரண்டு முடிச்சு தான் போடுவேன் மூன்றாவது முடிச்சு உனது கணவன் தான் வந்து போடுவான் என்றார் . அது முதல் கல்யாணம் ஆகாத பெண்கள் தாலி காட்டுங்கள் என்பார்களாம்.சுவாமிகளின் கையால் தாலி கட்டினால் நல்ல கணவன் கிடைப்பான் என்று அடம்பிடித்து கட்டி செல்வார்கள் , சுவாமிகளும் ரசமணியை கழுத்தில் போட்டு விடுவார் .
 சுவாமிகள் கொடுக்கூரில் இருந்த போது, ஒரு பெரியவருக்கு உடல் நலம் மோசமானவுடன் கூடி வந்தார்கள் .

சாகிற நேரத்தில் சங்கரா போட்டால் பிழைக்க முடியுமா ? 
தர்மம் ஏதும் செய்யவில்லை , புண்ணியமும் ஏதும் செய்யவில்லை ?
எப்படி பிழைக்க வைப்பது  என்று கூறி அனுப்பி விட்டார் . 
ஒரு ஊரில் ஒரு பெரியவருக்கு உடல் நலமில்லாமல் இருந்தது .மருத்துவர்கள் கை விரித்து விட்டார்கள். சுவாமிகளிடம் கூடி வந்தனர் .எங்கள் ஊர் ஜோசியர் மிகவும் திறமை வாய்ந்தவர்,எங்கள் மகனின் ஜாதகத்தை கணிக்கும்  போது குழந்தையின் தகப்பனுக்கு ஆயுள் 80 வயது வரை கெட்டி என்று கூறியுள்ளார் .மேலும் பையனுக்கு இத்தனை வயது நடக்கும் போது வயல்,பம்ப் செட் ,வீடு அமையும் என்றார் அது போலவே நடந்தது . இப்போது இவருக்கு வயது 60 தான் ஆகிறது ,நீங்கள் மனது வைத்தால் குணமாக்கலாம் என்றார்கள் .அந்த ஆள் சுவாமிகள் அருகில் இருக்கும் போது நன்றாக இருக்கிறார் , அந்த பக்கம் தூக்கி கொண்டு செல்லுங்கள் என்று சுவாமிகள் கூற வெளியே தூக்கி சென்றால் மூச்சு முட்ட ஆரம்பித்தது. சுவாமிக்கு தெரிந்து விட்டது ,இவனது ஆயுள் முடிந்து விட்டது  என்று. ஜோசியர் போட்ட கணக்கு தான் என்னவென்று தெரியவில்லை .பின்பு எல்லோரையும் வெளியே அனுப்பிவிட்டு அந்த பெண்ணிடம் உண்மையைச் சொல் உன் கணவனுக்கு மட்டும் முந்தி விரித்தாயா ? மற்றவர்களுக்கும் விரித்தாயா ? என்று கேட்க ,அப் பெண் என்னுடைய அத்தை பசங்களுடன் மணம் முடித்தபிறகு கூட உறவு வைத்து கொண்டு இருந்தேன் என்று கூறினாள். அப்போது சுவாமிகள் கூறினார் ஜோசியர் கூறியது உண்மை,உன் பிள்ளை இவனுக்கு பிறக்கவில்லை , உன் அத்தை பையனுக்கு தான் பிறந்துள்ளான், அவனுக்குதான் ஆயுசு கெட்டி ,இவனுக்கல்ல என்று கூறி தூக்கி செல்லுமாறு  கூறினார்.சுவாமிகள் இருக்கும் இடத்தில் இருந்து சிறிது தூரம் செல்வதற்குள் உயிர் பிரிந்து விட்டது .
ஒரு முறை சுவாமிகளிடம் ஒரு ஜோசியர் வந்திருந்தார்,அப்போது பல்லி ஒன்று கத்தியது .உடனே அவர் சுவாமிகளிடம் நாளை தங்களிடம் வரும் ஒருவருக்கு உயிர் போகப்போகிறது என்று பல்லி சொல்லுகிறது என்றான் .அதற்கு சுவாமிகள்  என்னை நம்பி வருபவனுக்கு எந்த ஆபத்தும் வராது ,அவன் உயிரும் போகாது , முதலில் நாளை அந்த பல்லி உயிரோடு உள்ளதா பார் என்று கூறினார் .எனது ஜோசியம் இதுவரை பொய்த்ததில்லை,என்றான் ஜோசியர் .நாளை வாடா
பார்க்கலாம் என்றார் சுவாமிகள் .
மறுநாள் ஜோசியர் காலையில் வந்தான் ,ஜோசியர் கூறியபடியே, உடல் நலம் சரியில்லாமல் ஒருவர் வந்தார் ,அவருடன் வந்தவர்கள் உடல் நலம் மோசமாக உள்ளது ,மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர் ,நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று அழுதனர். சுவாமிகள் கவலை படவேண்டாம் என்று கூறி திருநீறு கொடுத்தார்.உடல் நலம் சரி இல்லாமல் இருந்தவர் பத்து நிமிடத்தில் எழுந்து உட்கார்ந்தார் .அனைவரும் சந்தோஷப்பட்டனர்.திடீரென மேலே உள்ள கூரையில் சத்தம் கேட்டது.சுவாமிகள் மேலே என்ன சத்தம் ஒரு குச்சியை வைத்து தட்டுங்கள் என்றார்  .மேலே உள்ள கூரையை தட்ட ஒரு பாம்பு கீழே விழுந்தது. பாம்பு வாயில் பல்லி இருந்தது,என்ன ஜோசியரே என்று சுவாமி கேட்க, ஜோசியர் எதுவும்  கூறவில்லை .

ஒரு ஆளிடம் சுவாமிகள் உன் வீட்டில் ஏதேனும் சினையாக உள்ளதா என்று கேட்டார் . நாய் மட்டும் சினையாக உள்ளது என்றார் அவர் .நாய் குட்டி போடும் போது ஒரு குட்டியை  மையால் குறியிட்டு நேரத்தை குறித்து கொள்,பிறகு உனக்கு பேரனோ,பேத்தியோ பிறந்து இருப்பதாக கூறி ஜோசியரிடம் ஜாதகம் கணிக்கச்சொல் என்றார் .அவ்விதமே அவர் ஜோசியரிடம் சொல்ல ஜோசியர் ஜாதகம் கணித்து என்ன என்னவோ எழுதி கொடுத்து ஆயுள் 80 என்று கணித்தார் .பிரக்ஹு தான் நாய் என்று சொன்னார்கள் .நாயிக்கு ஆயுள் 80 தாடா என்று கேட்டார் சுவாமிகள்?


    
ஒரு ஊரில் ஒரு பெரிய பணக்காரன் இருந்தார் .அவர்  கோயில் ஒன்று கட்ட விரும்பி  வேலையை ஆரம்பித்தார், கட்டும் போது பயங்கர வறுமையை அடைந்தார்.கடன் மிகுதியானது,வீடு மற்றும் நிலங்களை வைத்து கடன் வாங்கியதால் குறிப்பிட்ட நாளில்  மீட்க முடியவில்லை, கடன் கொடுத்தவர்கள் ஜப்தி செய்ய வந்தனர் .இனி உயிரோடு இருப்பது என்ன பயன் எங்கேயாவது சென்று தற்கொலை செய்து கொள்ளலாம் என்று காட்டிற்கு சென்றார் .அப்போது சுவாமிகள் ஒரு பாறையின் மேல் அமர்ந்து இருந்தார்.பணக்காரனை கூப்பிட்டு எங்கே போகிறாய் என்றார்? பணக்காரன் நடந்தவற்றை எல்லாம் கூறினார் .
சுவாமிகள் நான் எது கூறினாலும் செய்கிறாயா என்று கேட்டார் .பணக்காரன் நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்று கூறினார் . பின்பு அவரிடம் சுவாமிகள் அவரிடம் உனக்கு 45 நாட்கள் நேரம் சரியில்லை,எனவே பக்கத்தில் உள்ள சேரிக்கு சென்று தோட்டி வேலை செய் என்றார். அவரும் அது போல் சுவாமிகள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கௌரவம் பார்க்காமல் தோட்டி வேலை செய்தார் . 25 நாட்கள் ஆனது அன்று குப்பையை கொட்டும் போது குப்பை தொட்டியில் ரூபாய் 10000 துணியில் சுற்றி இருந்தது கிடைத்தது .அதை எடுத்து பத்திரப்படுத்தி மேலும் 20 நாட்கள் தோட்டி வேலையை செய்தார்.45 நாட்கள் ஆனவுடன் சுவாமிகளிடம் அப்பணத்தை எடுத்து சென்றார் .சுவாமிகள் அப்பணத்தை கொண்டு கடன்களை எல்லாம் அடைத்து விடு என்றார் . அவரும் கடன்களை அடைத்து வீடு மற்றும் நிலங்களை மீட்டார் .மீண்டும் அவர் சுவாமிகளை வந்து தரிசனம் செய்து நிலத்தில் என்ன பயிரிடுவது என்று கேட்டார். மறுபடியும் சுவாமி நான் எது கூறினாலும் செய்வாயா என்று அவரிடமுள்ள நோஞ்சான் மாடு இரண்டு தருமாறு கேட்டான் ,வசதி வந்தவுடன் பணம் கொடுப்பதாக கூறினான் . ஜமீன்  வேலையாளை கூப்பிட்டு இருப்பதிலேயே நல்ல மாடு இரண்டும் ,ஒரு வண்டியும் பூட்டி கொடு ,என்றார் திருப்பி தர தேவை இல்லை  என்றார். விட்டுக்கு திரும்பும் வழியில் குப்பையில்  போட இருந்த மூன்று மூட்டை கொத்தமல்லியை ஒரு விவசாயி மாட்டு  வண்டியில் போட்டான்.பணக்காரன் சுவாமிகள் கூறிய படி வெங்காயத்தையும் நடுநடுவே கொத்தமல்லியும் விதைதான்  .எல்லோரும் கேலி செய்தனர் ,இவர்  சுவாமிகள் கூறியதை வேத வாக்காக நினைத்து பயிரிட்டார். தீடீரென்று வெங்காயம் விலையும்,கொத்தமல்லி விலையும் எக்கசக்கமாக ஏறி விட்டது .நிலத்தில் உள்ளவற்றை அறுவடைக்கு முன்னமே விலை பேசி வாங்க பொடி போட்டனர்.நல்ல விலைக்கு விற்று பழைய நிலைமையை அடைந்தார் பணக்காரன் .சுவாமிகளிடம் வந்து கோவில் கட்டுவது குறித்து கேட்க சுவாமிகள் எல்லோரிடமும் சிறிது பணம் வாங்கி கட்டு ,தனியாக செய்யாதே என்று அறிவுரை கூறினார் .

எப்படி பணக்காரன் பழைய நிலைமையை அடைந்தார்?

முதலில் சுவாமிகள் ஆசீர்வாதம் ,
இரெண்டாவது சுவாமிகள் மேல் அவர் கொண்ட நம்பிக்கை ,
மூன்றாவது கௌரவம் பார்க்காமல் சுவாமிகள் சொன்னதை வேத வாக்காக ஏற்று நடந்தது .
 

செவ்வாய், 26 ஜூலை, 2011

ஒருமுறை பணக்கார பையனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.சித்தபிரமையை யாரிடம் அழைத்து சென்றாலும் சரி செய்ய முடியவில்லை.சுவாமிகளிடம்  அழைத்து வந்தார்கள்.நான் சொல்வது போல் செய்வீர்களா என்று சுவாமிகள் கேட்டார்.செய்கிறோம் என்று அவர்கள் கூற,ஒன்றுமில்லை இரு விலை மாதர்களை கூப்பிட்டு இவனையும் தனி அறையில் விட்டு விடுங்கள் என்றார் .
அதே போல் அவர்கள் இருவரை அழைத்து வந்து தனி அறையில் விட்டனர்.
அவர்கள் அவனிடம் சல்லாபம் செய்ய விந்து வெளியானது , விந்து வெளியானதும் அவன் சித்தபிரமையும் விலகியது. பழைய நிலைமையை அடைந்தான் . காரணம் விந்து தலைக்கு ஏறி இருந்தது,அதை விடுவித்தவுடன் சரியாகி விட்டது என்று சுவாமிகள் கூறினார்.
மந்திரவாதிகளில் மலையாளிகள் திறமை வாய்ந்தவர்கள்.ஒரு பெண் ஆணை பார்த்து அவனை அடைய ஆசைப்பட்டால் இரண்டு வகையான வேர்கள் எடுத்து மந்திரம் கூறினால் ஆண்  அந்த பெண்ணுக்கு அடிமையாகி விடுவானாம்.அப்படி ஒருவனுக்கு செய்துவிட்டார்கள் , அவனை அவளிடமிருந்து பிரித்து சங்கிலியால் கட்டி போட்டு வைத்து இருந்தனர்.அவன் பைத்தியம் போல் இருந்தான். எங்கே சென்றாலும் சரியாகவில்லை,பின் சுவாமிகளிடம் அழைத்து வந்தனர் .சுவாமி எட்டி ஒரு உதை விட்டாராம்,பின்புதான் அவனுக்கு சரியாகியதாம்.சிலநாட்கள் கழித்து சரியாகி விட்டதா இல்லையா என்று பரிசோதிக்க மற்றொரு மலையாளியிடம் காண்பிக்க அவன் மறுபடியும் வைத்துவிட்டானாம்.மறுபடியும் சுவாமிகளிடம் அழைத்து வந்து காண்பிக்க சுவாமிகள் சரி செய்து திட்டி அனுப்பினார். 
மந்திரத்தில் நல்லதும் உள்ளது ,கெட்டதும் உள்ளது