திங்கள், 4 ஜூலை, 2011

திருமணம்

தன்  பெண்ணுக்கு இருபத்திநான்கு வயதாகிறது எங்கு தேடியும் வரன் சரியாக அமையவில்லை என்று பெண்ணின் தகப்பனார் சுவாமிகளிடம் வந்து அழுதார் .சுவாமிகள் எதுவும் கூறாமல் இருந்தார் .பதினைந்து நிமிடம் கழித்து முடிந்து பொய் விட்டது போ என்றார் .தகப்பனாருக்கு எதுவும் புரியவில்லை.கடைக்கு வேலைக்கு சென்றால் வீட்டிற்க்கு முதலில் போ என்றார்கள் .வீட்டிற்க்கு செல்ல  புதியதாக மூன்று பேர் பெண் பார்க்க குடும்பத்துடன் வந்திருந்தார்கள் பெண் பிடித்து உள்ளது திருமணம் செய்து கொள்ள சம்மதம் நல்ல நாள் பாருங்கள் சீக்கிரம் கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்றனர்.
அப்போது தான் சுவாமிகள் சொன்னது அவருக்கு புரிந்ததாம் .

" அப்பா பைத்தியமே துணை"

ஒரு அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லை ,கை கால் விழுந்து விட்டது .மருத்துவர்கள் அனைவரும் பிழைப்பது கடினம் என்று கூறிவிட்டனர் .அவரின் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் .ஐந்து நாளில் உடல் நலம் சரியாகி விடும் என்று சுவாமிகள் கூறினார் . மறுநாள் அந்த அம்மாவிற்கு நினைவு தவறியது மீண்டும் குழந்தைகள் சுவாமிகளிடம் வந்து அழுதனர் ." அப்பா பைத்தியமே துணை"  என்று தொடர்ந்து தினமும்  சொல்லுங்கள்    பதினைந்து வருடங்களுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று சுவாமிகள் கூறினார் .

இப்போது அந்த அம்மா நன்றாக உள்ளார்கள் .

மந்திரம்

வட ஆற்காட்டில் ஒரு முறை சுவாமிகள் இருந்தபோது தினம் ஒருவர் சுவாமிகளை பார்க்க வருவார், சுவாமிகளிடம் தனக்கு மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம் .சுவாமிகள் எனக்கு மந்திரம் எதுவும் தெரியாது போடா என்று திட்டுவாராம் .அடுத்த நாளும் வந்து  மந்திரம் எதாவது சொல்லி கொடுங்கள் என்று கேட்பாராம். தினசரி வந்து இதே போல் நச்சரிப்பார்.ஒருநாள் அவர் மந்திரம் சொல்லி கொடுங்கள் என்று கேட்க  சுவாமிகள் விளையாட்டாக ஒரு துடைப்பத்தை எடுத்து கொள் " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன " என்று அடிடா எல்லாம் சரியாகி விடும் என்றார்.அவரும் அதையே சுவாமிகளை நினைத்து கொண்டு எப்போதும் சொல்லிக்கொண்டு இருந்தார் .இப்போது அவர் வட ஆற்காட்டில் பாம்பு கடி, தேள் கடி, விஷக்கடி என்று வருபவர்களுக்கு சுவாமிகளை மனதில் நினைத்துக்கொண்டு துடைப்பத்தை வைத்து அடித்து கொண்டு  " உனக்கு வலித்தால் எனெக்கென்ன எனக்கு வலித்தால் உனக்கென்ன "என்று மூன்று முறை அடிக்க விஷம் இறங்கிவிடுமாம் ,

சுவாமிகள் சும்மா விளையாட்டுக்கு சொன்னதை கெட்டியாக பிடித்து கொண்டு முழு நம்பிக்கையுடன் அவர் செய்ததால் பலித்தது . 

உழைப்பு

சில வருடங்களுக்கு முன் ஒரு ஏலேக்ட்ரிசியன் முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்யும் போது தவறி கீழே விழுந்து இறந்து விட்டார்.அவருக்கு ஐந்து பிள்ளைகள் கணவன் இல்லாத அந்த அம்மாள் பிள்ளைகளை வளர்க்க மிகவும் கஷ்டப்பட்டார் .குடியான் குப்பம் முதலியார்கள் எவரும் ஆதரவு தரவில்லை .சுவாமிகளிடம் வந்து அந்த அம்மாள் அழுதார்கள்.தெருவில் இட்லி சுட்டு விற்கிறீர்களா என்று கேட்டார் சுவாமி.நீங்கள் எது சொன்னாலும் செய்கிறேன் என்றார் அந்த அம்மாள். வீடு இருக்கிறது,தோடு அரை சவரன் உள்ளது ,வீட்டிற்க்கு பக்கத்தில் இடம் உள்ளது தோடை விற்று இட்லி பாத்திரம்,அரிசி பருப்பு  வாங்கி   சுவாமிகள் ஆசியுடன் இட்லி கடை ஆரம்பித்தார் .

முதலில் மூன்று  படி  அரிசி போட்டார்கள்,பாதிதான் விற்றது மீதியை பிள்ளைகள் சாப்பிட்டார்கள் .மறுநாள் மூன்று படியும் விற்று விட்டது .பிள்ளைகள் சாப்பிடகூட இட்லி இல்லை .அடுத்து காபியும் டீயும் போட்டனர்,பாத்து நாட்களில் ஆறுபடி வியாபாரம் ஆனது .பின்பு ஒரு ஆளை ஆட்டுக்கல்லில் மாவாட்ட வேலைக்கு வைத்தார்கள்.பின்பு பத்து படி விற்றது.வந்த வருமானத்தில் செலவு போக சேமித்து பக்கத்தில் உள்ள காலி இடத்தில் கடை கட்டி 250 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டனர் .பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார் 16 சவரன் நகை சேர்த்து பெண்ணுக்கு திருமணம் நடத்தினார் .பதினெட்டு ஆட்கள் வேலைக்கு இருந்தனர் கூரை வீடு மெத்தை வீடாகியது.பணம் கையில் 50000 உள்ளதாக சுவாமிகளிடம்  வந்து கூறினார்கள் .

உழைப்பு தான் முன்னுக்கு வரவைத்தது ,சுவாமிகள் ஆசியால் எல்லாம் நல்லபடியாக நடந்தது .

நாஷ்டா கடையில் இலாபம் உள்ளது போல் வேறு எந்த தொழிலும் லாபம் இல்லை .மளிகை கடை ,ஹோட்டல், ஜவுளி கடை இவை வைத்து ஒருவன் முன்னுக்கு வரவில்லை என்றால் வேறு எதிலும் முன்னேற முடியாது என்று சுவாமிகள் கூறினார்          

வைதீஸ்வரன் கோயில்

ஒரு பெரிய  சித்த வைத்தியர் நோய் வந்து அவஸ்தை பட எந்த மருந்து சாப்பிட்டும் சரியாகவில்லை,இறுதியில் எல்லா மருந்துகளையும் ( வீரம் போன்ற பாஷானங்களை) அருகில் உள்ள குளத்தில் போட்டு அதிலேயே விழுந்து உயிரை விட்டு விடலாம் என்று தலை முழுக  உடல் பரிபூரணமாக குணமானதாம் .அது தான் வைதீஸ்வரன் கோயில்.இப்போதும் அங்குள்ள மண்ணை எடுத்து சந்தனம் வீபூதியுடன் கலந்து கொடுக்கிறார்கள்.    

வெள்ளி, 1 ஜூலை, 2011

மாமியார் மருமகள் சண்டை

மாமியாரும் மருமகளும் எப்பொழுதும் சண்டை போட்டு கொண்டு இருப்பார்கள் .மாமியார் செருப்பை எடுத்தால் மருமகள் துடபத்தை எடுத்துகொள்வாள் .கணவன் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருந்தான் .மாமியார் செய்தது சரி என்றால் மனைவி கோவித்துகொள்வாள்.மனைவி செய்தது சரி என்றால் மாமியார் கோவித்துகொள்வாள்.இவர்களிடம் இருப்பதை விட சாமியாராக போகலாம் என்று கணவன் முடிவு செய்தான்.சுவாமிகளை கேள்விப்பட்டு வந்தான் .சுவாமிகள் ஒருவாரம் அவன் செலவுக்கு மட்டும் பணத்தை எடுத்துக்கொண்டு தாயிடமும் மனைவியிடமும் கோவித்து கொண்டு எங்கேயாவது சென்று உயிர் விடுகிறேன் என்று சொல்லிவிட்டு வர சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று கூறி வக்கீல் வீட்டில் தங்க ஏற்பாடு செய்தார் .
மாமியாரும் மருமகளும் ஊரில் உள்ள ஜோசியர்கள் ,சாமியார்கள் அனைவரையும் பார்த்து மகன் எப்போது வருவான்   ,கணவன் எப்போது வருவான் என்று கேட்டார்கள் .யாரும் சொல்லவில்லை .சுவாமிகளை பற்றி யாரோ கூற இருவரும் ஒன்று சேர்ந்து வந்து அழுதார்கள் .நீங்கள் இருவரும் ஒற்றுமையாக  இருந்தால் அவன் ஏன் செல்கிறான் நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள் அப்படி ஒற்றுமையாக இருப்பதாக சத்தியம் செய்தால் அவனை மந்திரம் போட்டு எங்கிருந்தாலும் வரச் செய்கிறேன் என்று கூறினார் சுவாமிகள் .இருவரும் ஒற்றுமையாக இருப்போம் என்று சுவாமிகள் முன் சத்தியம்  செய்தனர் .சுவாமிகள் அருகில் இருந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து மந்திரம் போடுவதுபோல் நடித்து அவர்களிடம் கொடுத்து இதை  வைத்து பூஜை செய்யுங்கள் மூன்றாவது நாள் அவன் இங்கே வந்துவிடுவான் நீங்கள் சென்று மூன்றாவது நாள் வாருங்கள் என்றார் அவர்களும் அவ்வாறே பூஜை செய்தனர் .அவர்கள் சென்ற உடன் சிறிது நேரத்தில் கணவன் சுவாமிகளை பார்க்க வந்தான் சுவாமிகள் அவனை பார்த்து ஏன்டா முண்டம் வெளியே வரவேண்டாம் என்று சொன்னேனே ஏன் வந்தாய் என்று திட்டினார் .பின் மூன்றாவது நாள் ஆளை அனுப்புவதாகவும் அப்போது வா என்று கூறினார் .வரும் போது ஒரு எலுமிச்சம் பழம்தான் என்னை கூட்டி வந்தது என்னை விடுங்கள் நான் எங்கேயாவது போகிறேன் என்று கூறி நடிக்க சொன்னார் அவனும் அப்படியே செய்தான் .அவனிடம் இருவரும் இனி சண்டை போடமாட்டோம் என்று கதறி அழுதனர்.அதற்கு  பின் இருவரும் ஒற்றுமையாக இருந்தார்கள் .கணவன் மனைவி இருவரும் பிள்ளைகளை பெற்று கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தார்கள் .      
            

துறவியின் சாபம்

சின்ன தச்சூர்  இந்த ஊரில் உள்ள வீடுகள் எல்லாம் காலையிலும் மாலையிலும் பற்றி எரியும் .எல்லோரும் தண்ணீர் ஊற்றி அணைப்பார்கள் .ஊரில் உள்ள எல்லோரும் மந்திரவாதிகள் ,சங்கராச்சாரி மற்றும் பலரையும் பார்த்தார்கள். யாராலும் சரி செய்ய முடியவில்லை .

நம் சுவாமிகள் அவ்வூர் பக்கத்தில் சென்று இருக்கையில் ஒரு சிறுவன் மடிபிச்சை வாங்கும் பொது இரண்டு தடவை வாங்கினானாம், ஏன் இருமுறை வாங்குகிறாய் பத்தாதா என்று சுவாமிகள் சிறுவனை கேட்டார் .அதற்கு அந்த சிறுவன் பின் வரும் விவரத்தை கூறினான் .

ஒரு நாள் காலையில் காவி கட்டி வந்த ஒருவர் அவ்வூர் ப்ரெசிடென்ட் வீட்டின் முன் பசிக்கிறது என்று கேட்டாராம் , அதற்கு அந்த ப்ரெசிடென்ட் அவரை திட்டி விட்டான் .அவர் கோபமுற்று எல்லாம் பத்திகிட்டு போகட்டும் என்று சொல்லி விட்டு போனார் .அன்று முதல் அவ்வூரில் உள்ள எல்லா வீடுகளும் எரிய ஆரம்பித்து விட்டது எவராலும் சரி செய்ய இயலவில்லை என்று கூறினான்.

சுவாமிகள் அவனிடம் சாபம் கொடுத்தவர் பிச்சைகாரன் அல்ல துறவி என்று கூறினார் .மடிப்பிச்சை வாங்கிய அரிசியுடன் ஊரில் உள்ள எல்லார் வீட்டிற்கும்     சென்று சிறிது அரிசி வாங்கி பிள்ளையார் கோயிலில் காஞ்சி காய்ச்சி யாவருக்கும் கொடுக்க சொன்னார் .
ஊரில் உள்ள அனைவரும் அரிசி கொடுத்தார்கள் ப்ரெசிடென்ட் மட்டும் அரிசி கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டான் . சிறுவன் சுவாமிகளிடம் வந்து இது குறித்து கூற இனி உங்கள் வீடு பத்தாது எவன் வீட்டில் அவர் சொன்னாரோ அந்த வீடு மட்டும் எரியட்டும் என்று சுவாமிகள் கூறினார் .
அன்று முதல் மற்றவர்கள் வீடு எரியவில்லை ப்ரெசிடென்ட் வீடு மட்டும் பத்தி எரிந்தது .பிறகு தான் சுவாமிகளை ப்ரெசிடென்ட் தேடி வந்தான் ,சுவாமிகள் அவனை திட்டி பின் சரி செய்தார் .

சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் எல்லாம் சரியாகி விடும் ,அது அந்த துறவிக்கு தெரியும்,தெரிந்தவுடன் கோபம் சாந்தியாகிவிட்டது .

ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்றமுடியும்