புதன், 3 ஆகஸ்ட், 2011

ஒரு ஊரில் ஒரு பெரிய ரவுடி இருந்தான்,பெண் பித்து பிடித்தவன் ,எந்த ஒரு பெண்ணை பார்த்தாலும் அடைந்து விடுவான் .ஊரில் அனைவரும் பயப்படுவார்கள் ,பயந்து பெண்களையும் மனைவிகளையும் அனுப்பிவிடுவார்கள். 
அவ்வூருக்கு புதியதாக ஒரு பெண் மணம் முடித்து வந்தாள். தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை நடத்தினார்கள். ஒரு நாள் ரவுடியின் கண்களில் அப்பெண் அகப்பட்டு விட்டாள்.பார்த்தது முதல் அவளை அடிய ஆசைப்பட்டான்,அவள் இணங்கவில்லை .வீட்டில்  உள்ளவர்கள் ரவுடியை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை ,அவளை ரவுடியிடம் செல்ல சொன்னார்கள். அவள் மறுத்து விட்டாள் .தினமும் ரவுடி அவளை இணங்குமாறு வற்புறுத்தி கொண்டு இருந்தான் .
அவள் உயிரை மாய்த்து கொள்வது என முடிவு செய்து ஊரிற்கு வெளியே உள்ள காட்டிற்குள் சென்றாள்.அப்போது சுவாமிகள் ஒரு பாறையின் மேல் அமர்ந்து  இருந்தார்.அவளை அருகில் அழைத்தார்,எங்கு செல்கிறாய்? தற்கொலை செய்து கொள்ள போகிறாயா?என்று கேட்டார் .நான் சொல்வதை கேட்கிறாயா என்றார். அவள் கேட்கிறேன் என்றாள்.எது சொன்னாலும் கேட்க    வேண்டும்  என்றார் .சரி என்றாள். பின்பு  அவளிடம்  உனது  வீட்டில் உள்ளவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பிவிடு,அந்த ரவுடியிடம் குறிப்பிட்ட நாளில்,குறிப்பிட நேரத்திற்கு வருமாறு கூறு ,அவன் வரும்போது அதற்கு சிறிது நேரம் முன்பு தலைக்கு குளித்து வாசலின் உட்புறத்தில் நிர்வாணமாக நில் என்றார். என்ன சுவாமி அவனிடம் இருந்து தப்பிக்க வழி கேட்டால் , அவன் முன் அம்மணமாக நிற்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.நான் சொன்னதை செய் பயப்படாதே என்றார் சுவாமிகள். தாங்கள் கூறியபடி செய்கிறேன் எதாவது ஏற்பட்டால் அந்த பாவம் உங்களைச்சாரும் என்றாள்.எதவும் நேராது பாவம் வந்தால் என்னையே சாரட்டும் என்றார் சுவாமிகள். சுவாமிகள் கூறியபடியே வீட்டில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு ரவுடியிடம் இந்த நேரத்திற்கு வா என்று தகவல் அனுப்பினாள்.அந்த நேரத்தில் தலைக்கு குளித்து நிர்வாணமாக தலைவிரிக்கோலமாக நின்றாள்.ரவுடி    வந்து   வாசற்படி  ஏறினான்  .இவளை  பார்த்தவுடன்  முதலில்  துணியை  உடுத்து என்று கூறிவிட்டு  உள்ளே  வராமல்  அப்படியே  சென்று விட்டான் . சென்றவன் படுத்த படுக்கையாக இருந்தான்.நான்கு  நாட்களில்  இறந்து  விட்டான்.  
அப்பெண் அச்சத்தை  தவிர்த்து  நிர்வாணமாக நின்றதால்  நிர்வாணி அம்மனுக்கு சமானம்,அதை பார்த்த ரவுடி உடனே துணி உடுத்து மாறு கூறினான்.என்றார்  சுவாமிகள், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக