வியாழன், 10 நவம்பர், 2011

சுவாமிகள் கூறிய அருள் உரைகள்


அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.
தொண்ணூறு வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.
நூற்றிஇருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.
கலசம் வைத்து யாகம் செய்வதற்கு ஒப்பாகும்.
பௌர்ணமி தீட்டு  வந்தால் ஆண் பிறக்கும்.
அமாவாசையில் தீட்டு வந்தால் பெண் பிறக்கும்.
 ஆடியில் குழந்தை பிறந்தால் நல்லது
ஆடியில் தலைச்சன் கருவுற்றால் சித்திரையில் குழந்தை பிறக்கும்.
தலைச்சன் ஆடி,சித்திரையில் குடும்ப பெண்  பிறந்தால் அலசலாட்டும்.
குரு  திசையில் புதன் கிழமை,தைமாதத்தில்,பெண் பிறந்தால் புதையல் கிடைத்தது போல.
புதன் கிழமை பெண் பிறப்பது நன்று.
கண்டதையும்,காணததையும்,சொல்லக்கூடாது.
பெண்கள்தான் முதலில் நல்வழி படுத்திய பின்,நம்முடன் சேர்ந்து ஞானத்திற்கு வழிபட்டால் தான் நாம் சீக்கிரம் அடைய முடியும்.
கணவனும் மனைவியும் காலையில் ஒரு நிலையாக சுவாமிகளை நினைக்க வேண்டும்.கணவனும்,மனைவியும்,பக்தி மார்க்கத்தில் இருவரும் ஒன்று சேர்ந்து போகவேண்டும் என்ற நிலை வந்தால்தான் சீக்கிரம் புண்ணியத்திற்கு போகலாம்.
மனம். இரண்டும் ஒன்றாக ஒரு மனமாக இருந்தால் எதையும் சாதிக்கலாம்.எல்லா கஷ்டங்களையும் நிவர்த்தி செய்து புண்ணியத்திற்கு போக முடியும்.
மனம் இரண்டும் ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆணுக்கு பெண் ஆதரவு.பெண்ணுக்கு ஆண் ஆதரவு.
போதும் என்ற மனமே பொன் செய்த மனம்.ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட வேண்டும்.
தாயும் ஒன்றுதான்,மனைவியும் ஒன்றுதான்.
சாதுக்களை நீ தேடி போக வேண்டும்.
கட்டையை ( சரீரத்தை ) வதக்கி சிவா சிவா என்று போவது வைகுண்டம்.கட்டையை விட்டு போனதும் சொர்க்கம்.
மக்கள் பிரியப்பட்டு கொடுப்பதை செய்.அவனவன் செய்த புண்ணியம் அவனவனை போய் சேரும்.
புண்ணியத்திற்கு போவதை அழிப்பது காசு.
வேகாத ஒரு புல் அருகம்புல்
வாடாத ஒரு பயிர்  அன்பு
வருத்தம் இல்லாத ஒரு பாரம் கரு உருவாகி குழந்தை.
காயாத கானகத்தில் ஒரு மான்  பெண்ணின் அழகு .
பெண்ணுக்கு இலட்சணம் கூந்தல்.
பெண்ணின் அழகு அன்பு.
தன்னை மறந்த நிலையில் சிவா சிவா என்று உணர்ந்து தாய் வேறு சேய் வேறாக மாறுகிறது.
ஆண்கள் ஆயுதம்.
பெண்கள் புத்திரபாக்கியம்.
பிரமச்சாரி ஒரு லட்ச மந்திரத்திற்கு ஈடாகாது.
கரு உருவான மூன்றேமுக்கால் நாழிகைக்குள் யாரை பார்த்தார்களோ அவர்களுடைய பிம்பத்துடன் குழந்தை சாயல் இருக்கும்.
நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வட்டிக்கு  வட்டி சுவாமிகள் ( கடவுள் ) கொடுப்பார்.
நாம் கெட்டது செய்யாமல் இருந்தால் அதுவே புண்ணியம்.
அன்னதானத்திற்கு மிஞ்சினது எதுவும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக