திங்கள், 31 ஜனவரி, 2011

காசிக்கு போனால் பாவம் போகுமா ?

ஒருவன்    தன் அம்மாவை எட்டி உதைத்து அடித்து விட்டான்.அவனது குருநாதர் பெற்ற
தாயை அடிக்க கூடாது நீ அடித்துவிட்டாய் அது பெரிய பாவம், அந்த பாவம் போக காசிக்கு
சென்று ஒன்பது முழுக்கு முழுக்கு போட்டால் தான் பாவம் போகும் என்றார். காசிக்கு போக
காசு இல்லையே என்று அவன் கூற குரு பிச்சை எடுத்தாவது போ என்றார்.
ஒரு நாள் சாப்பாடு ஏதும் கிடைக்கவில்லை பசி மிகுதியால் ஒரு வீட்டில் களைபாருகையில்
அந்த வீட்டின் மாடத்தில் கொட்டை பாக்கு இருந்தது அதை எடுத்து வாயில் போட்டு மென்றான்.
கொட்டை பாக்கு மெல்லும் சத்தத்தை கேட்டு அவ் வீட்டு பெண்மணி நான் தீட்டு  ஆன
நேரத்தில் வீட்டிற்குள் பாக்கை எடுத்து செல்ல கூடாது என்று மாடத்தில் வைத்து விட்டு
சென்றேன் அதைபோய்  சாப்பிடீர்களே என்றாள்.அதை கேட்டு அவன் தலையில் அடித்து
கொண்டு ஒரு பாவத்தை பாவத்தை போக்க காசிக்கு செல்கையில் இன்னொரு பாவம் வந்து
ஒட்டி கொண்டதே என்று கவலைப்பட்டான்.
இனி எங்கு சென்றாலும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்தான் .மீண்டும் காசி
நோக்கி  பயணத்தை தொடர்ந்தான். அன்று இரவு ஒரு வீட்டிற்கு சென்று தங்கினான். அவ் வீட்டு
பெண்மணி என்ன சாப்பிடுவீர்கள் என்று கேட்க அவன் எந்த பால இருந்தாலும் பரவாயில்லை
என்று கூறினான் .அவளும் பக்கத்துக்கு வீட்டில் கிண்ணம் கடன் வாங்கி கிண்ணத்தில் பாலை
ஊற்றி  அவனுக்கு கொடுத்தாள். அவனும் குடித்து இன்று எந்த பாவமும் செய்யவில்லை என்று
நினைத்து நிம்மதியாக தூங்கினான். மறுநாள் அதிகாலை பக்கத்துக்கு வீட்டுக்காரன் எனது
சவரக்கின்னத்தை கொடுங்கள் நான் பக்கத்துக்கு ஊருக்கு சவரம் செய்ய செல்ல வேண்டும்
என்றான். நான் பால் குடித்த கிண்ணம் சவரக்கின்னம் என்றால் நான் குடித்த பால் என்ன பால்
என்று கேட்க ? நீங்கள் இருக்கும் வீடு வண்ணான் வீடு அந்த வீட்டு கழுதை கன்று ஈர்ந்து
உள்ளது.தாங்கள் குடித்த பால் கழுதைப்பால் அவர்கள் வீட்டில் பாத்திரம் இல்லாததால்
என்னிடம் வந்து சவரம் செய்யும் கிண்ணத்தை கேட்க நான் கொடுத்தேன் என்று  நாவிதன்
கூறினான்.இதை கேட்டவுடன் தலையில் அடித்துக்கொண்டு ஒரு பாவத்தை போக்கலாம்
என்று காசிநோக்கி வந்தால் வரிசையாக பாவங்கள் வருகிறதே என்று காசி நோக்கி அழுது
கொண்டே சென்றான் .

இன்னொரு ஊரில் ஒரு நாவிதனின் தந்தை இறந்து போனார்அவன் அங்குள்ள
பிராமணர்களிடம் நீங்கள் என்ன செய்வீர்களோ  ஏது  செய்வீர்களோ  தெரியாது எவ்வளவு
பணம் செலவானாலும் பரவாயில்லை எனது தந்தை உயிரோடு வரவேண்டும் என்றான்.
அவர்களும் சவத்தை கொளுத்தி சாம்பலை வைத்து யாகம் செய்தார்கள்.பின்னர் இந்த
சாம்பலை  ஒரு பெரிய பானையில் போட்டு அவன் தலை மேல் வைத்து காசிக்கு சென்று
அங்குள்ள ஆற்றில் தொபுகடீர் என்று போட்டு உடைக்க உன் தந்தை உயிரோடு வருவார்
என்றனர்.
இவனும் தலையில் வைத்துகொண்டு காசிக்கு வந்தான்.அம்மாவை எட்டி உதைத்தவன்
ஆற்றில்   மூக்கை பிடித்து மூழ்கி கொண்டு இருந்தான் அப்போது நாவிதன் அவன் தலையில்
பானையை போட்டான்.பானை உடைந்து அவன் தலை தெரிந்தது. ஐயர்களை வைத்து பூஜை
செய்ததால்   அப்பா  ஐய்யர் ஆகவே வந்துவிட்டார் என்று நினைத்து அவனை அவனது
ஊருக்கு கூட்டி சென்று  நீ எனக்கு சிறு வயதில் ஊட்டி விட்டாய் இப்போது நான் ஊட்டி
விடுகிறேன் என்று மாமிச உணவுகளை வாயில் திணித்தான். விட்டால் போதும் என்று
அவன் ஊரை   நோக்கி ஓட்டம் விட்டான்.திரும்பும் வழியில் நம் சுவாமிகளை போல் ஒருவரை
எட்டி உதைத்தால் அதற்கு ஏன் காசிக்கு செல்ல வேண்டும் அம்மாவை நிற்க வைத்து மூன்று
முறை  சுற்று  சுற்றி காலில் விழுந்து தாயிடம் மன்னிப்பு கேட்டால் போதுமே என்று
கூறினாராம்   அவனும் அவ்வாறே செய்தானாம்.

கதையின் கருத்து : செய்த தவறுக்கு மனம் வருந்தி மனதார மன்னிப்பு கேட்டால் போதுமானது.
காசிக்கு போனாலும் பாவம் போகாது .   

 










 
 




































 
 

வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.

கல் உப்பு
பருப்பு வகைகள் இரண்டு
சர்க்கரை ஒரு படி
தவிடு
சாணம்
கோமியம்

( சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் முன் அல்லது கத்தரி முடிந்த பின் போகலாம் )  



ஊமை பேச / திக்கு வாய் விலக

கீழாநெல்லியை அரைத்து தலையில் தேய்த்து, ஹயகாந்த செந்தூரம் அரிசி எடை தேனில் கலந்து சாப்பிடவேண்டும். சிகப்பு நாயுருவி தழையை  அரைத்து  வெள்ளாட்டு பாலில் சாப்பிட்டு வந்தால் ஊமையும் பேசுவான் ,திக்கு வாயும் குணமாகும்.      

விரதம்

செவ்வாய் கிழமை விரதம்,சோமவார விரதம்,பௌர்ணமி விரதம்,சஷ்டி விரதம்
இவ்விரதங்களுக்கு காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை செய்யவேண்டும்.
இந்தநாட்களில் சிலமணி நேரமாகிலும் திருஅருட்பா,நடராஜர் பத்து படிக்க வேண்டும் .
உப்பில்லாமல் மூன்று வேளையும் சாப்பிடலாம்.
பாசி பருப்பை வேகவைத்து,அதில் வெல்லம் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம்.
பாசி பருப்பு வெந்த பின்  வடிகட்டி பருப்பை சாப்பிடலாம்.
பச்சைபயிர்  பாயசம் சாப்பிடலாம். இரவு இனிப்பு சேர்த்த சிற்றுண்டியை சாப்பிடலாம்.
அவலை சுத்தம் செய்து பாலில் ஊற வைத்து சர்க்கரை போட்டு சாப்பிடலாம்  .
அவலை உப்புமா போல் செய்து சாப்பிடலாம்.
பௌர்ணமி விரத நாளில் காலையில் குளித்து பூஜை செய்யவேண்டும். காலையில் பாலும் பிற்பகல்  பழமும் இரவு இனிப்புடன் கூடிய சிற்றுண்டியும் சாப்பிடலாம்.
கந்த சஷ்டி விரதம் ஆரம்ப  நாள் முதல் ஒரேவேளைகடவுளுக்கு படைத்துவிட்டு  உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் ,கடைசி நாளில் சர்க்கரை பொங்கல் ,பஞ்சாமிர்தம் செய்து படைத்து கும்பிடவேண்டும்.
திங்கள் கிழமை  துறவிகளுக்கு சிறப்பானது .சாதாரண குடும்பத்தாரர்களும் சோம வார விரதம் இருக்கலாம்.
பாசி பருப்பு அரைப்படி வேகவைத்து வெல்லம் போட்டு சாப்பிட்டால் சஷ்டி விரதத்திற்கும் எல்லா விரதங்களுக்கும் சிரேஷ்டமானது.பாலில் அவல் போட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.   பாசி பருப்பு வேகவைத்து வடிகட்டி பனைவெல்லம் தட்டி சேர்த்து சாப்பிடலாம். 








துளசி

வீட்டில் துளசி வேர் ,துளசி மாலை வைத்து இருந்தால் காத்து சேஷ்டை அண்டாது .
இலக்ஷ்மி கடாட்சம் உண்டு .துளசிமணி கையில் இருந்தால் நல்லது.
மந்திரம் சூன்யம் ஒன்றும் செய்யாது .




தாய் தகப்பனார்க்கு கடைசி காலத்தில் நாம் செய்ய வேண்டியவை

பெற்றோர்களுக்கு வயதான காலத்தில் மகனும் மருமகளும் அவர்களை  நன்கு கவனித்து கொள்ள வேண்டும்.வராதே ,செய்யாதே என்று அவர்கள் கூறினாலும் கணவன் மனைவி இருவரும் நீங்கள் என்னை பெற்றதற்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை, எங்களுக்கு கட்டை தான் உரிமை உங்கள் சொத்துக்கள் அல்ல என்று சொல்லிக்கொண்டே பணிவிடைகள், சேவைகள் செய்ய வேண்டும் .

வியாழன், 20 ஜனவரி, 2011

வீட்டில் வைக்க கூடாத மரங்கள்

 அசோக மரம் 
எட்டி மரம் 
அழிஞ்சி மரம்
இலவம் பஞ்சி மரம் 
உதய மரம் 

இவைகள் வீட்டில் வைக்கபடாது .குடும்பத்திற்கு நல்லதல்ல. மரம் அழியும்போது குடும்பமும் அழிந்துவிடும். பினால் கஷ்டம் வரும் .

அண்டை கரையான் கூடு கட்டிக்கொண்டாலும்,வெள்ளை எருக்கன் வளர்ந்தாலும் குடும்பத்தை பாழாக்கும் .

வேதாள வண்டு வீட்டிற்குள் வந்தால் கட்டிடம் பாழ் .