புதன், 16 பிப்ரவரி, 2011

நம்பிக்கை

ஒருவன் வேலைக்கு எங்கும் போகாமல் சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிகொண்டு இருந்தான் .
அவன் மனைவி ஒருநாள் சத்தம் போட்டாள் ஊரில் உள்ள அனைவரும் தினம் கருட தரிசனம்
செய்து  நன்றாக இருக்கிறார்கள் நீங்களும் தினம் கருட தரிசனம் செய்து விட்டு வாருங்கள்
என்றாள். அவனுக்கு கருடன் எப்படி இருக்கும் என்று தெரியாது ஏரிக்கரையில் கருடனுக்காக
காத்து  கொண்டு இருந்தான்,அவனது நேரம் கருடன் வரவே இல்லை கூவை தான் வந்தது .
கூவையை கருடன் என்று நினைத்து கும்பிட்டு வந்தான் . மறுநாளும் மற்றும் தினமும்
கூவையை பார்த்து கும்பிட்டு வந்தவுடன் தான் சாப்பிடுவான் .கூவை இவன் கும்பிடுவதை
சில நாட்கள் கவனிக்கவில்லை,அவன் தினமும் கும்பிடுவதை பார்த்து ஓடி ஒளிந்து கொள்ளும்
ஆனால் அவன் கூவை வரும் வரை சாப்பிடாமல்  காத்திருப்பான் .கூவையும்   மனம் பொறுக்காமல் வந்துவிடும் .ஒரு நாள் கூவை என்னை கும்பிடாதே என்னை கும்பிட்டால் தரித்திரம் தான் வரும் நான் கருடன் அல்ல என்று கூறியது மேலும் கருடன் கழுத்து வெள்ளையாக இருக்கும்,கருடனை கும்பிட்டால்தான் புண்ணியம் என்னை கூவை என்பார்கள் என் முகத்தில் விழித்தால் தரித்திரம் தான் வரும் இனி என்னை கும்பிடாதே என்று கூறியது.அதற்கு அவன் அது எல்லாம் எனக்கு தெரியாது நான் உன்னை நம்பித்தான் கும்பிட்டேன் இனி யாரையும் கும்பிடமாட்டேன் எனக்கூறி மீண்டும் தினமும் கூவையை கும்பிட்டு வந்தான் .கூவை இவனை பார்த்தவுடன் ஓடி ஒளிந்து கொள்ளும் விடாமம் இவனும் தேடி கும்பிட்டுவிட்டுதான் இவன் சாப்பிடுவான்,கூவை கண்ணில் படும் வரை சாப்பிடமாட்டான் .
இப்படி நடக்கையில் கூவை ஒருநாள் இவன் மேல் இரக்கம் கொண்டு  என்மீது நம்பிக்கை வைத்துவிட்டாய் நான் சொல்வது போல் செய் " விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து வீட்டை பெறுக்கி சுத்தம் செய்து அரிசி மாவுக் கோலம் போட்டு விளக்கேற்று , நான்கு அரை  மணியில் இருந்து ஆறு அரை மணிக்குள் இலட்சுமி எப்படியும் உன் வீட்டிற்குள் வந்து பார்ப்பாள் , நான் கதவிற்கு பின் ஒளிந்து இருப்பேன் இலட்சுமி வந்தால் எனக்கு தெரியும் வந்தவுடன் குரல் கொடுப்பேன் என் குரல் கேட்டவுடன் நீ என்னை கத்தியால் அறுத்து உன் வீட்டிற்குள் என்னை புதைத்து விடு என்னை புதைத்தால் இலட்சுமி வெளியேற முடியாது உள்ளுக்குள்ளே வாசம் செய்வாள் பின் நீ எல்லா செல்வமும் பெற்று நிம்மதியாக வாழலாம்" என்று    கூறியது
கூவை கூறியது போல் காலை எழுந்து வீட்டை பெருக்கி கோலம் போட்டு விளக்கேற்றி வைத்தான் .கதவுக்கு பின்னால் கூவை ஒளிந்து கொண்டது, இவனும் கத்தியுடன் தயாராக இருந்தான். இலட்சுமி அந்த பக்கம் வருகையில் சந்தேகம் வந்தது நாம் தான் இவனிடம் இல்லையே வீடு உள்ளே  லட்சுமிகரமாக உள்ளதே என எண்ணி உள்ளே நுழைந்தாள்,கூவை உடன் குரல் கொடுக்க இவன் தாமதம் செய்யாமல் கூவையை அறுத்து வீட்டினுள் புதைத்துவிட்டான்.இலட்சுமியும் வெளியேற முடியவில்லை.             

அதற்குப்பின் அவன் வீடு இலக்ஷ்மிகரமாக இருந்தது பின் மிகுந்த செல்வந்தன் ஆனான், காலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து  வீட்டை பெருக்கி கோலம் போட்டு விளக்கு ஏற்ற மறப்பதில்லை. அவனுக்கு பிள்ளை பிறந்து அவனுக்கும் திருமணம் ஆகியது .மருமகள் வந்தவுடன் பெருக்கும் போது கூவையை  புதைத்த இடத்தில்  மேடாக சாணமாக  உள்ளதே என்று தோண்டி அதில்  இருந்த கூவையின் கூடுகளை யாரையும் கேட்காமல் எடுத்து வெளியே போட்டு விட்டாள். மருமகள் காலை எழுவதும் இல்லை வீட்டை பெருக்கி கோலம் போடுவதும் இல்லை அன்றிலிருந்து மீண்டும் அந்த குடும்பத்தில் மீண்டும்  தரித்திரம் பிடித்து கொண்டதாம் .  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக