சனி, 30 ஏப்ரல், 2011
Swamiji Fiber Statue
செவ்வாய், 26 ஏப்ரல், 2011
சுவாமிகள் கூறியவை
பொறுமை , சாந்தம் , சகிப்பு தன்மை யாவும் நல்லவன் கடைபிடிக்க வேண்டும்
.
என்னை யார் என்ன பண்ண முடியும் என்ற ஆணவம் அவனையே அழிக்கும்
.
ஐந்து பாகம் நல்லவன் இருந்தால் சமாளிக்கும் .
பிரம்மனது எழுத்தை நல்லவனை கொண்டுதான் வழி வகுக்க முடியும்.
பங்கிதின்றால் பசி ஆறும் தானே தின்றால் வீணாகும் .
பொறுமையை கடை பிடிக்க வேண்டும் .
நான் என்ற சொல் வந்தால் எல்லா புண்ணியமும் போயிற்று .
நான் என்ற பெரியதனம் இருக்க கூடாது .நல்லதுக்கு வர முடியாது
நம்பிக்கையும் பொறுமையும் மிக மிக இருக்க வேண்டும் .
சிறிய வயதில் இருந்தே பொறுமையை கையாள வேண்டும் .
நம்பிக்கை ஆதார பொருள் கடவுள் சோதிப்பார்,மறக்கவும் செய்வார்
.
நம்பிக்கை இருக்க கஷ்டங்கள் தானாக குறையும் ,பிரம்மன் எழுதின எழுத்தை
உடனடியாக மாற்ற முடியாது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும்
.இடம் இருந்தால் , சந்து இருந்தால் மாற்றலாம், ஆறு மாதத்திற்கு நல்லவன்
வரும்போது மாற்றலாம் .தன்னம்பிக்கை போக்காமல் நம்பி இருக்க வேண்டும்
உள்ளத்தில் தைரியம் இருக்க வேண்டும்
எப்போதும் பைத்தியமே துணை என்று நினை
ஒரே சொல்லை மனசில் வைக்க வேண்டும் கோயிலுக்கு போனாலும்
ஒரே மனசாக ஒரே நோக்கமாக கேட்டால் கஷ்டங்கள் உடனே தீரும்
..
செத்தாலும் ,பிழைத்தாலும் ஒன்றே பிடி .
கடமையை போக்கிட்டு மனதில் நம்பிக்கை இழக்காமல் கடமையை செய்து
கொண்டு வரவேண்டும் ,ஆசைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் .
நல்ல உடம்பிற்கு நாலு சொம்பு தண்ணீர் .
பாம்பு புற்றின் மேல் வளரும் புல்லுருவி சிறந்தது .
ஆசையை போக்கினால் மனம் வளரும் ,
அச்சத்தை போக்கினால் ஞானம் வளரும் .
பாதரசத்தை எடுத்தவனும் இல்லை
கடவுளை கண்டவனும் இல்லை .
உள்ளம் - கடவுள் கட்டி கொடுத்த வீடு , அதை கொண்டு தான் உருவத்தை பார்க்க வேண்டும். சதா அந்த உருவத்தை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் .கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட்டுக்கொண்டே இருக்கும் .
துறவி - நான் என்ற சொல் எப்பொழுதும் என்றும் கிடையாது
மக்களுக்கு தொண்டு செய்வதுதான் பெரிய பொருள் .
மக்களுக்கு தொண்டு செய்வதுதான் பெரிய பொருள் .
சகல பிள்ளைகளையும் அயராது திருத்துபவர் .பிரம்மச்சாரி சொல் என்றுமே பலிக்கும் .தன் சரீரத்தை கொடுப்பது தான் துறவி .
( மக்களின் துன்பங்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது என் வேலை என்று சுவாமிகள் கூறுவார். அன்பு தான் சுவாமிகளின் ஆகாரம் )
பசி அற்றவன் துறவி .கிரகங்களும் துறவியை ஓட்டவிடாது
துறவி அன்புக்கு கட்டுப்பட்டவர் . அன்புதான் ஆகாரம் . துறவி தனக்கு என்று எதையும் கேட்கமாட்டார் .அப்படி அவர்களுக்கு தேவையானதை உலக மாதா
" சக்தி " மூன்றே முக்கால் நாழிகைக்குள் கொடுத்து உதவும் .
( நம் சுவாமிகள் தன்னையே வருத்தி தன்னை காண வரும் மக்களின் துன்பங்கள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருளுபவர் ) .
தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் துறவி சொல்ல மாட்டார் .
எல்லாம் கடவுள் செயல் என்ற தைரியம் வேண்டும் .
( மக்களின் துன்பங்களில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியது என் வேலை என்று சுவாமிகள் கூறுவார். அன்பு தான் சுவாமிகளின் ஆகாரம் )
பசி அற்றவன் துறவி .கிரகங்களும் துறவியை ஓட்டவிடாது
துறவி அன்புக்கு கட்டுப்பட்டவர் . அன்புதான் ஆகாரம் . துறவி தனக்கு என்று எதையும் கேட்கமாட்டார் .அப்படி அவர்களுக்கு தேவையானதை உலக மாதா
" சக்தி " மூன்றே முக்கால் நாழிகைக்குள் கொடுத்து உதவும் .
( நம் சுவாமிகள் தன்னையே வருத்தி தன்னை காண வரும் மக்களின் துன்பங்கள் அனைத்தையும் தானே ஏற்றுக்கொண்டு மக்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் அருளுபவர் ) .
தெரிந்ததை தெரியும் என்றும் தெரியாததை தெரியாது என்றும் துறவி சொல்ல மாட்டார் .
எல்லாம் கடவுள் செயல் என்ற தைரியம் வேண்டும் .
நம்பிக்கை தான் வேண்டும் .அந்த நம்பிக்கையை எப்பொழுதும் கைவிடப்படாது .அது பிற்காலத்தில் நம்மை காப்பாற்றும், சிறுக சிறுக சேரும் , தாய் தகப்பனாரிடம் வாங்கி கொடுக்கும். கடுகளவு கடுகளவு நமக்கு தெரியாமல் கெட்டதை குறைத்து கொண்டே வரும் ( நம் சுவாமிகளின் சொற்படி எக்காரணத்தை முன்னிட்டும் கை விடாமல் நடந்து வந்தால் தப்பாமல் பயன் கிடைக்கும் ) இதயத்தை உருக்கி மனதை கொண்டு வருவது தான் உள்ளதை சுவாமிகளிடம் சேர்க்கும் . மானசீக வழிபாடு மிகவும் சிறந்தது .
பொருள் மேல் ஆசை வைத்தவர்கள் சாமியார் ஆகார் .
பொருள் மேல் ஆசை வைத்தவர்கள் சாமியார் ஆகார் .
ஆசையை போக்கினால் இந்திரியத்தை தலையில் நிறுத்த முடியும் .
கண்டதை சொல்லாதே, தெரிந்து கொண்டவர்களிடம் சொல்லலாம் .
சொன்னால் போய் விடும் .
பசி என்பவனுக்கு சோறு போடவும் .
பசி ஆற்றுவதுதான் புண்ணியம் .
பசி என்று வந்தவனுக்கு இல்லை என்பது தான் மகா பாவம் .
பன்றி சாணம் சாராயத்தில் போதை தரும் .
சாப்பாடு போடும் பொழுது திட்டக்கூடாது .
நல்ல மக்களுக்கு இல்லை என்று சொல்லப்படாது .
மனைவி ,வீடு ,கிணறு , குரு அவர் அவர் வாங்கின வரபிரசாதத்தை பொறுத்ததாக அமையும் .
தாயின் வயிறு - ஏழு பொறை - நடு பொறை கர்ப்பம் .
ஆறு புழு - ஒன்று தாய் . ஐந்து புழு கொண்டதுதான் பஞ்ச பூதம் .
உடம்பில் இயற்கை அனு குறைந்து குறைந்து செயற்கை அனு சேர்ந்தால் தான் நோய் வரும் .
எது இருந்தாலும் தெய்வ நம்பிக்கை வேண்டும் .
ஆன்மாவால் கும்பிடவேண்டும்.
கடவுள் கோயிலில்தான் இருக்கிறாரா?
இல்லை மன நம்பிக்கை தான் தெய்வம்
சித்து விளையாடுவது - கர்மகாண்டம் .
ஓர் இடத்திலும் பொறாமை வரும்படி செய்ய கூடாது .
நல்ல ராசிக்காரர்களுக்கு , நல்லவர்களுக்கு சீக்கிரம் திருமணம் ஆகாது .
வேண்டாம் என்பவருக்கு கொடுத்து கொண்டே இருக்கும் .
ஒரு காரியத்தை தொடங்கும் முன் நன்மை வருமா தீமை வருமா என்று முதலில் யோசித்து பிறகு தொடங்கி தொடர்ந்து செய்து கொண்டே போகவேண்டும் . தொடங்கிய பின்னால் அப்படியே போக வேண்டும் .
தைரியலட்சுமி நடடா என்றால் துணிந்து கிளம்புவது நல்லது .
சொல்லுக்கு வேகம் உண்டாகி செயல்படுகிறது .
கோபம் வரும் போது சிரித்துகொண்டே இருக்கவேண்டும் .
சட்டிக்கு பானை மோதல் போக வேண்டும் .
பிரியமான் பொருள் ஆகாரத்தில் இருந்தால் வியாதி வரும் .பிரியமான பொருளை விட்டால் வியாதி போகும் .
குருவுக்கு எதிர்த்து வாதாடுபவர் சூரியன் .
ராகு திசையில் யாதாகிலும் குறைபாடு கொடுத்துகொண்டே இருக்கும் .
அச்சம் ஆசை மர்மம் மூன்றையும் உண்டாக்கிறது தாய் , வளர்த்து வருகிறது மூன்றையும் .
அன்பே தெய்வம் அருளே ஜோதி
உள்ளதை அறிந்தால் நான் என்ற சொல் சொல்ல மாட்டான் .
உயிர் பட் என்று போவது புண்ணியம் , நல்ல உயிர் 48 நாட்கள் இருக்கும்,பேரன் பேத்தி மேல் ஆசை இருந்தால் தீர்த்தம் ஊற்று ,சாந்தி கிடைத்தவுடன் நின்றுவிடும் . புண்ணியம் செய்த ஆத்மா ஹிம்சை இல்லாமல் பிரியும் .
லக்ஷ்மி- மூதேவி
மகாவிஷ்ணு - குழந்தையை கிள்ளுவார்,தொட்டிலையும் ஆட்டுவார்.
பராசக்தி - கோபக்காரி.
லக்ஷ்மி- ஓர வஞ்சகக்காரி
நாரதர் - கோள்முட்டி
மூதேவி - நல்ல மகராசி , உத்தமி
திங்கள், 25 ஏப்ரல், 2011
பீமன்
உப்பில்லாமல் பிறவியில் இருந்தே சாப்பிட்டவர் - பீமன் வாயு பகவானின் சக்தி
வியாழன், 21 ஏப்ரல், 2011
சாதுவின் மகத்துவம்
உலகை ரட்சிக்கும் மகாவிஷ்ணு ஈஸ்வரரிடம் தன்னிலும் அதிக மகத்துவம் உடையவர் யாராகிலும் உண்டா என கர்வத்தோடு கேட்டார். சாதுவின் பெருமை அறியாதவர்கள் உண்டா என ஈஸ்வரர் பதில் சொன்னார்.அப்படி என்றால் காட்டு என்றார் விஷ்ணு.அதற்கு ஈஸ்வரர் ஒரு காட்டில் ஒரு பாழ் அடைந்த கிணற்றில் ஒரு ஓணான் இருக்கிறது அதனை கேள் என்றார்.விஷ்ணு ஓணானை கேட்டதற்கு விஷ்ணுவின் பாதங்களில் விழுந்து இறந்தது .சில காலம் கழித்து விஷ்ணு ஈஸ்வரரிடம் ஓணான் இறந்ததை சொன்னார்.மற்றொரு காட்டில் மரத்தின் மேல் ஓர் அன்னபட்சி உட்கார்ந்து இருக்கும் அதை கேள் என்றார். விஷ்ணு அன்னபட்சியை கேட்க அன்னபட்சி விஷ்ணுவின் கால்களில் விழுந்து இறந்தது. விஷ்ணு கோபம் அடைந்து இனி இந்த பூலோகத்தை ஏறத்சிக்க மாட்டேன் என்றார் . ஈஸ்வரர் இந்த உலகத்தில் நீதி நேர்மை தர்மம் தவறாத அரசன் இருக்கிறானா என்று கேட்க மகாவிஷ்ணு இருக்கிறார் என்று சொன்னார்.அரசனுக்கு என்ன குறை என்று கேட்டார்.பிள்ளை இல்லாத குறை மட்டும் என்றார் மகாவிஷ்ணு . அப்படியானால் அந்த அரசனுக்கு குழந்தை பிறக்கும் அந்த குழந்தையை கேள் என்றார். குழந்தை இறந்தால் என்னை சும்மா விடமாட்டார்கள் என்று மகாவிஷ்ணு கூற ஈசன் குழந்தை சாகாது நீ பொய் கேள் என்றார். விஷ்ணு சந்நியாசி வேடத்தில் அந்த அரசனிடத்தில் குழந்தை பேசும் என்றார். பிறந்த குழந்தையை தங்க தாம்பாளத்தில் தாதியர்கள் ஏந்திவர விஷ்ணு குழந்தையை பார்த்து சாதுவின் மகிமை எத்தன்மையது என்று கேட்க? குழந்தை நான் ஓணான் ஆக இருந்தபோது சிவ சிவா என்று உச்சரித்து கொண்டு இருந்தபோது நீங்கள் வந்து கேள்வி கேட்டீர்கள் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன், அடுத்து அன்னபட்சியின் உள்ளே சென்றேன் மறுபடியும் நீங்கள் சாதுவின் மகத்துவம் என்ன என்று கேட்டதற்கு மறுபடியும் உங்கள் பாதங்களில் விழுந்து இறந்தேன்.பிறகு இப்போது அரசனின் குழந்தையில் புகுந்து பிறந்தேன் . நான் இப்பொழுது உலகத்துக்கெல்லாம் குழந்தை . இதுதான் சாதுவின் மகத்துவம் என்றது .
மகாநதி
மகாநதி ( நந்தியால் அருகில் உள்ளது ) துறவியினால் உண்டாக்கப்பட்டது . அங்கு பல துறவிகள் அடக்கமாகியும் உள்ளார்கள். மகாநதியை உண்டாகியவரின் குரு பூஜை தினமும் , மகாசிவராத்திரி தினமும் அன்னதானம் நடந்து கொண்டு வருகிறது.
துறவிகளின் குருபூஜையன்று கண்டிப்பாக அந்த துறவி ஜோதி வடிவமாக காட்சி கொடுக்கிறார்கள்.அந்த காட்சியை பெறுவதற்கு நாம் தவம் இருந்தாலும் கிடைக்காது.அப்பேற்பட்ட அரிய சக்தியாகும்.
பூஜைக்கு உகந்த நேரம்
விடியற்காலை ஐந்து மணி முதல் ஐந்து முக்கால் மணி வரை
இரவு ஏழு மணி முதல் ஏழு முப்பது வரை .
அமைதியாக சத்தம் இல்லாமல் உட்காரவேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)