திங்கள், 13 அக்டோபர், 2025

தர்மத்திற்கு, பசி,பட்டினிக்கு,நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

பசி ஆற்றுவது, ஏழைகள் கல்யாணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவருக்கு கூரை புடவை,வேஷ்டி,தாலி ( ஐந்து பேர் சேர்ந்து ) கொடுத்து உதவுவது,கோயில் கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, மனம் மகிழ்ந்து கொடுத்து முடிக்க செய்வது சுவாமிகள் கூறும் தர்மம்.

சனி, 11 அக்டோபர், 2025

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

வியாழன், 9 அக்டோபர், 2025

அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.

தொண்ணூறு வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.

நூற்றிஇருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.

திங்கள், 6 அக்டோபர், 2025

தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்

32 லட்சணங்கள்


கைவிரல்கள்--------------------------- பத்து

கால் விரல்கள்------------------------- பத்து

காது--------------------------------------- இரண்டு

கண்---------------------------------------- இரண்டு

மூக்கு துவாரம்------------------------ இரண்டு

வாய்--------------------------------------- ஒன்று

மூத்திரதாரை------------------------- -ஒன்று

தொப்புள்--------------------------------- ஒன்று

மார்பு--------------------------------------- இரண்டு

மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று


மொத்தம் 32

வெள்ளி, 3 அக்டோபர், 2025

சட்டி எடுத்து  பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.

வியாழன், 2 அக்டோபர், 2025

கோபமுள்ள இடத்தில்

குணம் இருக்கும்

புதன், 1 அக்டோபர், 2025

தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இரண்டையும் கைவிடக்கூடாது.

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

நல்லவனுக்கு வரும் பணம், நல்ல வழியில் செலவாகும்.

திங்கள், 29 செப்டம்பர், 2025

பசி பட்டினி என்று வந்தால்

சாப்பாடு போடவும்.

கூடி கெட்டவர்கள் இல்லை.

பிரிந்து கெட்டவர்கள் அநேகர்

சனி, 27 செப்டம்பர், 2025

அன்னதானத்தை விட சிறந்தது – தினை அரிசி நான்கு படியை, தினமும் மூன்று விரல்களால் ( பெருவிரல்,நடுவிரல்,மோதிரவிரல்) எடுத்து எறும்புக்கு போடவேண்டும். நூறு பேருக்கு சாப்பாடு போடுவதை விட சிறந்தது.தினை அரிசி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைத்தது குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

கணவனுக்கு வரும் கண்டத்தை மனைவி தான் காப்பாற்றுவாள்

பத்து வருடம் தவம் செய்யும் ஆணை விட புண்ணியத்தை பெண் சில மாதங்களில் வாங்கி விடுகிறாள்

புதன், 24 செப்டம்பர், 2025

வேலிக்கு வைத்த முள்

காலுக்கும் தைக்கும்

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

இரைக்கிற கிணறு ஊறும்.

கெட்ட செலவு செய்யாமல் எவ்வளவு நல்ல செலவு செய்தாலும் காசு வந்து சேரும்

திங்கள், 22 செப்டம்பர், 2025

நல்லது செய்து பத்து ரூபாய் வாங்கு, காப்பாற்றி வாங்கு, அதில் இரண்டு ரூபாய் நல்லது செய்

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

நல்லது செய்வதும்,கெட்டது செய்வதும் குணம் தான்.

சனி, 20 செப்டம்பர், 2025

ஞாயிற்றுக்கிழமை அமாவாசை சேர்ந்த நாளில் கலக்காகாய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று பெட்டியிலோ, பீரோவிலோ, பூஜை மாடத்திலோ காற்றாட வைத்தால் இலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

குருவின் மேல் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

ஒரே உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது

வியாழன், 18 செப்டம்பர், 2025

பனிக்குடம் உடைந்த நேரம் தான் பிறந்த நேரம்

புதன், 17 செப்டம்பர், 2025

விலை மதிக்க முடியாத சொத்து படிப்பு ஒன்று தான், காலை நான்கு முப்பது மணியில் இருந்து ஆறு மணி வரை படிக்க வேண்டும்

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

நம்பிக்கையும், உறுதியும் வந்தால் எல்லாம் சற்று விலகி விடும்.

திங்கள், 15 செப்டம்பர், 2025

நம்பிக்கை இழக்காமல் இருந்தால் வட்டிக்கு வட்டி சுவாமிகள் கொடுப்பார்.

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

பூரணமான நம்பிக்கை என்பது ஒன்றை பிடித்தாலும் உறுதியாக பிடி என்பது.

சனி, 13 செப்டம்பர், 2025

வியாழன், 11 செப்டம்பர், 2025

செய்யும் தர்மம், நல்லவை செய்யும் பொழுது அடுத்தவனுக்கு தெரியக்கூடாது, தெரிந்தாலும், சொன்னாலும் நாம் செய்த புண்ணியம் எல்லாம் போய்விடும்

புதன், 10 செப்டம்பர், 2025

பணியில் ஓய்வு பெற்ற பிறகு சின்ன சிவலிங்கம் வாங்கி வைத்து அதன் மேல் பூ ( தும்ப பூ,வில்வ இலை) போட்டு கொண்டு மௌனமாக ஆறு மாத காலம் உட்கார்ந்தால் மனம் ஒருமை படும்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2025

ஆடி மாதத்தில் கஷ்டத்திற்காக பொருள் ஏதேனும் விற்றால் அதே ஆடி மாதத்தில் அப்பொருளை வாங்கினால் நல்லது. ஆடியில் விற்றால் அடுத்த ஆடியில் மறுபடியும் விற்க நேரிடும்

திங்கள், 8 செப்டம்பர், 2025

சாப்பிட்டவர்கள் “ சாப்பாட்டில் உப்பு இல்லை என்றாலும் , உப்பு இல்லை என்று சொல்லக்கூடாது “

அப்படி சொன்னால் இருவருக்கும் புண்ணியம் இல்லை , உப்பு இல்லை என்றால் செய்தவர் மனம் புண்படும், ஆகையால் சொல்லக்கூடாது

கோயிலுக்கு கொடுக்க வேண்டியது.

விளக்கு – தூங்கா விளக்கு எண்ணை ஊற்றி, குத்து விளக்கு -இரண்டு, பெர்ய காமாட்சி விளக்கு.

மணி – கோயில் மணி, கை மணி.

தூப கொளுசு,( சாம்பிராணி ) தட்டு

பொங்கல் செய்யும் பாத்திரம் செப்பில்.

விக்ரகங்கள் கழுவுவதற்கு செப்பு குடம்.

வியாழன், 4 செப்டம்பர், 2025

அவனவன் செய்த வினையை அவனவன்தான் அனுபவிக்க வேண்டும்

புதன், 3 செப்டம்பர், 2025

மனோபூஜை பத்தியம் இல்லாதது, எந்தநேரமும் கும்பிடலாம்

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

எந்த தெய்வத்தையும் கும்பிடலாம், எல்லாம் ஒன்றே , சக்தியும் ஒன்றே, சிவனும் ஒன்றே.

நம்பிக்கை தான் ஆதாரம். கஷ்டம் வரும், சுவாமிகள் மேல் பாரத்தை போட்டு, அவரை வேண்டிக்கொண்டால், கஷ்டத்திலும் கஷ்டம் குறைந்து கொண்டே வரும், எவ்வளவு குறைந்தது என்று நமக்கு தெரியாது.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

கண்டேன் என்று சொல்லாதே, தற்பெருமை ஏற்படும்

சனி, 30 ஆகஸ்ட், 2025

நினைத்தால் கோயிலுக்கு போவது, பெரியோரை தரிசிக்க செல்வது, அப்போது நல்லது கெட்டது பார்க்கக்கூடாது.எண்ணி எண்ணி போனால் எப்பொழுதும் தடையாகும்.

அழகு,அலங்காரம்,தற்பெருமை,ஆணவம்,கௌரவம் வந்தால் குணம் கெட்டு கேடுகளை தேடிச்செல்வார்கள். நன்மையை என்றும் பெறமுடியாது

வியாழன், 28 ஆகஸ்ட், 2025

துன்பத்தை கொண்டே இன்பத்தை அடையவேண்டும். இன்பத்தையும், துன்பத்தையும் கை கால்கள் நல்லபடியாக இருக்கும்போதே எனக்கு கொடு என்று சுவாமிகளை வேண்டிக்கொள்ளவேண்டும்.

புதன், 27 ஆகஸ்ட், 2025

நாய் போல வேலை செய்தால் இராஜா போல சாப்பிடலாம்

சோம்பேறி இராஜா போல இருந்தால் நாய் மாதிரி தான் சாப்பிட வேண்டியிருக்கும் என்று சுவாமிகள் கூறுவார்

நாயாக உழைத்து ராஜா மாதிரி சாப்பிடு

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

நாம் செய்யும் நன்மைதான்,

நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும்

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

ஞாயிற்றுக்கிழமை அமாவாசை சேர்ந்த நாளில் கலக்காகாய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று பெட்டியிலோ, பீரோவிலோ, பூஜை மாடத்திலோ காற்றாட வைத்தால் இலக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்

சனி, 23 ஆகஸ்ட், 2025

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2025

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

நான் என்றும் தான் என்றும் இருப்பது ஆணவம்.

புதன், 20 ஆகஸ்ட், 2025

புண்ணியத்திற்கு போவதை தடுப்பது பேராசை, பொருளாசை

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

சரீரத்தை வதக்கினால்தான் சிவனை காணலாம்

சனி, 16 ஆகஸ்ட், 2025

பெரிய கால் விரலை பார்த்துக்கொண்டு போனால் கஷ்டப்பட மாட்டார்கள். காலை எழுந்தவுடன் இரண்டு கால் பெரிய விரல்களை பார்க்கவேண்டும்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம், கஷ்டம் வரும், கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்கக்கூடாது.

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

எளியவன் எதோ கஷ்ட்டத்திற்கு வந்து உதவி கேட்கும் போது நீ உதவி செய்கிறேன் என்று கூறினால் வேறு யாரிடமும் கேட்காமல் உன்னை நம்பியே இருப்பான்

சூழ்நிலை காரணமாக உன்னால் உதவி செய்ய முடியவில்லை என்றால் அவன் கஷ்டப்படுவான்

அதே நேரத்தில் வேறு யாரிடமும் கேட்டு இருந்தால் அவர்களில் யாராவது ஒருவர் உதவி செய்திருப்பார்கள்

எனவே யாராவது உதவி என்று வந்து கேட்டால் யோசித்து சொல்கிறேன் பார்க்கலாம் என்று கூறு

ஆனால் உன்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்

பணக்காரனுக்கு நீ வைத்தியம் இந்த இலை, இந்த பட்டை, இந்த மருந்து என்று விவரங்கள் கேட்டு விட்டு அவன் அதற்க்கு எங்கு கிடைக்கும் எப்படி செய்வது என்று கேட்காமல் நீயே போய் எடுத்து வந்து செய்து கொடுத்து விடு என்பான்

என்று சுவாமிகள் கூறுவார்கள்

எளியவனுக்கு ஆசை வார்த்தை சொல்லாதே, பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே

புதன், 13 ஆகஸ்ட், 2025

துஷ்டனைக்கண்டால் தூரப்போ, சுடுகாட்டை கண்டால் ஒதுங்கிப்போ

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

ஒழுக்கமுடையவர்களிடம் எல்லாம் தங்கும்.

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

எது இருந்தாலும் பொறுமை வேண்டும்.ஆழ்ந்து செயல்படவும்.

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது.

சனி, 9 ஆகஸ்ட், 2025

கெட்ட நேரம் வரும் பொழுதுதான் கடவுளும் சேர்த்து கஷ்டம் கொடுக்கிறார்கள். நல்ல நேரமானால் யாவும் தள்ளி விடும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

யார் வந்து தண்ணீர் குடிக்க கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லக்கூடாது.

புதன், 6 ஆகஸ்ட், 2025

ஒன்று பிடித்தாலும் வலுவாக பிடித்து ஒரே எண்ணத்தில் இருக்கவேண்டும்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2025

நோய் நொடி இல்லாமல் இருப்பது தான் புண்ணியம்.

திங்கள், 4 ஆகஸ்ட், 2025

உயிர் போகும் தருணத்தில் ,கோரோஜனத்தை தண்ணீரில் விட்டு, பாலில் வெள்ளி காசு போட்டு கொடுத்து பிறகு சிறிது நேரம் பொறுத்து கோரோஜனத்தை கொடுத்தால் மூன்றே முக்கால் நாழிகை உயிருடன் இருப்பார்கள்.

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

கட்டை இருக்கும் வரை இருந்துவிட்டு ஆத்மா ஒரு ஹிம்சை இல்லாமல் பிரிவதுதான் புண்ணியம்.

சனி, 2 ஆகஸ்ட், 2025

துறவிக்கு விரோதம் எமன்,சனீஸ்வரன்.

சனீஸ்வரன், எமனுக்கு எதிரானவர்கள் துறவியும், விக்னேஸ்வரனும்.

கூடி கெட்டவர்கள் யாரும் இல்லை, பிரிந்து கெட்டவர்கள் உண்டு.

அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்.

செவ்வாய், 29 ஜூலை, 2025

 தொட்டு கெட்டவன்        -  பத்மாசுரன்

தொடாமல் கெட்டவன்     -  இராவணன்

இட்டு கெட்டவன்          -  ஹரிச்சந்திரன் 

இடாது கெட்டவன்         -  துரியோதனன்

வெள்ளி, 11 ஜூலை, 2025

கும்பிடுகிற கோயிலை கெடுக்கக்கூடாது,

கூடுகிற கல்யாணத்தை கெடுக்கக்கூடாது.

வியாழன், 10 ஜூலை, 2025

 

அம்மனின் பெயர்கள்

முதல் பெயர் - ஜமதகன முனிவரின் மனைவி ரேணுகாதேவி

இரண்டாவது பெயர் – காவேரி

மூன்றாவது பெயர் – காசி விசாலாட்சி

நான்காவது பெயர் – மதுரை மீனாட்சி

ஐந்தாவது பெயர் – சமயபுரம் மாரியம்மன்

ஆறாவது பெயர் – மலையனூர் மாரியம்மன்

ஏழாவது பெயர் – கழுத்து மாரியம்மன்

எட்டாவது பெயர் - மாசான உத்திரி

ஒன்பதாவது பெயர் – காஞ்சி காமாட்சி .

 

இலக்ஷ்மி கடாட்சம்

ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில்

காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல் காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும் பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக வைக்கவேண்டும்)

வில்வமரத்தின் வடகத்திய வேர்,ஆலமரத்தின் வடகத்திய வேர், நாவல் மரத்தின் வடக்கத்திய வேர் ஆகிய மூன்று வேர்களையும் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று சந்தனம் போல அரைத்து நெற்றியில் திலகம் இட்டு வந்தாலும் பெறலாம்.

 

உயர்ந்த ரக கொரோசனத்தை பெட்டியில் வைத்து இருந்தாலும் இலக்ஷ்மி கடாட்சம் பெறலாம்.

 

சுவாமிகள் பாத பூஜை.

1)     தண்ணீர்

2)     பால்

3)     தயிர்

4)     தேன்

5)     பஞ்சாமிர்தம்

6)     இளநீர்

7)     விபூதி

8)     பன்னீர்.

 

சுமங்கலிகள் செய்ய வேண்டிய பொருள்.

 

1)     சந்தனம்

2)     மஞ்சள்

3)     குங்குமம்

4)     உதிரி பூக்கள்.

 

 

சுவாமிகளின் மலரடிகளை முதலில் ஒருதரம் பெரிய தாம்பாளத்தில் வைத்து தண்ணீர் ஊற்றி கந்த பொடியால் மலரடிகளை சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீர் நன்கு ஊற்றி கழுவவேண்டும். நல்ல வெள்ளை துண்டால் சுத்தமாக பாதவிரல்களின் இடையில் உள்ள ஈரத்தை துடைக்க வேண்டும். தாம்பாளத்தை எடுத்து வீடு வேறு தாம்பாளம் வைக்க வேண்டும்.

 

பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் விபூதி முதலியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக முறையாக செய்யவேண்டும்.

 

ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பிறகும் சுவாமிகளின் மலரடிகளுக்கு உதிரி பூ ஒன்று வீதம் , இரு பாதங்களுக்கும் வைத்து கற்பூரம் ஆரத்தி காட்டவேண்டும்.

 

ஒவ்வொரு அபிஷேகம் ஆனவுடன் தண்ணீரால் நன்கு பாதங்களை கழுவ வேண்டும்.

 

பன்னீர் அபிஷேகம் ஆனவுடன் தண்ணீரால் கழுவகூடாது.

 

 

சுமங்கலிகள் சுவாமிகளின் கணுக்கால்களுக்கு கீழ் இருந்து பாதவிரல்கள் வரையிலும் முதலில் சந்தனத்தை இரு கைகளாலும் நன்கு பூசவேண்டும். அதற்கு மேல் அரைத்து வைத்த கஸ்தூரி மஞ்சளை, சந்தனம் தடவியத்தின் மேல் கனமாக பூசவேண்டும். அதற்க்கு மேல் குங்குமம் வைக்கவேண்டும். ஒவ்வொரு கால் விரலுக்கும் குங்கும பொட்டு வைக்கவேண்டும். மல்லிகை பூ சரத்தை இரண்டு கால்களை சுற்றி சுற்ற வேண்டும்.

 

கல்கண்டு தூள்,கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்,பனைவெல்லம், நெய்,தேன், பச்சை பசும்பால் விட்டு உருண்டை ஆக்கிய பஞ்சாமிர்தத்தையும், வெற்றிலை, வாழைப்பழம் நைவேத்தியம் வைக்க வேண்டும்.

 

பிறகு சுவாமிகளின் பாதங்களின் மேல் உதிரி பூக்களை போட்டு சுவாமிகளுக்கு மாலை அணிவிக்கவேண்டும்

 

விபூதியை தட்டில் கொட்டி பரப்பி ஓம் என்று எழுதி அதன் ( ஓம் எழுத்தின் ) மேல்  கற்பூர துண்டுகளை வைத்து கொளுத்தி கற்பூர ஆராதனை முதலில் பாதங்களுக்கு காண்பித்து  பிறகு தலை முதல் பாதம் வரை வள்ளலார்  அருட்பெரும் ஜோதி, பாடலை பாடி ஆராதனை செய்யவேண்டும்.

பின்பு சுவாமிகளுக்கு காபி கொடுக்கவேண்டும்.

 

பிறகு சுமங்கலிகளை சுவாமிகளின் மலரடிகள் மேல் உள்ள சந்தன மஞ்சளை   எடுத்து விட்டு முந்தானையால் மலரடிகளை துடைக்கவேண்டும். தான் மட்டும் செய்யக்கூடாது,  அனைவரையும் அதே போல் செய்ய சொல்லவேண்டும்.

அனைவருக்கும் மஞ்சள் குங்குமம்,அபிஷேக கலவை, பஞ்சாமிர்தம் கொடுக்க வேண்டும்.

வியாழன், 3 ஜூலை, 2025

 

சுவாமிகளை நினைத்து விளக்கு ஏற்றினால், 

நமக்கு  கெடுதல் செய்தவர்கள் கெட்டதை அனுபவிப்பார்கள்.