சுவாமிகள் பாத பூஜை.
1)
தண்ணீர்
2)
பால்
3)
தயிர்
4)
தேன்
5)
பஞ்சாமிர்தம்
6)
இளநீர்
7)
விபூதி
8)
பன்னீர்.
சுமங்கலிகள் செய்ய வேண்டிய பொருள்.
1)
சந்தனம்
2)
மஞ்சள்
3)
குங்குமம்
4)
உதிரி பூக்கள்.
சுவாமிகளின் மலரடிகளை முதலில் ஒருதரம் பெரிய தாம்பாளத்தில் வைத்து தண்ணீர்
ஊற்றி கந்த பொடியால் மலரடிகளை சுத்தம் செய்ய வேண்டும். மறுபடியும் தண்ணீர் நன்கு
ஊற்றி கழுவவேண்டும். நல்ல வெள்ளை துண்டால் சுத்தமாக பாதவிரல்களின் இடையில் உள்ள
ஈரத்தை துடைக்க வேண்டும். தாம்பாளத்தை எடுத்து வீடு வேறு தாம்பாளம் வைக்க
வேண்டும்.
பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் விபூதி முதலியவைகளை ஒன்றின் பின் ஒன்றாக
முறையாக செய்யவேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பிறகும் சுவாமிகளின் மலரடிகளுக்கு உதிரி பூ ஒன்று
வீதம் , இரு பாதங்களுக்கும் வைத்து கற்பூரம் ஆரத்தி காட்டவேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகம் ஆனவுடன் தண்ணீரால் நன்கு பாதங்களை கழுவ வேண்டும்.
பன்னீர் அபிஷேகம் ஆனவுடன் தண்ணீரால் கழுவகூடாது.
சுமங்கலிகள் சுவாமிகளின் கணுக்கால்களுக்கு கீழ் இருந்து பாதவிரல்கள் வரையிலும்
முதலில் சந்தனத்தை இரு கைகளாலும் நன்கு பூசவேண்டும். அதற்கு மேல் அரைத்து வைத்த கஸ்தூரி
மஞ்சளை, சந்தனம் தடவியத்தின் மேல் கனமாக பூசவேண்டும். அதற்க்கு மேல் குங்குமம்
வைக்கவேண்டும். ஒவ்வொரு கால் விரலுக்கும் குங்கும பொட்டு வைக்கவேண்டும். மல்லிகை
பூ சரத்தை இரண்டு கால்களை சுற்றி சுற்ற வேண்டும்.
கல்கண்டு தூள்,கொட்டை நீக்கிய
பேரீச்சம்பழம்,பனைவெல்லம், நெய்,தேன், பச்சை பசும்பால் விட்டு உருண்டை ஆக்கிய
பஞ்சாமிர்தத்தையும், வெற்றிலை,
வாழைப்பழம் நைவேத்தியம் வைக்க வேண்டும்.
பிறகு சுவாமிகளின் பாதங்களின் மேல் உதிரி பூக்களை போட்டு சுவாமிகளுக்கு மாலை
அணிவிக்கவேண்டும்
விபூதியை தட்டில் கொட்டி பரப்பி ஓம் என்று எழுதி அதன் ( ஓம் எழுத்தின் ) மேல் கற்பூர துண்டுகளை வைத்து கொளுத்தி கற்பூர ஆராதனை
முதலில் பாதங்களுக்கு காண்பித்து பிறகு
தலை முதல் பாதம் வரை வள்ளலார் அருட்பெரும்
ஜோதி, பாடலை பாடி ஆராதனை
செய்யவேண்டும்.
பின்பு சுவாமிகளுக்கு காபி கொடுக்கவேண்டும்.
பிறகு சுமங்கலிகளை சுவாமிகளின் மலரடிகள் மேல் உள்ள சந்தன மஞ்சளை எடுத்து
விட்டு முந்தானையால் மலரடிகளை துடைக்கவேண்டும். தான் மட்டும் செய்யக்கூடாது,
அனைவரையும் அதே போல் செய்ய சொல்லவேண்டும்.
அனைவருக்கும்
மஞ்சள் குங்குமம்,அபிஷேக கலவை,
பஞ்சாமிர்தம் கொடுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக