வியாழன், 21 ஏப்ரல், 2011

பூஜைக்கு உகந்த நேரம்



விடியற்காலை ஐந்து மணி முதல் ஐந்து முக்கால் மணி வரை 

இரவு ஏழு மணி முதல் ஏழு முப்பது வரை .

அமைதியாக சத்தம் இல்லாமல் உட்காரவேண்டும்   

கோயிலுக்கு கொடுக்க வேண்டியது

எண்ணெய் ஊற்றி தூங்கா  விளக்கு 

பெரிய காமாட்சி அம்மன் விளக்கு 

கோயில் மணி 

கை மணி 

தூப தீபம் கொத்து

செப்பு குடம்  

தொட்டு கெட்டவன்

 தொட்டு  கெட்டவன் -  பத்மாசூரன் 

தொடாது கெட்டவன் - இராவணன்

இட்டு கெட்டவன் - ஹரிச்சந்திரன் 

இடாது கெட்டவன் - துரியோதனன்     

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்

பச்சை பசும்பால் சிறிதளவு 
நெய்
தேன்
கல்கண்டு தூள் 
கொட்டை நீக்கிய பேரிச்சம்பழ துண்டுகள் 
கருப்பு வெல்லம்.

நன்றாக இடித்து நெய்.தேன் பசும்பால் விட்டு பிசைந்து உருண்டையாக்கி வைக்க வேண்டும் .நீண்ட நாட்கள் நீடிக்க வெள்ளத்திற்கு பதிலாக பனைவெல்லத்தை பயன்படுத்த வேண்டும்    


வியாழன், 14 ஏப்ரல், 2011

கிருபானந்த வாரியார்

 வீட்டில் மொத்தம் ஆறு குழந்தைகள் வறுமையால் பட்டினியாக இருந்தார்கள் .சப்தகுண்டல மலையில் ஒரு சுவாமியார் இருந்தார் அவரிடம் சென்று தம்பதியினர் அழுதனர் .சாமியார் அவர்களிடம் உன் வயிற்றில் ஆண் குழந்தை பிறக்கும் உன் கஷ்டம் எல்லாம் தீரும் இன்று முதல் பசி பட்டினி இருக்காது என்று கூறி அனுப்பிவிட்டார் .துறவியின் வரம் பெற்று பிறந்த குழந்தைதான் கிருபானந்த வாரியார்.

மகாதேவ மலை

மகாதேவ மலை படிக்கட்டுகளை போட்டுகொண்டிருந்தார் ஒரு பெரியவர் .
கடவுள் அருளால் அந்த திருப்பணியை செய்து கொண்டு இருந்தார் .ஒருநாள் தம்மால்தான் ஆகிறது என்று கர்வம் கொண்டார் .தொழுநோய் வந்துவிட்டது .பின்பு தவறை உணர்ந்தார் மேலும் திருப்பணிகளை தொடர்ந்தார் அவர் உறவினர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு தின்பண்டத்தில்ப்விஷம் இட்டு கொல்லபார்தார்கள்.கடவுள் அருளால் விஷமுள்ள தின்பண்டத்தை சாப்பிட்டவுடன் தொழுநோய் மறைந்தது.மேலும் திருப்பணிகளை செய்தார் .பின்பு இறந்துவிட்டார் .இன்னும் சிலபடிகளை கட்டவேண்டும் அந்த பாக்கியம் யாருக்கு உள்ளது என்று தெரியவில்லை?         

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

உலகப்படைப்பு

 சிவன் மக்கள்  ஆக்கல்,அழித்தலுக்கு நான்கு பேரை  பிறப்பித்தார் . அந்த நாலவர் யாரென்றால் முதல் பிள்ளையாக பிறந்தவர் பிரம்மா , இரண்டாவது பிள்ளை நாரதர் , மூன்றாவது பிள்ளை எமதர்மன், நான்காவது பிள்ளை மகாவிஷ்ணு .
இந்த நான்கு பேருக்கும் சகல சக்தியையும் கொடுத்து பிறப்பித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து பிறப்பித்தார் .

நான்கு பேரும் தகப்பன் இடத்திலேயே வேலை பார்க்கலாம் என்று வந்து விட்டார்கள். அதற்கு சிவனும் சக்தியும் என்னை 3-3/4 நாழிகைக்குள் யார் பார்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வேலை கொடுப்பேன் என்று காற்றாய் மறைந்து விட்டார்.
தனது இல்லதிற்குள்ளேயே இருக்கிறார் என்பதை மறந்து கீழ் லோகம், மேல் லோகம்   எங்கும்  துழவிப் பார்த்தார்கள் கிடைக்காமல் போக பிரம்மா தாழம்பூவை பிடித்து வைத்து நான்தான் பார்த்தேன் என்று மற்ற மூவரிடமும் பொய் சொல்ல சொன்னார் . ஈஸ்வரன் பிரகாசமானவுடன் நீ பொய் சொன்னதால் உன்னை ரட்சிக்க மாட்டார்கள் நான் உண்டாக்க நன்மை தீமைகளை எழுதிகொள் என்று சொன்னார் .

நாரதரை பார்த்து நீ என்னப்பா வேலை என்று கேட்டார். எனக்கு பக்கமாய் இருக்கும் வேலையை கொடுங்கள் என்று நாரதர் கேட்டார் . இந்த உலகத்தில் நன்மை தீமை செய்வது யார் என்று  செய்தி சொல்லி கொண்டிரு என்று சொன்னார் .
இந்த உலகத்தை எப்படி கவனிப்பது என்று சொன்னார். சிவன் தன் சுயரூபம் கொடுத்து காலால் மூன்று எட்டு எடுத்து வைத்தார் உலகம் சரியாய் விடும் என்று சொன்னார் இரண்டு எட்டு வைத்தவுடன் உலகம் சரியாகி விட்டது .மூன்றாவது அடி நான் எங்கே வைப்பது என்று நாரதர் கேட்டார் .அதற்கு சிவன் நானே நீ ,நீயே நான் எனது தோளில் வை என்று சொன்னார் .

எமதர்மரை நீ என்னப்பா வேலை செய்கிறாய் என்று கேட்டார் . எனக்கு பாவமில்லாத வேலையை கொடுங்கள் என்று கேட்டார்.சகல ஜீவன்களையும் பிறப்பித்து சகல ஜீவன்களிடம் நான் ஜீவன் விட்டு பிரியும் போது அந்த கணக்கை நீ எழுதுப்பா என்று சொன்னார். ஐயோ  நான் இம்சை பண்ணித்தான் அந்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் இது பாவமல்லவா என்று எம தர்மன் கேட்டார்.
ஒவ்வொருத்தர் ஆத்மா பிரிகையில் கீழே விழுந்தது , ஜுரம் வந்தது , விக்கல்  என்று பாவமெல்லாம் எங்களோடையே இருக்கட்டும் நீ இந்த வேலையை செய்யடா என்று சிவன் கூறினார் .

நான்காவது பிள்ளை மஹா விஷ்ணு விடம் நீதான் மற்ற வேலைகள் யாவும் செய்ய வேண்டும் என்று கொடுத்தார் ஐயோ இத்தனை வேலைகளையும் நான் எப்படி பார்ப்பேன் நீங்கள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் நீங்கள் அப்படி செய்தால் தான் சகல ஜீவன்களும் படிந்து கட்டுப்பாடிற்கு வரும் என்று சொன்னார் .

அதற்கு சிவனும் சக்தியும் நாங்கள் கூடவே இருப்பதற்காகவா  உங்களை படைத்தோம் என்று கேட்டார்கள் .

இவ்வளவு வேலையையும் நான் எப்படி பார்கிறது என்று மஹா விஷ்ணு மீண்டும் கேட்க சிவன் பூசை போடுவதை விட்டு நாமம் போடுவது போல் எடுத்து போட்டார் . அப்படி செய்தால் நான் எப்படி காண்பது என்று மகாவிஷ்ணு கேட்க சிவன் வலது புறம் இருப்பது நான், இடது புறம் இருப்பது நீ ,  நடுவில் இருப்பது உன் தாயடா என்று சொன்னார் .நீ எப்போது நினைக்கிறாயோ அப்போது நாங்கள் உன்னுடுடன்  இருப்போம் என்று சொன்னார் .அப்படி வரம் வாங்கி கொண்டு எழுந்து போக உலகம் மொத்தமாக ஒன்றாக அவருடன் வந்தது .நான் எப்படி உலகத்தை தூக்கிகொண்டு இரட்சிப்பது என்று கேட்க ,மக்களை முன்னே பிறப்பித்தோம் அந்த மக்களின் சகல ஆசைகளையும் வெறுத்து  சிவா சிவா என்று உட்கார்ந்து இருப்பவன் உன்னிடம் அடிபணிய மாட்டான் நீங்கள் தான் அவனை அடிபணிந்து ரட்சிக்க வேண்டும் என்று சொன்னார், அப்படியே செய்கிறேன் என்று மகாவிஷ்ணு சொன்னார்.அப்பொழுதுதான் உலகம் ஒன்றாய் சேர்ந்து வரவில்லை மகாவிஷ்ணு சகல வேலைகளையும் செய்கிறேன் என்று ஒத்துகொண்டார் .
நாரதர் விஷ்ணுவுடன் இருப்பது போல் என்னுடன்    நீங்களும் இருக்க வேண்டும் என்று சொன்னார் ,நாரதருக்கு நாமத்தை போட்டார் நீ எல்லோருக்கும் செய்திகளை தூது சொல்லிக்கொண்டு இரு என்று சொன்னார் .சிவன் மக்களுக்கு நல்லது   கெட்டது அறிந்து நேரம் காலத்தை கணித்து வைத்து விதிப்பிரகாரம் அவனுக்கு செய்ய சனீஸ்வரனை பிறப்பித்தார் . அப்பொழுது மக்களுகெல்லாம் அவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் என்னை தண்டனை கொடுக்க சொல்கீறீர்கள் அனால் உங்களிடத்தில் தவறு இருந்தால் உங்களுக்கு தண்டனை கொடுக்கலாமா என்று தகப்பனை கேட்டார் ஈஸ்வரன் என்னிடத்தில் தப்பு இருந்தால் செய்யப்பா என்று சொன்னார் .
ஒன்பது நவகிரகமும் சனிபகவானுக்கு கட்டுப்பட்டவர்கள் இது போல் முதல் யுகத்தை சக்தியும் சிவனும் பிறப்பித்தார்கள் .அப்பொழுது ஈஸ்வரி சந்தோஷத்துடன் முதல் யுகத்தை பிறபித்து பசு நன்றாக மேய்ந்து விட்டு நான்கு கால் வலுவுடன் நிற்பது போல் யுகத்தை படைத்தார் .

மக்கள் முதல் யுகத்தில் அதிக வரம் பெற்று ராட்ஷதனமாக கொடுமை செய்து கொண்டு  குணம் மாறி விட்டார்கள் . அப்பொழுது ஒரு கால் வலுவு இழந்தது .

அப்பொழுது இரு கால்வலுவு இழந்தது போல் இரண்டாவது உலகத்தை படைத்தார்கள் .
மூன்றாவது யுகம் பிறப்பிக்கும் பொழுது மூன்று கால் வலுவு இழந்தது போல் 
உலகத்தை படைத்தார்கள். ஒரு காலில் பசு நிற்க போகும் போது நான்காவது யுகத்தை உலகத்தை அளித்து நல்ல விதமாக பிறபிக்கலாம் என்று நினைத்தார்கள் . இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவன்களும் தந்தைக்கும் மகளுக்கும் உண்டாகியது