திங்கள், 4 அக்டோபர், 2010

கடவுளிடம் கேட்க வேண்டியது

கடவுளிடம் கேட்க வேண்டியது.

வீட்டில் இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியும் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமார வேண்டி வந்தால் போதுமானது .

கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணெய் கொண்டு செல்ல வேண்டும்

வாழும் முறை

வாழும் முறை 
சம்சாரி மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதம் இன்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது .
ஒரு சம்சாரி தன் மனைவி குழந்தைகளை நியாயத்துடன் தொழில் நடத்தி காப்பாற்றி கடமைகளை சரிவர செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை
 முப்பது வருடங்கள் காட்டில் கடுந்தவம் இருந்தாலும் அடைய முடியாது .

திருஷ்டி


1)      கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. திருஷ்டி சுற்றி போடசிறிய துணியில் நல்ல எண்ணை விட்டு நனைத்து அதை தேங்காய் குடுமியில் சுற்றி அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி தேங்காயை முக்கூட்டில் உடைக்கவும்.
.   குழந்தைகளுக்கு திருஷ்டி படாமல் இருக்க எலுமிச்சை பழத்தை 4 துண்டாக நறுக்கி உள்ளே குங்குமம் வைத்து அதன் மேல் கற்பூரமிட்டு கொளுத்தி திருஷ்டி சுற்றி பிழிந்து 4 துண்டுகளையும் 4 திசைகளில் எறிய வேண்டும் குங்கும சாந்தை குழந்தைகளுக்கு பூச  திருஷ்டி விலகும் பிரதி ஞாயிறு தோறும் செய்யவும்.


.       வீட்டில் மூன்று கண்ணுள்ள கொட்டான் குச்சியில் திருஷ்டி பொட்டு வைத்து கயிற்றினால் கட்ட யாருடைய திருஷ்டியும் ஒன்றும் செய்யாது .        



தர்மம் செய்யும் முறை

சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும்.


 ஒரு பங்கை சேமித்து வைக்கவும்
.
 மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும்
.
 சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும்
.
 தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும் 
   

அன்னதானம்


1)      உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

மடிப்பிச்சை

மடிப்பிச்சை 
 அந்த காலத்தில் குழந்தை இல்லாத பெண்களும் , குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் நல்ல நாளில் ஏழைகளை கூப்பிட்டு விருந்து படைத்து அவர்களே பரிமாறி பின் மடியேந்தி அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் எச்சில் கையாலேயே சிறிது சாதம் வைக்க சொல்லி , வாங்கும் சாதத்தை ஓர் இடத்தில் பத்திரப் படுத்தி பின் எச்சில் சாதத்தை போட்டவர்களின் சாப்பிட்ட இலைகளை எடுத்து போட்டு விட்டு பத்திரப் படுத்திய சாதத்தை தரையில் கொட்டி சாப்பிடுவார்களாம்.
கையில் எடுத்து சாப்பிடுவதைவிட மண்டி போட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு வாயாலே எடுத்து சாப்பிடுவது விசேஷம். குழந்தைஇல்லை என்று பிரம்மன் எழுதி இருந்தாலும் பிரம்மாவின் தலை எழுத்தையே மடிப்பிச்சை மாற்றிவிடும் .      

வெள்ளி, 1 அக்டோபர், 2010

நாடார்கள் குறித்து சுவாமிகள் கூறியது

நாடார்கள் குறித்து சுவாமிகள் கூறியது   
நாடார்கள் நல்ல உழைப்பாளிகள் .
சாணான் ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தி என்பார்
காரணம் கேட்கையில்
சாணான் மரம் ஏறும் போது கடவுளே என் பெண்டாட்டி பிள்ளைகளை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று மரம் ஏறுவான் ஏறியவுடன் மரத்தின் மேல் உள்ள கள்ளை பார்த்தவுடன் புத்தி மாறி குடித்து விடுவான்   ஏறும் போது இருந்த புத்தி  இறங்கும் போது அப்படியே மாறி விடுமாம் எனவே சாணனுக்கு   ஏறும் போது ஒரு புத்தி இறங்கும் போது ஒரு புத்தி அப்படி அவன் கள்ளை குடித்தால் தான் எல்லா மரங்களையும் ஏற முடியும் இல்லை என்றால் ஏற முடியாது .


ஒழுக்கத்தை முன்னிட்டு வந்ததே சாதி
.