சனி, 31 ஜனவரி, 2026
சற்குருவின் மேல் நிர்ணயமாக இருப்பவனிடம் சற்குரு தானும் நிர்ணயமாக இருக்கையில் இருமனமும் ஒன்று கலந்து பிரம்ம தேவனின் எழுத்தை முறியடித்து விடும் .ஆகையால் பக்தனின் நிர்ணயத்தை கலைப்பதற்கு பிரம்ம தேவன் மாயாவையே அனுப்பி அவன் மனதில் சபலத்தை எழுப்பும் .இச் சோதனைகளை எல்லாம் வென்று எல்லாம் சற்குருவே என் செயல் யாது ஒன்றும் இல்லை தனது என்று ஒன்றும் இல்லை பட்டற்றநிலையை ஏற்படுத்தி கொண்டவனுக்கு சற்குருவே சாப்பாடும் கொடுப்பார் குறைகளையும் தவிர்ப்பார்
வியாழன், 29 ஜனவரி, 2026
கோயிலுக்கு போனாலும், ஒரே மனதாக ஒரே நோக்கமாக நமது கஷ்டங்களை போக்க கடவுளிடம் கேட்டால் நமது கஷ்டங்கள் உடனே தீரும்.
புதன், 28 ஜனவரி, 2026
நம் உடம்பில் சக்தியும், உள்ளத்தில் விழிப்பு உணர்வும் இருக்கும் போதே நாம் கடவுளை தேடி உணர்ந்து கொள்ளவேண்டும்.
செவ்வாய், 27 ஜனவரி, 2026
காட்டு முயல், பதினெட்டு அடி வேங்கை, கவரி மான், காராம் பசு, பச்சை புறா, தெய்வ அம்சம் பொருந்தியவை
ஞாயிறு, 25 ஜனவரி, 2026
சனி, 24 ஜனவரி, 2026
வெள்ளி, 23 ஜனவரி, 2026
திருவக்கரையில் உள்ள கல்மாதிரி உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது
பச்சைக்கல், பூமிக்கு அடியில் கிடைக்கும் கருப்புக்கல், மலை மேல் உள்ள கருப்புக்கல்.
வியாழன், 22 ஜனவரி, 2026
சுவாமிகள் ,மகாவிஷ்ணு - குழந்தையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார்
பராசக்தி - கோபக்காரி
லக்ஷ்மி – ஓரவஞ்சக்காரி
நாரதர் – கோள்முட்டி
மூதேவி – நல்ல மகராசி , உத்தமி என்று கூறுவார்.
புதன், 21 ஜனவரி, 2026
தமிழ் வருடங்கள் 60
நட்சத்திரங்கள் 27
இராசிகள் 12
கிரகங்கள் 09
108
செவ்வாய், 20 ஜனவரி, 2026
உலகப்படைப்பு
சிவன் மக்கள் ஆக்கல்,அழித்தலுக்கு நான்கு பேரை பிறப்பித்தார் . அந்த நாலவர் யாரென்றால் முதல் பிள்ளையாக பிறந்தவர் பிரம்மா , இரண்டாவது பிள்ளை நாரதர் , மூன்றாவது பிள்ளை எமதர்மன், நான்காவது பிள்ளை மகாவிஷ்ணு .
இந்த நான்கு பேருக்கும் சகல சக்தியையும் கொடுத்து பிறப்பித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து பிறப்பித்தார் .
நான்கு பேரும் தகப்பன் இடத்திலேயே வேலை பார்க்கலாம் என்று வந்து விட்டார்கள். அதற்கு சிவனும் சக்தியும் என்னை 3-3/4 நாழிகைக்குள் யார் பார்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வேலை கொடுப்பேன் என்று காற்றாய் மறைந்து விட்டார்.
தனது இல்லதிற்குள்ளேயே இருக்கிறார் என்பதை மறந்து கீழ் லோகம், மேல் லோகம் எங்கும் துழவிப் பார்த்தார்கள் கிடைக்காமல் போக பிரம்மா தாழம்பூவை பிடித்து வைத்து நான்தான் பார்த்தேன் என்று மற்ற மூவரிடமும் பொய் சொல்ல சொன்னார் . ஈஸ்வரன் பிரகாசமானவுடன் நீ பொய் சொன்னதால் உன்னை ரட்சிக்க மாட்டார்கள் நான் உண்டாக்க நன்மை தீமைகளை எழுதிகொள் என்று சொன்னார் .
நாரதரை பார்த்து நீ என்னப்பா வேலை என்று கேட்டார். எனக்கு பக்கமாய் இருக்கும் வேலையை கொடுங்கள் என்று நாரதர் கேட்டார் . இந்த உலகத்தில் நன்மை தீமை செய்வது யார் என்று செய்தி சொல்லி கொண்டிரு என்று சொன்னார் .
இந்த உலகத்தை எப்படி கவனிப்பது என்று சொன்னார். சிவன் தன் சுயரூபம் கொடுத்து காலால் மூன்று எட்டு எடுத்து வைத்தார் உலகம் சரியாய் விடும் என்று சொன்னார் இரண்டு எட்டு வைத்தவுடன் உலகம் சரியாகி விட்டது .மூன்றாவது அடி நான் எங்கே வைப்பது என்று நாரதர் கேட்டார் .அதற்கு சிவன் நானே நீ ,நீயே நான் எனது தோளில் வை என்று சொன்னார் .
எமதர்மரை நீ என்னப்பா வேலை செய்கிறாய் என்று கேட்டார் . எனக்கு பாவமில்லாத வேலையை கொடுங்கள் என்று கேட்டார்.சகல ஜீவன்களையும் பிறப்பித்து சகல ஜீவன்களிடம் நான் ஜீவன் விட்டு பிரியும் போது அந்த கணக்கை நீ எழுதுப்பா என்று சொன்னார். ஐயோ நான் இம்சை பண்ணித்தான் அந்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் இது பாவமல்லவா என்று எம தர்மன் கேட்டார்.
ஒவ்வொருத்தர் ஆத்மா பிரிகையில் கீழே விழுந்தது , ஜுரம் வந்தது , விக்கல் என்று பாவமெல்லாம் எங்களோடையே இருக்கட்டும் நீ இந்த வேலையை செய்யடா என்று சிவன் கூறினார் .
நான்காவது பிள்ளை மஹா விஷ்ணு விடம் நீதான் மற்ற வேலைகள் யாவும் செய்ய வேண்டும் என்று கொடுத்தார் ஐயோ இத்தனை வேலைகளையும் நான் எப்படி பார்ப்பேன் நீங்கள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் நீங்கள் அப்படி செய்தால் தான் சகல ஜீவன்களும் படிந்து கட்டுப்பாடிற்கு வரும் என்று சொன்னார் .
அதற்கு சிவனும் சக்தியும் நாங்கள் கூடவே இருப்பதற்காகவா உங்களை படைத்தோம் என்று கேட்டார்கள் .
இவ்வளவு வேலையையும் நான் எப்படி பார்கிறது என்று மஹா விஷ்ணு மீண்டும் கேட்க சிவன் பூசை போடுவதை விட்டு நாமம் போடுவது போல் எடுத்து போட்டார் . அப்படி செய்தால் நான் எப்படி காண்பது என்று மகாவிஷ்ணு கேட்க சிவன் வலது புறம் இருப்பது நான், இடது புறம் இருப்பது நீ , நடுவில் இருப்பது உன் தாயடா என்று சொன்னார் .நீ எப்போது நினைக்கிறாயோ அப்போது நாங்கள் உன்னுடுடன் இருப்போம் என்று சொன்னார் .அப்படி வரம் வாங்கி கொண்டு எழுந்து போக உலகம் மொத்தமாக ஒன்றாக அவருடன் வந்தது .நான் எப்படி உலகத்தை தூக்கிகொண்டு இரட்சிப்பது என்று கேட்க ,மக்களை முன்னே பிறப்பித்தோம் அந்த மக்களின் சகல ஆசைகளையும் வெறுத்து சிவா சிவா என்று உட்கார்ந்து இருப்பவன் உன்னிடம் அடிபணிய மாட்டான் நீங்கள் தான் அவனை அடிபணிந்து ரட்சிக்க வேண்டும் என்று சொன்னார், அப்படியே செய்கிறேன் என்று மகாவிஷ்ணு சொன்னார்.அப்பொழுதுதான் உலகம் ஒன்றாய் சேர்ந்து வரவில்லை மகாவிஷ்ணு சகல வேலைகளையும் செய்கிறேன் என்று ஒத்துகொண்டார் .
நாரதர் விஷ்ணுவுடன் இருப்பது போல் என்னுடன் நீங்களும் இருக்க வேண்டும் என்று சொன்னார் ,நாரதருக்கு நாமத்தை போட்டார் நீ எல்லோருக்கும் செய்திகளை தூது சொல்லிக்கொண்டு இரு என்று சொன்னார் .சிவன் மக்களுக்கு நல்லது கெட்டது அறிந்து நேரம் காலத்தை கணித்து வைத்து விதிப்பிரகாரம் அவனுக்கு செய்ய சனீஸ்வரனை பிறப்பித்தார் . அப்பொழுது மக்களுகெல்லாம் அவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் என்னை தண்டனை கொடுக்க சொல்கீறீர்கள் அனால் உங்களிடத்தில் தவறு இருந்தால் உங்களுக்கு தண்டனை கொடுக்கலாமா என்று தகப்பனை கேட்டார் ஈஸ்வரன் என்னிடத்தில் தப்பு இருந்தால் செய்யப்பா என்று சொன்னார் .
ஒன்பது நவகிரகமும் சனிபகவானுக்கு கட்டுப்பட்டவர்கள் இது போல் முதல் யுகத்தை சக்தியும் சிவனும் பிறப்பித்தார்கள் .அப்பொழுது ஈஸ்வரி சந்தோஷத்துடன் முதல் யுகத்தை பிறபித்து பசு நன்றாக மேய்ந்து விட்டு நான்கு கால் வலுவுடன் நிற்பது போல் யுகத்தை படைத்தார் .
மக்கள் முதல் யுகத்தில் அதிக வரம் பெற்று ராட்ஷதனமாக கொடுமை செய்து கொண்டு குணம் மாறி விட்டார்கள் . அப்பொழுது ஒரு கால் வலுவு இழந்தது .
அப்பொழுது இரு கால்வலுவு இழந்தது போல் இரண்டாவது உலகத்தை படைத்தார்கள் .
மூன்றாவது யுகம் பிறப்பிக்கும் பொழுது மூன்று கால் வலுவு இழந்தது போல்
உலகத்தை படைத்தார்கள். ஒரு காலில் பசு நிற்க போகும் போது நான்காவது யுகத்தை உலகத்தை அளித்து நல்ல விதமாக பிறபிக்கலாம் என்று நினைத்தார்கள் . இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவன்களும் தந்தைக்கும் மகளுக்கும் உண்டாகியது
விபூதி Central Government
மேலே ஈஸ்வரன் , நடுவில் தாய், கீழே மகாவிஷ்ணு
திங்கள், 19 ஜனவரி, 2026
ஞாயிறு, 18 ஜனவரி, 2026
முருகர் ,தாய் கொடுத்த பாலை கக்கியது ,பஞ்சாட்சரம் திருநீறு
சனி, 17 ஜனவரி, 2026
கோயிலுக்கு கொடுக்க வேண்டியது
எண்ணை ஊற்றி தூங்கா விளக்கு
பெரிய காமாட்சி அம்மன் விளக்கு
கோயில் மணி, கை மணி
தூப தீபம் கொத்து
செப்புக்குடம்.
வெள்ளி, 16 ஜனவரி, 2026
வியாழன், 15 ஜனவரி, 2026
புதன், 14 ஜனவரி, 2026
செவ்வாய், 13 ஜனவரி, 2026
அச்சம், ஆசை, மர்மம் இவைகள் தான் இந்த உலகத்தை உண்டாக்கியது
திங்கள், 12 ஜனவரி, 2026
தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இதை எப்போதும் விடக்கூடாது.
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
வெள்ளை அரளி பூ, தும்பை பூ சிவனாருக்கு உகந்தது.
எருக்கன் பூ மாலை விநாயகருக்கும் தாய்க்கும் சிறப்பானது.
வெள்அருகு பிள்ளையாருக்கு உகந்தது
ரோஜா பூ இராமலிங்க சுவாமிகள்
துறவிகள் மூலமாக தோன்றியவர்கள் – நிபுணர், சிற்பி, விஞ்ஞானி
வெள்ளி, 9 ஜனவரி, 2026
மக்களிடம் இருக்கும் கடுகளவு கஷ்டத்தையும் எனக்கு கொடு என்று கேட்பவர் நம் சுவாமிகள் ஒருவரே
வியாழன், 8 ஜனவரி, 2026
பதினைந்து நிமிடம் முகத்தை திருப்பாமல் சுவாமிகளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தால் நல்ல பாம்பு விஷம் இறங்கும்
செவ்வாய், 6 ஜனவரி, 2026
திங்கள், 5 ஜனவரி, 2026
சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்.
பச்சை பசும்பால் சிறிதளவு, நெய்,தேன்,கற்கண்டு தூள்,கொட்டை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள், பனைவெல்லம். இவைகள் அனைத்தையும் நன்கு இடித்து,நெய் தேனுடன் பிசைந்து வைத்தால் நீண்ட நாட்கள் சுவையாக இருக்கும்.
ஞாயிறு, 4 ஜனவரி, 2026
உயர்ந்த ரக கொரோசனத்தை பெட்டியில் வைத்து இருந்தாலும் இலக்ஷ்மி கடாட்சம் பெறலாம்
இலட்சமி கடாட்சம்
வில்வமரத்தின் வடகத்திய வேர்,ஆலமரத்தின் வடகத்திய வேர், நாவல் மரத்தின் வடக்கத்திய வேர் ஆகிய மூன்று வேர்களையும் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று சந்தனம் போல அரைத்து நெற்றியில் திலகம் இட்டு வந்தாலும் இலட்சமி கடாட்சம் பெறலாம்.
வெள்ளி, 2 ஜனவரி, 2026
இலக்ஷ்மி கடாட்சம்
ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில்
காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல் காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும் பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக வைக்கவேண்டும்)
வியாழன், 1 ஜனவரி, 2026
சுவாமிகள் ஒருவருக்கு எந்த நல்ல காரியம் செய்ய விரும்பினாலும் முதலில் பல சங்கடங்கள், சஞ்சலங்கள்,கொடுத்து சோதித்து பார்த்து வழங்குவது வழக்கம். நாம் உறுதியாக இருக்கவேண்டும்.பத்து குழந்தைகளை பெற்ற தாய்,தன் பிள்ளைகளுக்கு எது நலம் என்று கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவித நலம் கவனிக்கும். அது போல் தருணம் வரும்பொழுது சுவாமிகள் அருளுவார்
அன்னதானம்
உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.