செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.

ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .

சனி, 14 பிப்ரவரி, 2026

ஒருவனுக்கு எழுத, படிக்க தெரியாது .எப்பொழுதும் முருகர் துணை ,ஓம் பராசக்தி துணை என்று எழுதிக்கொண்டு இருப்பான். சுவாமிகளிடம் வந்து குறைகளை கூறினான் .அதற்கு சுவாமிகள்  "அப்பா பைத்தியமே துணை" இவ்வாறு எழுதினால் கஷ்டம் தீரும் ஆனால் சோதனை வரும் என்றார் .அந்த ஆளுக்கு எழுத தெரியாது.பக்கத்தில் இருந்தவர் எழுதி கொடுக்க அதன் மேல் எழுதி பழகி ,15 நாட்கள் விடாமல் எழுதினான். எழுத எழுத சக்தி  நிறைய வந்தது .

எலுமிச்சம் பழத்தை கையில் வைத்து மந்திரம் சொன்னால் திருடு போன பொருட்கள் இருக்குமிடம், திருடர்கள் யார் யார் என்றுகூறிவிடுவானாம்.எலுமிச்சம் பழத்தை கையில்வதால் மேலே ஏறி இறங்குமாம் .ஒவ்வொரு நாளும் எலுமிச்சை பழம் விற்பவரிடம் சென்று இலவசமாக வாங்கி விடுவான் .பழம் விற்ப்பவரும் சுவாமிகளிடம் வது செல்பவர் .ஒரு முறை பழம் கிராக்கி மார்க்கெட்டில் எங்கும் கிடைக்கவில்லை .
அந்த நேரத்தில் பழம் நிறைய கேட்கும் கையில் சிறிது மட்டும் எடுத்து செல்லுமாறு கூறினார் கடைக்காரர் .நான் மந்திரம் போட்டால் உனது கடை என்ன ஆகும் தெரியுமா என்று பயமுறுத்தினான் அந்த ஆள் .அதற்கு பழ கடைக்காரர் உன் மந்திரத்தை எல்லாம் வேறு யாரிடம்மாவது வைத்து கொள் நான் அப்பா பைத்தியம் சுவாமிகளை பயபக்தியுடன் கும்பிடுகிறேன்,அவர் இருக்கும் போது என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் .
அதற்கு அவன் நான் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்து மந்திரம் போட்டால் சுவாமியையே இங்கு வரவழைப்பேன் என்று ஆணவமாக கூறினான்.அன்று இரவு அவன் மேற்க்கு தலை வைத்து கிழக்கு கால் நீட்டி  படுத்துறங்கும் போது விடியற்காலை 3 . 30 மணிக்கு ஒரு பெண் குழந்தை அருகில் நின்று கொண்டு இருந்தது,அக்குழந்தை அருகில் பீமன் போல் ஒரு ஆள் இருந்தார் ,அவரிடம் ஏறி மிதித்து கொல் என்றது குழந்தை.அந்த ஆள் ஏற மந்திரவாதி அலறினான் .
அப்போது சுவாமி அங்கு வந்து அவனை விட்டு விடுங்கள் பாவம், அந்த புத்தியை நீங்கள் தானே கொடுத்தீர்கள் என்றார். பின் யாவரும் மறைந்து   விட்டார்கள்  . விடிந்ததும்  சுவாமிகளை தேடி ஓடி வந்து மன்னிப்பு கேட்டான் .

சுவாமிகளிடம் எதாவது சாப்பிடுங்கள் என்றான்,வேண்டாம் என்று கூறினார் சுவாமிகள் .கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்தினான் .எனது வயிறுக்கு யாரும் சாப்பாடு போட முடியாது என்றார் சுவாமி ,நான் போடுகிறேன் என்றான் மந்திரவாதி .அங்குள்ள செட்டியார் கடையில் 159 இட்லி ,15 பக்கெட் சாம்பார், சட்னி ,18 ரவா தோசை ,உப்புமா எடுத்து வந்தனர் .சுவாமிகள் தனது கைகளால் பிசைந்து சாப்பிட்டார் .செம்பு செம்பாக காபி, ஒரு சொட்டு கூட மீதி வைக்கவில்லை .அப்படி இருந்தும் சுவாமிகளுக்கு பசி நீங்கவில்லை .மறுபடியும் மன்னிப்பு கேட்டான்,எல்லாம் காலி,கொடுப்பதற்கு எதுவும் இல்லை .பசியை ஏன் உண்டாக்கினீர்கள் என்றார் சுவாமி,இத்தனைக்கும் வயிறு ஒட்டித்தான் இருந்தது .சாயந்தரம் ஏழு மணிக்கு தண்ணீர் குடித்தவுடன் தான் பசி அடங்கியது .சுவாமி சாப்பிட்டாரா?பூதம் சாப்பிடதா ? என்றனர் அனைவரும் .பூதமல்ல என்றார் சுவாமிகள் .தாயின் வயிற்றின் அகலம், ஆழம் தெரிந்தவன் தான் எனக்கு வயிறு பூரா சாப்பாடு போட முடியும் என்றார் சுவாமி. 

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

செல்வம் வரும் போது   

செருக்கு வரக்கூடாது.

வியாழன், 12 பிப்ரவரி, 2026

சட்டி எடுத்து   பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்

புதன், 11 பிப்ரவரி, 2026

தர்மம் செய்தால்   மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும், 

பூஜைகளாலும்   தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

மற்றவர்களுக்கு நல்லது செய்யா விட்டாலும், கெட்டது செய்யாமல் இருக்க வேண்டும்.

சனி, 7 பிப்ரவரி, 2026

பகிர்ந்து உண்டால் பசி ஆறும் . தானே தின்றால் வீணா போகும்

வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

இறைக்கிற கிணறு ஊறும்.

கெட்ட செலவு செய்யாமல் நல்ல செலவு(தர்மம்) செய்தாலும் காசு வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்

வியாழன், 5 பிப்ரவரி, 2026

சம்பாதிக்கும் பணத்தில் 5 ல் ஒரு பங்கை தர்மம் செய்யவும் ஒரு பங்கை சேமித்து வைக்கவும் மூன்று பஙகை செலவுக்கு வைத்து கொள்ளவும் சேமித்து வைக்கும் பங்கு கஷ்ட காலத்தில் உதவும் தர்மம் செய்யும் பங்கு மறு ஜென்மத்தில் உதவும்.

புதன், 4 பிப்ரவரி, 2026

தாயின் சக்தி

தாயின் சக்திதான் ஜோதி
தாயின் சக்திதான் மயில்வாகனம்
தாயின் சக்திதான் குயில்
குயில் கூவுமிடத்தில் நீர் வளம் மிகுந்து இருக்கும்
மயில் கூட்டம் கூட்டமாக உள்ள இடத்தில் முருகர்   சக்தி   மிகுந்து  இருக்கும்
பேயாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான் .
தெய்வமாய் வந்து ஆடினாலும் தாயினுடைய சக்திதான்
தாயினுடைய பாசவலைதான் பேயாகவும், பிசாசாகவும், சாமியாகவும் வந்து ஆடுவது .

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

ஆழ்ந்த யோசனையும், அமைதியும் தியானத்திற்கும், குடும்பத்திற்கும் தேவையானது

திங்கள், 2 பிப்ரவரி, 2026

மொட்டை அடித்து கொள்வது எதற்கு

இனிய தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தது.முருகர் சாமியார் உருவம் கொண்டு இவர்கள் வீட்டிற்கு வந்து பசியாற்றுங்கள் என்றார் , அவர்கள் உணவு பரிமாறும் போது உங்கள் வீட்டு குழந்தையை கூப்பிடுங்கள் என்றார்  அவர்கள் குழந்தையில்லை என்றனர் குழந்தை இல்லாத வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று எழுந்து விட்டார்.தம்பதிகள் இருவரும் காலில் விழுந்து வணங்கி அழுதனர்.நீங்கள் கேட்டபடி பிள்ளைபேறு வரம் அளிக்கிறேன் நீங்கள் பதிலுக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டார்.நீங்கள் கேட்பதை தருகிறோம் என்று அவர்கள் கூறினார்கள் .அதற்கு அவர் உயிர் பொருளை கொடுங்கள் என்றார்.


குழந்தையும் பிறந்தது.சிறிது நாட்கள் கழித்து பேசியபடி உயிர்பொருளை கொடுக்க முருகர் கோயிலுக்கு சென்றனர் பின் குழந்தையை பலியிட்டு தன் நாக்கையும் அறுத்து கொண்டனர் . உடனே முருகர் தோன்றி ஏனப்பா உயிர் பொருளை தானே கேட்டேன் உயிரையா கேட்டேன் என்று கேட்க அவர்கள் உயிர் பொருள் எது என்று அவர்கள் முருகனிடம் கேட்க முருகன் தலைமுடி என்றார். குழந்தை சேவலாக மாறியது .


அதனால் தான்  சேவல் பலிகொடுப்பது , மொட்டை அடித்து கொள்வது .

தலைமுடியும் நகமும் உயிர்போருட்கள் நெருப்புக்கு மட்டும் அழியும் மற்ற எதுவாலும் அழியாது . மொட்டை மூன்றுமுறை அடித்தால் கிரக தோஷம் நீங்கும் மொட்டை சாமிக்கு நேர்ந்து கொண்டு அடித்தால் பத்து காவு ( பலி ) கொடுப்பதற்கு சமம் என்று கூறுவார் நம் சுவாமி . சுவாமிகள் நகம் வைத்து இருப்பது  மிக்க விசேஷம் எதாவது பெரிய கஷ்டம் வரும்போது சுவாமிகள் உயிர்பொருள் ஆன நகத்தை கொடுப்பார் .

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

சுவாமிகளை நினைக்கும் பொழுதும், மற்ற எந்த காரியம் செய்யும் பொழுதும், அதே கவனமாக காரியம் செய்தால் தான் பலன் கிட்டும், மனதை கண்டபடி அலைய விட்டால் பலன் கிட்டாது

சனி, 31 ஜனவரி, 2026

முருகர்

சூரசம்ஹாரம் செய்வதற்காக முருகர் தோன்றினார் .
ஈஸ்வரனும் ஈஸ்வரியும் முதலில் விநாயகரை பிறப்பித்தனர் . ஈஸ்வரி விநாயகரை கொஞ்சிக்கொண்டிருக்கையில் ஈஸ்வரர் விநாயகரை தூக்க ஈஸ்வரி மறுத்தார். அப்போது சிவன் இன்னொரு பிள்ளையும் இருந்தால் இருவரும் கொஞ்சலாமே என்று முருகனை பிறப்பித்தார் .முருகருக்கு ஐந்து வயது ஆகையில் எல்லா கலைகளிலும் தேர்ச்சிபெற்றார்.சிவனிடம் எல்லா வரங்களையும் பெற்றார்.பிள்ளையார் எதுவும் கேட்கவில்லை எல்லா வரங்களையும் தம்பிக்கே கொடுத்துவிடுங்கள் என்றார்.முருகர் யார் சண்டைக்கு வந்தாலும் அடித்து போட்டு விடுவார் .ஒருமுறை சிவன் துரு துரு என்று இருக்கிறானே அமைதியான பிள்ளையை பிறப்பித்து இருக்கலாமோ என்று நினைத்தார்.முருகர் பேசாமல்  ஊமை   போல் ஆகிவிட்டார் .பார்வதிக்கு இது தெரிந்தவுடன் ஏன் அது போல் நினைத்தீர்கள்  என்று    கேட்க சிவன் தவறாக நினைத்துவிட்டேன் என்று மன்னிப்பு கேட்டார் .
குழந்தையிலே அழித்துவிடலாம் என்று அசுரர்கள் திட்டம் போட்டனர் .முருகன் தொட்டிலிலே இருக்கும் பொழுது ஆராரோ நீ யாரோ நான் யாரோ வயது வாலிபன் ஆனேன் அம்மா என்றார் .உடனே வயது வாலிபன் தோற்றம் அடைந்தார் .பின்பு ஆராரோ நீ யாரோ நான் யாரோ ஏழு அடுக்கு மாளிகையை கண்டேன் அம்மா என்றார் உடனே ஏழு அடுக்கு மாளிகை தோன்றியது .அடுத்து  ஆராரோ நீ யாரோ நான் யாரோ கிழவனாய் ஆனேன் அம்மா என்றதும் கிழவனாய் காட்சி அளித்தார் .( அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி கனிவாய் மொழி பேசி ...அதனால்தான் தொட்டிலில் உள்ள குழந்தைகளை ஆராரோ என்று தாலட்டுகிறோம் ) பின்பு முருகர் அசுரர்களை வதம் செய்தார்  

சற்குருவின் மேல் நிர்ணயமாக இருப்பவனிடம் சற்குரு தானும் நிர்ணயமாக இருக்கையில் இருமனமும் ஒன்று கலந்து பிரம்ம தேவனின் எழுத்தை முறியடித்து விடும் .ஆகையால் பக்தனின் நிர்ணயத்தை கலைப்பதற்கு பிரம்ம தேவன் மாயாவையே அனுப்பி அவன் மனதில் சபலத்தை எழுப்பும் .இச் சோதனைகளை எல்லாம் வென்று எல்லாம் சற்குருவே என் செயல் யாது ஒன்றும் இல்லை தனது என்று ஒன்றும் இல்லை பட்டற்றநிலையை ஏற்படுத்தி கொண்டவனுக்கு சற்குருவே சாப்பாடும் கொடுப்பார் குறைகளையும் தவிர்ப்பார்

வியாழன், 29 ஜனவரி, 2026

கோயிலுக்கு போனாலும், ஒரே மனதாக ஒரே நோக்கமாக நமது கஷ்டங்களை போக்க கடவுளிடம் கேட்டால் நமது கஷ்டங்கள் உடனே தீரும்.

புதன், 28 ஜனவரி, 2026

நம் உடம்பில் சக்தியும், உள்ளத்தில் விழிப்பு உணர்வும் இருக்கும் போதே நாம் கடவுளை தேடி உணர்ந்து கொள்ளவேண்டும்.

செவ்வாய், 27 ஜனவரி, 2026

காட்டு முயல், பதினெட்டு அடி வேங்கை, கவரி மான், காராம் பசு, பச்சை புறா, தெய்வ அம்சம் பொருந்தியவை

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

வெள்ளி, 23 ஜனவரி, 2026

திருவக்கரையில் உள்ள கல்மாதிரி உலகத்தில் வேறு எங்கும் கிடைக்காது

பச்சைக்கல், பூமிக்கு அடியில் கிடைக்கும் கருப்புக்கல், மலை மேல் உள்ள கருப்புக்கல்.

வியாழன், 22 ஜனவரி, 2026

சுவாமிகள் ,மகாவிஷ்ணு -  குழந்தையையும் கிள்ளுவார், தொட்டிலையும் ஆட்டுவார்

பராசக்தி -  கோபக்காரி

லக்ஷ்மி – ஓரவஞ்சக்காரி

நாரதர் – கோள்முட்டி 

மூதேவி – நல்ல மகராசி , உத்தமி என்று கூறுவார்.

புதன், 21 ஜனவரி, 2026

தமிழ் வருடங்கள் 60

நட்சத்திரங்கள்     27

இராசிகள்              12

கிரகங்கள்             09

                             108

செவ்வாய், 20 ஜனவரி, 2026

உலகப்படைப்பு

 சிவன் மக்கள்  ஆக்கல்,அழித்தலுக்கு நான்கு பேரை  பிறப்பித்தார் . அந்த நாலவர் யாரென்றால் முதல் பிள்ளையாக பிறந்தவர் பிரம்மா , இரண்டாவது பிள்ளை நாரதர் , மூன்றாவது பிள்ளை எமதர்மன், நான்காவது பிள்ளை மகாவிஷ்ணு .

இந்த நான்கு பேருக்கும் சகல சக்தியையும் கொடுத்து பிறப்பித்தார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை கொடுத்து பிறப்பித்தார் .


நான்கு பேரும் தகப்பன் இடத்திலேயே வேலை பார்க்கலாம் என்று வந்து விட்டார்கள். அதற்கு சிவனும் சக்தியும் என்னை 3-3/4 நாழிகைக்குள் யார் பார்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வேலை கொடுப்பேன் என்று காற்றாய் மறைந்து விட்டார்.

தனது இல்லதிற்குள்ளேயே இருக்கிறார் என்பதை மறந்து கீழ் லோகம், மேல் லோகம்   எங்கும்  துழவிப் பார்த்தார்கள் கிடைக்காமல் போக பிரம்மா தாழம்பூவை பிடித்து வைத்து நான்தான் பார்த்தேன் என்று மற்ற மூவரிடமும் பொய் சொல்ல சொன்னார் . ஈஸ்வரன் பிரகாசமானவுடன் நீ பொய் சொன்னதால் உன்னை ரட்சிக்க மாட்டார்கள் நான் உண்டாக்க நன்மை தீமைகளை எழுதிகொள் என்று சொன்னார் .


நாரதரை பார்த்து நீ என்னப்பா வேலை என்று கேட்டார். எனக்கு பக்கமாய் இருக்கும் வேலையை கொடுங்கள் என்று நாரதர் கேட்டார் . இந்த உலகத்தில் நன்மை தீமை செய்வது யார் என்று  செய்தி சொல்லி கொண்டிரு என்று சொன்னார் .

இந்த உலகத்தை எப்படி கவனிப்பது என்று சொன்னார். சிவன் தன் சுயரூபம் கொடுத்து காலால் மூன்று எட்டு எடுத்து வைத்தார் உலகம் சரியாய் விடும் என்று சொன்னார் இரண்டு எட்டு வைத்தவுடன் உலகம் சரியாகி விட்டது .மூன்றாவது அடி நான் எங்கே வைப்பது என்று நாரதர் கேட்டார் .அதற்கு சிவன் நானே நீ ,நீயே நான் எனது தோளில் வை என்று சொன்னார் .


எமதர்மரை நீ என்னப்பா வேலை செய்கிறாய் என்று கேட்டார் . எனக்கு பாவமில்லாத வேலையை கொடுங்கள் என்று கேட்டார்.சகல ஜீவன்களையும் பிறப்பித்து சகல ஜீவன்களிடம் நான் ஜீவன் விட்டு பிரியும் போது அந்த கணக்கை நீ எழுதுப்பா என்று சொன்னார். ஐயோ  நான் இம்சை பண்ணித்தான் அந்த கணக்கை ஒப்படைக்க வேண்டும் இது பாவமல்லவா என்று எம தர்மன் கேட்டார்.

ஒவ்வொருத்தர் ஆத்மா பிரிகையில் கீழே விழுந்தது , ஜுரம் வந்தது , விக்கல்  என்று பாவமெல்லாம் எங்களோடையே இருக்கட்டும் நீ இந்த வேலையை செய்யடா என்று சிவன் கூறினார் .


நான்காவது பிள்ளை மஹா விஷ்ணு விடம் நீதான் மற்ற வேலைகள் யாவும் செய்ய வேண்டும் என்று கொடுத்தார் ஐயோ இத்தனை வேலைகளையும் நான் எப்படி பார்ப்பேன் நீங்கள் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்று சொன்னார் நீங்கள் அப்படி செய்தால் தான் சகல ஜீவன்களும் படிந்து கட்டுப்பாடிற்கு வரும் என்று சொன்னார் .


அதற்கு சிவனும் சக்தியும் நாங்கள் கூடவே இருப்பதற்காகவா  உங்களை படைத்தோம் என்று கேட்டார்கள் .


இவ்வளவு வேலையையும் நான் எப்படி பார்கிறது என்று மஹா விஷ்ணு மீண்டும் கேட்க சிவன் பூசை போடுவதை விட்டு நாமம் போடுவது போல் எடுத்து போட்டார் . அப்படி செய்தால் நான் எப்படி காண்பது என்று மகாவிஷ்ணு கேட்க சிவன் வலது புறம் இருப்பது நான், இடது புறம் இருப்பது நீ ,  நடுவில் இருப்பது உன் தாயடா என்று சொன்னார் .நீ எப்போது நினைக்கிறாயோ அப்போது நாங்கள் உன்னுடுடன்  இருப்போம் என்று சொன்னார் .அப்படி வரம் வாங்கி கொண்டு எழுந்து போக உலகம் மொத்தமாக ஒன்றாக அவருடன் வந்தது .நான் எப்படி உலகத்தை தூக்கிகொண்டு இரட்சிப்பது என்று கேட்க ,மக்களை முன்னே பிறப்பித்தோம் அந்த மக்களின் சகல ஆசைகளையும் வெறுத்து  சிவா சிவா என்று உட்கார்ந்து இருப்பவன் உன்னிடம் அடிபணிய மாட்டான் நீங்கள் தான் அவனை அடிபணிந்து ரட்சிக்க வேண்டும் என்று சொன்னார், அப்படியே செய்கிறேன் என்று மகாவிஷ்ணு சொன்னார்.அப்பொழுதுதான் உலகம் ஒன்றாய் சேர்ந்து வரவில்லை மகாவிஷ்ணு சகல வேலைகளையும் செய்கிறேன் என்று ஒத்துகொண்டார் .

நாரதர் விஷ்ணுவுடன் இருப்பது போல் என்னுடன்    நீங்களும் இருக்க வேண்டும் என்று சொன்னார் ,நாரதருக்கு நாமத்தை போட்டார் நீ எல்லோருக்கும் செய்திகளை தூது சொல்லிக்கொண்டு இரு என்று சொன்னார் .சிவன் மக்களுக்கு நல்லது   கெட்டது அறிந்து நேரம் காலத்தை கணித்து வைத்து விதிப்பிரகாரம் அவனுக்கு செய்ய சனீஸ்வரனை பிறப்பித்தார் . அப்பொழுது மக்களுகெல்லாம் அவர்கள் நன்மை தீமைகளை அறிந்து அதற்கேற்றாற்போல் என்னை தண்டனை கொடுக்க சொல்கீறீர்கள் அனால் உங்களிடத்தில் தவறு இருந்தால் உங்களுக்கு தண்டனை கொடுக்கலாமா என்று தகப்பனை கேட்டார் ஈஸ்வரன் என்னிடத்தில் தப்பு இருந்தால் செய்யப்பா என்று சொன்னார் .

ஒன்பது நவகிரகமும் சனிபகவானுக்கு கட்டுப்பட்டவர்கள் இது போல் முதல் யுகத்தை சக்தியும் சிவனும் பிறப்பித்தார்கள் .அப்பொழுது ஈஸ்வரி சந்தோஷத்துடன் முதல் யுகத்தை பிறபித்து பசு நன்றாக மேய்ந்து விட்டு நான்கு கால் வலுவுடன் நிற்பது போல் யுகத்தை படைத்தார் .


மக்கள் முதல் யுகத்தில் அதிக வரம் பெற்று ராட்ஷதனமாக கொடுமை செய்து கொண்டு  குணம் மாறி விட்டார்கள் . அப்பொழுது ஒரு கால் வலுவு இழந்தது .


அப்பொழுது இரு கால்வலுவு இழந்தது போல் இரண்டாவது உலகத்தை படைத்தார்கள் .

மூன்றாவது யுகம் பிறப்பிக்கும் பொழுது மூன்று கால் வலுவு இழந்தது போல் 

உலகத்தை படைத்தார்கள். ஒரு காலில் பசு நிற்க போகும் போது நான்காவது யுகத்தை உலகத்தை அளித்து நல்ல விதமாக பிறபிக்கலாம் என்று நினைத்தார்கள் . இந்த உலகத்தில் உள்ள அணைத்து ஜீவன்களும் தந்தைக்கும் மகளுக்கும் உண்டாகியது

விபூதி Central Government 

மேலே ஈஸ்வரன் , நடுவில் தாய், கீழே மகாவிஷ்ணு

திங்கள், 19 ஜனவரி, 2026

முருகர் தந்தை கொடுத்த இரத்தத்தை கக்கியது கஷாயம்

ஞாயிறு, 18 ஜனவரி, 2026

முருகர் ,தாய் கொடுத்த பாலை கக்கியது ,பஞ்சாட்சரம் திருநீறு

சனி, 17 ஜனவரி, 2026

கோயிலுக்கு கொடுக்க வேண்டியது

எண்ணை ஊற்றி தூங்கா விளக்கு

பெரிய காமாட்சி அம்மன் விளக்கு

கோயில் மணி, கை மணி

தூப தீபம் கொத்து

செப்புக்குடம்.

வெள்ளி, 16 ஜனவரி, 2026

காற்று,நீர்,நெருப்பு தான் கடவுள்

வியாழன், 15 ஜனவரி, 2026

மன்னிப்பு கேட்டால் கடவுள் மன்னிப்பு கொடுப்பார்

புதன், 14 ஜனவரி, 2026

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அச்சம், ஆசை, மர்மம் இவைகள் தான் இந்த உலகத்தை உண்டாக்கியது

திங்கள், 12 ஜனவரி, 2026

தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இதை எப்போதும் விடக்கூடாது.

ஞாயிறு, 11 ஜனவரி, 2026

வெள்ளை அரளி பூ, தும்பை பூ சிவனாருக்கு உகந்தது.

எருக்கன் பூ  மாலை விநாயகருக்கும் தாய்க்கும் சிறப்பானது.

வெள்அருகு பிள்ளையாருக்கு உகந்தது

ரோஜா பூ இராமலிங்க சுவாமிகள்

துறவிகள் மூலமாக தோன்றியவர்கள் – நிபுணர், சிற்பி, விஞ்ஞானி

வெள்ளி, 9 ஜனவரி, 2026

மக்களிடம் இருக்கும் கடுகளவு கஷ்டத்தையும் எனக்கு கொடு என்று கேட்பவர் நம் சுவாமிகள் ஒருவரே

வியாழன், 8 ஜனவரி, 2026

பதினைந்து நிமிடம் முகத்தை திருப்பாமல் சுவாமிகளின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தால் நல்ல பாம்பு விஷம் இறங்கும்

நல்லது கெட்டது என்று பிரித்தால் சம்சாரி

செவ்வாய், 6 ஜனவரி, 2026

அச்சத்தை தவிர்த்தால் ஞானம் தானே வரும்

திங்கள், 5 ஜனவரி, 2026

சுவாமிகள் கூறும் சிவபூஜை பஞ்சாமிர்தம்.

பச்சை பசும்பால் சிறிதளவு, நெய்,தேன்,கற்கண்டு தூள்,கொட்டை நீக்கிய பேரீச்சம்பழ துண்டுகள், பனைவெல்லம். இவைகள் அனைத்தையும் நன்கு இடித்து,நெய் தேனுடன் பிசைந்து வைத்தால் நீண்ட நாட்கள் சுவையாக இருக்கும்.

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

உயர்ந்த ரக கொரோசனத்தை பெட்டியில் வைத்து இருந்தாலும் இலக்ஷ்மி கடாட்சம் பெறலாம்

இலட்சமி கடாட்சம்

வில்வமரத்தின் வடகத்திய வேர்,ஆலமரத்தின் வடகத்திய வேர், நாவல் மரத்தின் வடக்கத்திய வேர் ஆகிய மூன்று வேர்களையும் காப்பு கட்டி எடுத்து சுவாமிகளிடம் கொடுத்து உயிர்ப்பு பெற்று சந்தனம் போல அரைத்து நெற்றியில் திலகம் இட்டு வந்தாலும் இலட்சமி கடாட்சம் பெறலாம்.

வெள்ளி, 2 ஜனவரி, 2026

இலக்ஷ்மி கடாட்சம்

ஞாயிற்றுக்கிழமையும் அமாவாசையும் கூடிய நன்னாளில் 

காரைக்காய்,நார்த்தங்காய்,கிச்சிலிக்காய்,கடாரங்காய் ஆகியவைகளில் ஒன்றை நகம் படாமல் காப்பு கட்டி எடுத்து சாமிகளின் சமாதியில் வைத்து உயிர்ப்பு பெற்று, அருளாசியும் பெற்று பெட்டியிலோ அல்லது பீரோவிலோ வைக்கவேண்டும்.( சிறிது நாட்கள் காற்றோட்டமாக வைக்கவேண்டும்)

வியாழன், 1 ஜனவரி, 2026

சுவாமிகள் ஒருவருக்கு எந்த நல்ல காரியம் செய்ய விரும்பினாலும் முதலில் பல சங்கடங்கள், சஞ்சலங்கள்,கொடுத்து சோதித்து பார்த்து வழங்குவது வழக்கம். நாம் உறுதியாக இருக்கவேண்டும்.பத்து குழந்தைகளை பெற்ற தாய்,தன் பிள்ளைகளுக்கு எது நலம் என்று கருதி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவித நலம் கவனிக்கும். அது போல் தருணம் வரும்பொழுது சுவாமிகள் அருளுவார்

 அன்னதானம்


   உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.