புதன், 22 செப்டம்பர், 2010

Swamigal Padiya padalgal Akilaanda Kodi


அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி 





முந்தி உதித்தவரே முக்கண்ணணார் தன் மகனே





சக்தி விநாயகரே நீர் தானோ சண்முகரே நீர் தானோ





நாவில் சரஸ்வதியே நல்ல கணபதியே 





நான் காலமும் தொழுவேன்





அல்லல் வினைகள் எல்லாம் அகளியிடம் சொல்லி அறிவேன்





தொல்லல் வினைகள் எல்லாம் துரிதமாய் நீக்குவாயோ 





சிவ சிவா என்ற திருநாமம் சிந்தைதனில் நான் மறவேன்





ஓதி வைத்த என் குருவே ஓரு நாளும் நான் மறவேன்





பாடி வைத்த என் குருவே பல நாளும் நான் மறவேன் 





காற்றாய் நீராய் நெருப்பாய் 





அனலாகும் தனலாகும் அன்பு தெய்வமே 





கல்லார்க்கும் கருடார்க்கும் புல்லார்க்கும் 





பூண்டார்க்கும் புழுவார்க்கும் தெய்வமே 





ஒரு ஆணார்க்கும் பெண்ணார்க்கும் தெய்வமே 





 நாதாந்த தெய்வமே நடுவிருக்கும் தெய்வமே 





வேதாந்த தெய்வமே 





வேதமுடி மேலிருந்து வேண்டுகின்ற தெய்வமே





தாயாகி தந்தையாகி தாங்கி வளர்க்கும் தெய்வமே





ஆணும் நீயே பெண்ணும் நீயே ஆள வந்த அரசும் நீயே





எங்கும் நிறைந்தவரும் நீ இதயத்தில் உள்ளவரும் நீ





இந்த கொரக்குரும்பை கட்டடக்க வந்த வல்லவரும்  நீ 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக