புதன், 14 செப்டம்பர், 2011
அதிகமான வாதவாயு விலக
ஆஸ்த்மா
தூதுவேளை தழையை காய வைத்து இடித்து,சலித்து,அரிசி திப்பிலி நூறு கிராம் மிளகு இருபது கிராம் இரண்டையும்
பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து தூதுவேளை தூள் உடன்
கலந்து ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் ஆஸ்த்மா விலகும்.ரத்தம்
சுத்தியாகும்.தூதுவேளை காயையும் பழத்தையும் சுண்டக்காய் வறுத்து சாப்பிடுவதுபோல்
சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது.
பித்தம் அதிகமாவது குறைய
முருங்கைதழையும்,மிளகையும் சேர்த்து அரைத்து உருண்டை ஆக்கி
சாப்பிடவும்.பித்தம் அதிகமாக கூடாது.பித்தம் தலைக்கு ஏறக்கூடாது.
நீரகாரம் தினமும் சாப்பிடவும்.எலுமிச்சம் பழ சாற்றில் உப்பு போட்டு
சாப்பிட்டால் பித்தம் நீங்கும்.மிளகு கஷாயம் சாப்பிட்டால் உஷ்ணம் நீங்கும்.
வயிற்றுவலி அதிகமாக இருப்பது விலக
நமச்சல் விலக
ஆடுதின்னாபாளை சாறு,எள்எண்ணெய்,இரண்டு பூண்டு பள்ளு,நான்கு கிராம் நெல்லிக்காய் கந்தகம்,இரண்டு மிளகு,போட்டு எரித்து பதமாக இறக்கி உள்ளுக்கும்,வெளிக்கும் பயன்படுத்தலாம்.
கண் நன்றாக தெரிய
கீழாநெல்லி தழையை தினமும் பறித்து சாப்பிடவும்.புளி உதவாது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)