செவ்வாய், 30 நவம்பர், 2010

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

மருத்துவம் சளி கட்டுவது நீங்க

முருங்கை பூ ,மூன்று பூண்டு பள்ளு ,மிளகு சிறிதளவு கற்பூரம் சேர்த்து அரைத்து சாப்பிடவும் .

மருத்துவம் கோமக்கோனை கட்டி

மருத்துவம் கோமக்கோனை கட்டி

கும்னா செடியின் வேர்,பட்டையைக் கொண்டு வந்து  சுத்தம் செய்து தூள் செய்யவும். ஒரு படி எள்ளு மாவும் ஐந்து பெரிய பனைவெல்ல கட்டி எல்லாவற்றையும்  இடித்து ஆறு உருண்டைகளாக செய்து ஒரு உருண்டையை தர்மம் செய்யவும், மீதி உருண்டையை தினம் ஒன்று சாப்பிடவும்.     

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் தனி ஒருவனே கட்டக்கூடாது

கோயில் கட்டித்தருகிறேன் என்று போகாதே. நன்கு தெரிந்தவர்கள் பத்து பேர்களிடம் காசு வாங்கி செய்யவேண்டும் .பிரியபட்டதை கொடு என்று கேக்கவேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருடத்தில் இறந்து விடுவான் அல்லது பின்னப்படுவான்.     

திங்கள், 29 நவம்பர், 2010

மருத்துவம் கர்ப்ப கோளாறு

மருத்துவம் கர்ப்ப கோளாறு

அருகம்புல் அரைத்து பாலில் கொடுக்கவேண்டும்

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க

மருத்துவம் இளம்பிள்ளைவாதம் பிள்ளைகளுக்கு வராமல் தடுக்க
கர்ப்பிணிக்கு தனியா அதிகமாகவும்,மோடி குச்சி, மிளகு ,சீரகம்,சுக்கு வறுத்து இடித்து சலித்து தழுதாளி இலையை எள் எண்ணையில் வதக்கி பூண்டு வைத்து ஆட்டி கடுகு போட்டு தாளித்து ஊறுகாய் போல் உபயோகித்து வரவேண்டும் .    

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க

மருத்துவம் கைக்குழந்தைக்கு கபம்,சளி நீங்க 

குப்பை மேனி இலை,துளசி இலை ஆவி கட்டி சாரு எடுத்து அதில் நான்கு சொட்டு தேன் விட்டு  பாலாடையில் தினமும் காலை கொடுத்தால் கபம் ,சளி மூன்று மாத குழந்தைகளுக்கு
விலகும். 

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு

மருத்துவம் குழந்தை மாந்தத்திற்கு
கல்யாணமுருங்கை கொழுந்து ,வெள்ளை வேலம் பட்டை ,உதயங் கொழுந்து இவைகளை சம அளவு சேர்த்து அரைத்து பாலில் ஒரு தேக்கரண்டி ஆறு மாதம் வரை கொடுக்கலாம் .ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைக்கு இரண்டு அவுன்ஸ் கொடுக்கலாம் .

பாகற்காய்  இலையின் சாற்றை சனிக்கிழமை அன்று பாலாடையில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுத்தால் நீங்கும்.