சனி, 30 அக்டோபர், 2010

செடிகளில் உள்ள பூச்சிகள் விலக

செடிகளில்  உள்ள  பூச்சிகள் விலக  

ஒரு லிட்டர் உப்புக்கு இருபது லிட்டர் தண்ணீர் (1 :  20)   ஊற்றி கலந்து பூச்சி உள்ள இடத்தில் செடிகளில் தெளிக்க பூச்சிகள் மடியும் செடி செழிப்பாக விளையும் .

கருடன்

கருடன்
கருடனை பார்த்தால் மகாவிஷ்ணுவை பார்ப்பது போன்று .
கருடனை பார்த்தால் தலைக்கு மேல் இருகைகளையும் தூக்கி கும்பிடவேண்டும் .
சுவாமிகளை நினைத்து ஜபம் செய்தால் கருடன் வரும் . கருடன் வந்தால் நம் தோஷங்கள் நம்மை விட்டு விலகுவதாக அர்த்தம் . கருடபத்து படித்தால் கருடன்கள் நிறைய வரும் .



ஞானம் பெற

ஞானம் பெற 

ஒருவருக்கு ஞானம் வருவதற்கு எந்த ஆசையும் இருக்க கூடாது . தனக்கு என்று எதுவும் கேட்க கூடாது . நான் என்ற சொல் வரக்கூடாது . யாரையும் சிஷ்யன் என்று கூறக்கூடாது

துறவியின் சாபம்

துறவியின் சாபம்

துறவி சாபம் கொடுத்தால் ஊரே உருப்படாமல் போய் விடும் . சுவாமிகளை நினைத்து கும்பிட்டால் சரியாகும் .
ஒரு துறவி கொடுத்த சாபத்தை ஒரு துறவியால் தான் மாற்ற முடியும்

கஸ்தூரி

கஸ்தூரி
கஸ்தூரி ஒரு துளி வீட்டில் இருந்தாலே வீடு லட்சுமிகரமாக இருக்கும் .

கஸ்தூரி நல்லதா கெட்டதா என்று பார்க்க கஸ்தூரி யுடன்  பூண்டை நசுக்கி முகர்ந்து பார்த்தால் பூண்டு வாடை வராது .

தண்ணீரில் போட்டு குடிக்க மணமாக இருந்தால் நல்ல கஸ்தூரி கவுச்சி நாற்றம் அடித்தால் நல்ல கஸ்தூரி அல்ல .  

உடல் பலம் பெற

 உடல் பலம் பெற
சிறுவயது முதல் குழந்தைகளுக்கு தாமரை கொட்டை கொடுத்து வந்தால் எந்த வியாதியும் வராது .தாமரை கொட்டை குளிர்ச்சியானது 
சின்ன பருத்தி கொட்டையை ஊற வைத்து ஆட்டிபிழிந்து பசும் பாலுடன் காய்ச்சி பாயசம் போல் செய்து தினமும் குடித்து வர மார்பு பலம் பெரும் . நெஞ்சில் தேங்காய் உடைக்கலாம்
எருக்கன் வேர் மண்ணில் இருந்து ஒரு அடிக்கு ( பூமி மட்டத்தில் இருந்து ஒரு அடி வரை இருப்பது விஷத் தன்மை உள்ளது )   கீழே உள்ள வேரை எடுத்து இடித்து பசும்பாலில் போட்டு காய்ச்சி வடகம் போல் தட்டி வெயிலில்  காயவைத்து ( சிலநாட்கள் இது போல் தொடந்து செய்ய வேண்டும் ) பின் நன்றாக தூள் செய்ய வேண்டும் . பின் பனங்கற்கண்டு( சம எடை )  தேனுடன் சேர்த்து அரைத்து லேகியம் போல் செய்து சாப்பிடவேண்டும்  . உடம்பு தானே பலம் பெரும் ( இம் மருந்து சூட்டை அதிகப்படுத்தும் )  .
இம்மருந்தை சுவாமிகள் கூறிய முறைப்படி செய்து 85 வயதான கிழவருக்கு 45 நாட்கள்   கொடுக்க தள்ளாடி நடந்து கொண்டு இருந்தவர் ஓட ஆரம்பித்து விட்டார் ............
        

குரங்கு

குரங்கு
குரங்கை கொல்ல கூடாது . குரங்கை கொன்றால் ஏழு தலைமுறைக்கு பாவம் போகாது .
குரங்கு இறந்து விட்டால் அதை புதைத்து வேப்ப மரம் வைத்து கோயில் கட்டி கும்பிடுவார்கள்