வியாழன், 23 அக்டோபர், 2025

மனிதனுடைய சாப்பாட்டு அளவு


ஒரு மனிதனுடைய சாப்பாட்டு அளவு 32 கவளம் ( கையளவு ) தான் 

புதன், 22 அக்டோபர், 2025

காற்று,நீர்,நெருப்புதான் கடவுள்.

நம்பிக்கை இழக்காமல் இருக்கத்தான் கோயில்

செய்கிற தொண்டையோ,நன்மையோ,தர்மத்தையோ அடுத்தவனுக்கு சொல்லக்கூடாது.

திங்கள், 20 அக்டோபர், 2025

மிச்சம்

உண்டாகின இடத்தில் சிறிது எப்போதும் இருக்க வேண்டும் . எல்லாம் கொடுத்து விடாமல் சிறிதாகிலும் மிச்சம் வைக்க வேண்டும் . கடவுள் கொடுத்தவர் அவருக்காக மறுநாள் வரை இருக்க வேண்டும் .பாத்திரத்தில் இரவு சமைப்பதில் கொஞ்சம் போட்டு வைக்க வேண்டும் .மறுநாள் எடுத்து நாய், பசு ,காக்கை ஏதோ ஒரு ஜீவராசிக்கு கொடுக்க வேண்டும் .

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

சற்குருவின் மேல் நிர்ணயமாக இருப்பவனிடம் சற்குரு தானும் நிர்ணயமாக இருக்கையில் இருமனமும் ஒன்று கலந்து பிரம்ம தேவனின் எழுத்தை முறியடித்து விடும் .ஆகையால் பக்தனின் நிர்ணயத்தை கலைப்பதற்கு பிரம்ம தேவன் மாயாவையே அனுப்பி அவன் மனதில் சபலத்தை எழுப்பும் .இச் சோதனைகளை எல்லாம் வென்று எல்லாம் சற்குருவே என் செயல் யாது ஒன்றும் இல்லை தனது என்று ஒன்றும் இல்லை பட்டற்றநிலையை ஏற்படுத்தி கொண்டவனுக்கு சற்குருவே சாப்பாடும் கொடுப்பார் குறைகளையும் தவிர்ப்பார்     

சனி, 18 அக்டோபர், 2025

முந்தியில்தான் எந்த  பொருளையும் வாங்க வேண்டும். மடிபிச்சை உயர்ந்தது.

வெள்ளி, 17 அக்டோபர், 2025

கிரகங்களின் தோஷம் கெடுதல்களை தடுக்க .

தர்மம் செய்தால்  மட்டுமே கிரகங்களின் தோஷம்,கெடுதல்களை தடுக்க முடியும்,

பூஜைகளாலும்  தவத்தாலும் கிரகங்களை தடுக்க முடியாது.


வியாழன், 16 அக்டோபர், 2025

ஒரு  சம்சாரி தன் பெண்டாட்டி பிள்ளைகளை காபந்து செய்து நியாயத்துடன் தொழில் நடத்தி  கடமைகளை சரிவர  செய்து முடிக்கும் வாழ்க்கைக்கு கிடைக்கும் பலனை காட்டில் 36 வருடங்கள் கடுந்தவம் இருந்தாலும்  அடைய முடியாது .

புதன், 15 அக்டோபர், 2025

ஒரு மூட்டைக்கு ஒரு மரக்கால் கடவுளுக்கு ஒதுக்கு

செவ்வாய், 14 அக்டோபர், 2025

தினம் ஒரு கத்தை அவுத்திக்கீரை மாட்டுக்கு கொடுக்கவேண்டும்.

திங்கள், 13 அக்டோபர், 2025

தர்மத்திற்கு, பசி,பட்டினிக்கு,நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.

ஞாயிறு, 12 அக்டோபர், 2025

பசி ஆற்றுவது, ஏழைகள் கல்யாணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவருக்கு கூரை புடவை,வேஷ்டி,தாலி ( ஐந்து பேர் சேர்ந்து ) கொடுத்து உதவுவது,கோயில் கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, மனம் மகிழ்ந்து கொடுத்து முடிக்க செய்வது சுவாமிகள் கூறும் தர்மம்.

சனி, 11 அக்டோபர், 2025

விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

வியாழன், 9 அக்டோபர், 2025

அறுபத்திரண்டு வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.

தொண்ணூறு வயதுக்கு  மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.

நூற்றிஇருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி.உலகத்துக்கு பொதுவானவர்.

திங்கள், 6 அக்டோபர், 2025

தன்னை உணர்ந்து ( தன் உள்ளத்தை உணர்ந்து ) புல் பூண்டு எல்லா ஜீவராசிக்குள் இருக்கும் கஷ்டத்தையும் உணர்ந்தவர் வேட்டைக்காரன்புத்தூர் அழுக்கு சுவாமிகள் ஆவார்

32 லட்சணங்கள்


கைவிரல்கள்--------------------------- பத்து

கால் விரல்கள்------------------------- பத்து

காது--------------------------------------- இரண்டு

கண்---------------------------------------- இரண்டு

மூக்கு துவாரம்------------------------ இரண்டு

வாய்--------------------------------------- ஒன்று

மூத்திரதாரை------------------------- -ஒன்று

தொப்புள்--------------------------------- ஒன்று

மார்பு--------------------------------------- இரண்டு

மலம் அடிக்கும் தாரை --------------ஒன்று


மொத்தம் 32

வெள்ளி, 3 அக்டோபர், 2025

சட்டி எடுத்து  பிச்சை எடுத்தால் கூட நாய்க்கு போட்டால் தான் புண்ணியம்.

வியாழன், 2 அக்டோபர், 2025

கோபமுள்ள இடத்தில்

குணம் இருக்கும்

புதன், 1 அக்டோபர், 2025

தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இரண்டையும் கைவிடக்கூடாது.