வியாழன், 1 ஜனவரி, 2026

 அன்னதானம்


   உலகத்திலேயே அன்னதானம் ஒன்று தான் தானங்களில் சிறந்தது அதுவே கர்ம வினைகளை போக்க கூடியது மற்றபடி ஜப தவங்கள் எல்லாம் கர்ம வினைகளை போக்காது வீட்டிலே இருந்தாலும் கோயிலுக்கு போனாலும் கடவுளே எங்கள் உடலுக்கு எந்த வியாதியம் இல்லாமல் காப்பாற்று நல்ல சுகத்துடன் வைத்திரு என மனமாற வேண்டிவந்தால் போதுமானது கோயிலுக்கு சென்றால் நல்லெண்ணை கொண்டு செல்ல வேண்டும் மற்றபடி சம்சாரிகள் மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக மனசாட்சிக்கு விரோதமின்றி நேர்மையுடன் வாழ்ந்து வந்தால் போதுமானது அன்னதானம் செய்யும் போது ஆடம்பரம் விளம்பரம் இல்லாமல் ஏழைகளாக பார்த்து அவர்கள் வயிறும் மனமும் திருப்தி அடையுமாறு அன்னதானம் செய்வது சிறந்தது இதுவே இந்த ஜென்மத்திற்கும் அடுத்த ஜென்மத்திற்கும் நல்ல பலன்களைதந்து நிம்மதியுடன் வாழ வைக்கும்.

புதன், 12 நவம்பர், 2025

சந்தோசம் வரும்போது மகிழ்ச்சியும், கஷ்டம் வரும்போது துன்பமும் படாமல், கஷ்டத்திலும், சந்தோஷத்திலும் ஒரே நிதானமாக இருக்க வேண்டும் . இன்பத்தையும் ,துன்பத்தையும் ஒரே மாதிரி நினைக்கவேண்டும்.

ஆனந்தம் ,கஷ்டம் இரண்டையும் கடவுள்தான் கொடுக்கிறார் .

செவ்வாய், 11 நவம்பர், 2025

இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும்.


கஷ்டம் வரும் காலங்களில் சுவாமிகளின் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கவேண்டும்.

ஞாயிறு, 9 நவம்பர், 2025

தர்மம் செய்யும் குடும்பம் என்றைக்கும் குறையாது.இப்போது தெரியாது பின்னால் தெரியும்.



வெள்ளி, 7 நவம்பர், 2025

எவ்வளவு பொருளை அற வழியில் செலவு செய்தோமோ அவ்வளவு மட்டும் நம்முடைய பொருள்.

வியாழன், 6 நவம்பர், 2025

எங்கு தர்மம் செய்வது ?

எங்கு தர்மம் செய்வது ?

எட்ட போய் தர்மம் செய்தால் ( சாப்பாடு போடுதல் ) தான் புண்ணியம் கிடைக்கும் .

தன் வீட்டில் செய்தால் எப்போதும் புண்ணியம் இல்லை பிறர் இடத்தில்தான் செய்யவேண்டும் .

தன் வீட்டில் செய்யும் போது தனக்கு என்று எடுத்து வைத்திருப்போம் .சாப்பாடு தீர்ந்து விட்டது என்று சொல்லுவோம் . வீட்டில் இருத்தி வைத்துக்கொண்டே ஆயிடுச்சி என்று சொல்வது தர்மமா ?