வியாழன், 10 நவம்பர், 2011

சுவாமிகள் கூறிய அருளுரைகள்



 பசி சுவை அறியாது ,நித்திரை சுகம் அறியாது 

ரவுடிகளுக்கு கூட உபகாரம் செய்யலாம்,சாமியார்களுக்கு உபகாரம்
செய்யக்கூடாது
.
முட்டு வீட்டில் முணங்கிய பிள்ளை முழுவீடிலே முனங்குமாம்.
கோதரிசனம் பாப விமோசனம்.ஒரு மண்டலம் பசுமாட்டை சுற்றவும்.வெள்ளிக்கிழமை குளிப்பாட்டி பொட்டு இட்டு கும்பிட்டு அரிசியும் வெல்லமும் கொடு.
விக்னேஸ்வரனுக்கு விளக்கு வைத்து கும்பிடு.
கணவன் சொல் தட்ட கூடாது.
பெண்களால் தான் கணவன் குடும்பத்திற்கு நன்மை,தீமை ஏற்படுத்த முடியும்.
நாம் செய்யும் நன்மைகள் தான் நம்மையும் குடும்பத்தையும் காக்கும்.
உழுகிற காலத்தில் நன்கு உழுதால் அறுவடை செய்யும் காலத்தில் ஆனந்தமாக அறுவடை செய்ய முடியும்.

பிள்ளைகளுக்கு சம்பாதித்து வைத்து செல்ல பிள்ளைகளாக வளர்க்காமல் நல்லது கெட்டது என்பன உணரச் செய்யவேண்டும். உணர்ந்து நடக்க பழக்கப்பட வேண்டும்.
அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பத்திரத்தில் போட்டால் தன் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
துன்பத்தை கொண்டே இன்பத்தை அடைய வேண்டும். இன்பத்தையும் துன்பத்தையும் கை கால்கள் நல்ல படியாக இருக்கும் பொழுதே எனக்கு கொடு என்று சுவாமியை வேண்டிக்கொள்ள வேண்டும்.
துன்பத்தை (சரீரத்தில் உள்ள துன்பத்தைப் பட்டுக்கொண்டே ) தன் சக்தி வேண்டியபடி முடியுமளவுக்கு கடமையைச் செய்யவேண்டும்.
அழகு, அகங்காரம், தற்பெருமை, ஆணவம், கௌரவம் வந்தால் குணம் கெட்டு கேடினைத் தேடிக் கொள்கிறார்கள். நன்மையை என்றும் பெற முடியாது.
தெரியாமல் வருவது தான் மர்மம். சொல்லாதே கண்டேன் என்று சொல்லி நீ தற்பெருமை ஏற்படுத்திக் கொள்ளாதே.
பொறுமையோடு கஷ்டங்களைத் தங்கிக் கொள். தன்னுடனேயே வைத்திருக்க வேண்டும்.
நன்மையை உடனே கண்டுபிடிக்க முடியாது.தீமையை உடனே கண்டுபிடிக்க முடியும்.
முன்னே தாழ்ந்து போகவேண்டும்
.செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்.
கெட்ட நேரத்தில் தணிந்து போகவேண்டும்.
கெட்ட நேரம் இருக்கும் வரையில் பக்குவமாக கோபப்படாமல் சாந்தமாக இருக்க வேண்டும்.
தைரியத்தை பற்ற வேண்டும்.
தைரியத்தை எக்காலத்தும் விடக்கூடாது.
கணவனுக்கு எப்பொழுதும் மனைவிதான் சாப்பாடு போட வேண்டும்.
அப்படி போட்டு  வரும் வீடு நன்றாக இருக்கும்.
அவனவன் செய்த வினையை அவனவன் தான் அனுபவிக்க வேண்டும்.
மனோபூஜை பத்தியம் இல்லாதது.எந்த நேரமும் கும்பிடலாம்.
நினைத்தால் நல்லது கெட்டது பார்க்க கூடாது.(சுவாமிகளை தரிசிக்கவும்,கோயிலுக்குப் போவதற்கும்.) எண்ணி எண்ணி போனால் எப்பொழுதும் தடையாகும்.
தான் செய்த தவற்றை எல்லோருக்கும் முன் ஒத்துக்கொண்டால் அதுவே பரிவர்தனையாகும்.
துர்த்தனமாக கற்பழிக்கும் குகுடும்பம் தலைஎடுக்காது.

ஒரு அவுன்ஸ் இரத்ததிற்கு கம்மியாக உள்ள பிராணிகளை சாப்பிட்டால் பாவமில்லை.பிராமணர்கள் மீன், முட்டை சாப்பிடுகிறார்கள்.நரிக்குறவர்கள் சாப்பிடமாட்டார்கள்.
ஓர் அறிவு உள்ளன
தண்ணீரில் உள்ள ஜந்துக்கள்,சக்தி,மிகுதி {அதிக தண்ணீர் ஆகாரம்} நாய்க்கு ஓர் அறிவு,விசுவாசம் உள்ளது.

கடவுளை கும்பிடுவர்களுக்கு கஷ்டம் அதிகம் வரும்
எதை செய்தாலும் இது நமதல்ல என்று நினைக்கவேண்டும்.
பெண்கள் மாங்கல்யம் இல்லாமல் புண்ணியதிற்கு போக முடியாது.
வெறுத்து பேசினால் வேதாளம் கிளம்பிவிடும்.
கணவன் மனைவியை நாயே,பேயே என்று திட்டினாலும் பெண்கள் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
ஆண்கள் செய்யும் நன்மைகளில் பெண்களுக்கு பாதி புண்ணியம் உண்டு.
பெண்கள் செய்யும் தீமைகளில் ஆண்களுக்கு பாதி பாவம் உண்டு.

ஆற்றை கெடுத்தது நாணல்.
வேளாணமையை கெடுப்பது வேலி,புல்.
மனிதன் தின்று கொழுப்பான்.
கணவனுக்கு வரும் கண்டத்தை மனைவிதான் காபாற்றுவாள்.
தற்பெருமை கூடாது.
பேராசை தேவையில்லை.
தெய்வ நம்பிக்கை,நம் உழைப்பு இரண்டும் வேண்டும்.
ஊதியத்தில்  ஐந்தில் ஒரு பங்கு சேமிப்பு ஒரு பங்கு தர்மம்.
அளவுக்கு மிஞ்சிய தர்மம்தப்புஆகும்.
நலவனுக்கு வரும் பணம் நல்லவழியில் செலவாகும்.
மனிதன் கெடுவது காசினால்தான்.
பெண்களிடம் மன அமைதியும் தெய்வ நம்பிக்கையும் இருந்தால் கஷ்டம் உண்டாக்கும்  சனீஸ்வரன் இடம் இல்லை என்று போய்விடுவர் போகும் போது கொடுத்து விட்டு போவார்.
செய்யும் தர்மம்,நல்லவை செய்யும்போது அடுத்த வனுக்கு தெரிய கூடாது.
மேற்கு,தெற்கு திசைகளில் தலை வைத்து படுக்க வேண்டும்.
வடக்கு,கிழக்கு திசைகளை பார்த்து சாப்பிடவேண்டும்.
பெண்கள் எப்பொழுதும் கலங்க கூடாது.
பெண்கள் பொறுமையோடு இருக்கவேண்டும்,ஆண்களுக்கு மன அலைச்சல் கொடுக்க கூடாது.
பெண்கள் சீக்கிரம் வரம் வாங்கி விடுவார்கள்,வாங்கவுன் முடியும்.
கணவனுடைய உயிரை,மாங்கல்யத்தை,காப்பாற்ற பெண்களால் தான் முடியும்.
விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
ஓர் அளவுக்கு காசிருப்பவனுக்கு தர்மம் செய்ய மனம் வராது.
நல்லபாம்பு வாசம் செய்தால் லக்ஷ்மி கடாட்சம்.விபூதி போடவும்,கற்பூரம் கொளுத்தினால் போய் விடும்.
சக்திக்கு இடது கை பக்கம் சுற்ற வேண்டும்.சிவனுக்கு வலது கை பக்கம் சுற்ற வேண்டும்.
மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டியதில்லை.
எழுதினவன் ஏட்டை கெடுத்தான்.படித்தவன் பாட்டை கெடுத்தான்.
அன்பே தெய்வம் அருளே ஜோதி .
கூடி கெட்டவர்கள் இல்லை.பிரிந்து கெட்டவர்கள்அநேகம்.
வீட்டிலே புளி கொல்கிறது.காட்டில் புலி கொல்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக