சிறியாநங்கை
செடிகளில் சிறியாநங்கை பெரியா நங்கை இரண்டு வகை உண்டு .
வேட்டைக்கு செல்லும் வேடர்கள் சிறியாநங்கை செடியின் வடக்கத்திய வேரை காப்பு கட்டி எடுத்து கடை வாயில்வைத்து கடித்துக் கொண்டு செல்வார்கள். அவ்வாறு செல்லும் போது எது கடித்தாலும் எந்த விஷமும் அண்டாது .
சுவாமிகள் ராம்பக்கத்தில் இருக்கும் போது அவரது உடலில் தேமல் போல் இருந்தது. அப்போது மேற்கூறியவற்றை கூறி சிறியாநங்கை எடுத்து வர சொன்னார் . சிறியாநங்கை கையில் வைத்து கசக்கி சாரு எடுத்து சுவாமிகள் கால்களில் பூசினார்கள் சக்கையை என்ன செய்வது என்றுஅவர்கள் கேட்க அப்படியே வாயில் போட்டு கொள்ளடா என்றார் .சுவாமிகள் கூறியபடி வாயில் போட்டு கொண்டார் எப்படியடா உள்ளது என்றார்? ஒரே கசப்பு சுவாமி என்றார்கள் ,சர்க்கரை வேண்டும் என்றார்கள் அதற்கு சுவாமிகள் நீ இப்போது வாயில் எது போட்டாலும் இனிக்காது குறிப்பிட்ட நேரம் கழித்துதான் இனிக்கும் என்றார் ( அவர் கூறிய கால அளவு மறந்து விட்டது ) தோல் வியாதிகளுக்கு சிறியாநங்கை மிக நல்ல மருந்து.
கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் நோய் போகவே போகாது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக