சாக்கடையில் தான் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள்
சேற்றில் தான் செந்தாமரை முளைக்கிறது
அன்பு மட்டுமே அழியா சொத்து
கவரி மானிடம் இருந்து கிடைப்பது கஸ்தூரி
காராம் பசுவிடம் இருந்து கிடைப்பது கோரோசனம்.
ராகு காலம் முடியும் போது செய்யும் காரியம் வெற்றியாகும் ( முக்கால் பங்கு கழிந்த பிறகு )
வாணியன் ஆசை கோணி கொள்ளாது
தட்டானிடம் சிக்கிய பொன்னும் செக்கானிடம் சிக்கய மாடும் பத்த அவஸ்தை படும் .
கேடு வரும் பின்னே மதி கெட்டு போகும் முன்னே .
சுடுகாட்டில் தேவதைகள் இருக்கும்
இடுகாட்டில் தான் பேய் பிசாசுகள் இருக்கும்
பங்குனி மாதம் எல்லோருக்கும் விசேஷம்
செல்வம் வரும் போது செருக்கு வரக் கூடாது .
அன்பால் எதையும் வாங்கலாம் அதிகாரத்தால் எதையும் வாங்க முடியாது
.
ஆடியில் பெருங்காற்று அடித்தால் அடை மழை பொழியும் .
ஆடி ஆவணியில் அதிகமாக காற்றடித்தால் அந்த வருட பருவமழை நன்றாக இருக்கும்.
ஆறு வழியில் கொல்லும் காலம் தெளிவில் கொல்லும்.
வரப்பு தண்ணீரைக் கெடுக்கும் துரும்பு கல தண்ணீரைக் கெடுக்கும்
வேலி வெள்ளாமையை கெடுக்கும்
வெள்ளாடு தோப்பை
கெடுக்கும்
ஆற்றை நாணல் கெடுக்கும்
மந்திரம் கால் மதி முக்கால்
பிச்சை எடுத்தாலும் தர்மம் செய்ய வேண்டும்
நாக்கு இல்லாத மிருகம் முதலை
ராமர் மகாவிஷ்ணுவின் அவதாரம் அல்ல
செட்டி பிள்ளை எட்டு பணம் இருந்தால் பிழைத்து கொள்வான்
சாமியார்கள் எல்லாம் ஊரை ஏமாற்ற வந்தவர்கள்
கேது திசை சந்திர திசையில் படிப்பு வராது
நல்லவன் வயிற்றில் கெட்டவன் பிறப்பான்
கெட்டவன் வயிற்றில் நல்லவன் பிறப்பான்
பர்வத மலை துறவிகள் வாழ்ந்த இடம்
கட்டை பிராணன் போகும் இடம் தான் சொர்க்கம்
குலைக்கிற நாய் கடிக்காது , வேட்டைக்கு ஆகாது
இடிக்கிற வானம் மழை பொழியாது
மகத்துவம் இருக்கும் இடத்தில கூடம் இருக்காது
தாயின் சக்தி தான் ஜோதி
கோபம் உள்ள இடத்தில குணம் இருக்கும்
அப்பன் கொடுக்கும் காசில் இரண்டு தம்படி மிச்சம் செய்யும் பிள்ளை என்றும் முன்னுக்கு வருவான்
.
கிணற்றில் ஆமை இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் இல்லை
கோ தரிசனம் பாபவிமோசனம்
சாது தரிசனம் பாபவிமோசனம்
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னாலே வரும்.
அச்சத்தை தவிர்த்தால் ஆண்டவனை காணலாம்
தொழில் செய்பவன் சிக்கனமாக இருக்க வேண்டும்
தர்மம் செய்தால் பிள்ளை கிடைக்கும்
இறைக்கிற கிணறு ஊரும்
கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் மரம் ஏறி கை விட்டவனும் ஒன்று
குடும்பத்தை மூடி வாழும் தத்துவம் நல்லது
துஷ்டர்களை கண்டால் தூரப்போ சுடுகாட்டை கண்டால் ஒதுங்கிப்போ
நண்டு திங்கும் ஊருக்கு போனால் நடுக்கண்டம் கொடு என்று சாப்பிட கேட்க வேண்டும்
கண்டதை பேசலாம் காணாததை பேசக் கூடாது
விளக்கில் இருந்து கற்பூரத்தை ஏற்ற கூடாது
கன்னத்தில் கை வைத்தால் தரித்திரம் கஷ்டம் வரும்
ஓடிபிழைத்தாலும் திசை இருக்க வேண்டும்
அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்
இளைந்து சாப்பிட்டாலும் எழுத்து இருக்க வேண்டும்
பரத்தையர் தெருவில் இருந்தாலும் இனத்தார் தெருவில் குடியிருக்க வேண்டும்
பசி சுவை அறியாது நித்திரை சுகம் அறியாது
கோயிலை சுற்றி வந்தால் கெட்டது நீங்கும்
அவனவன் செய்த வினையை அவனவன் அனுபவித்து தான் ஆக வேண்டும் .
எது நம்புகிறோமோ அதுதான் நம்மை காப்பாற்றும் .
கஷ்டத்தையும் கசப்பையும் இனிப்பாக நினைக்க வேண்டும்
தாய் மடியில் தங்கம் இருந்தாலும் தான் மடியில் தவிடாவது இருக்க வேண்டும்
கூடி கேட்டவர்கள் யாருமில்லை பிரிந்து கெட்டவர்கள் உண்டு
பௌர்ணமியில் ஒரு பொருளை வாங்கினால் சொத்துக்கு சிறப்பு
நாளைக்கு செய்ய வேண்டியதை இன்றே யோசித்து சரிபார்க்க வேண்டும் .
ஞாயிற்று கிழமை விவசாயத்திற்கு நல்லது
கோபம் வரும் வீட்டில் சண்டை வளரும்
பூஜை அறையில் படுத்து தூங்க கூடாது
சொந்தம் இருந்தால் மூக்கு ஒழுகும் வரை கேட்ப்பார்கள்
கொண்டுக் கொண்டாலும் , கொடுத்து விட்டாலும் சொல்லப்படாது
ஒழுக்கம் வளர்பவர்கள் பெண்கள்
எளியவனுக்கு ( ஏழைக்கு ) ஆசை வார்த்தை சொல்லாதே
பணக்காரனுக்கு வைத்தியம் சொல்லாதே
அடுத்தவருக்கு கெட்டது எப்போதும் செய்யாதே
திருடன் அபசாரி என்ற பெயர் வாங்கப்படாது
சந்தோசம் தான் கடவுளின் ஆகாரம்
வாத்யார் சொல்லி கொடுப்பது சிறிய பாடம்
பெரியவர்கள் வாக்கு பெரியா பாடம்
மக்களை திருத்தினாலும் சாமியார்களையும் மந்திரவாதிகளையும் திருத்தமுடியாது
புண்ணியத்திற்கு போவதை தடுப்பது பேராசை பொருளாசை .
பெண்கள் பெரிய படிப்பு படித்தாலும் அடக்கமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும்.
எது வந்தாலும் வந்து விட்டு போகட்டும் என்று இருந்தால் எந்த நோயும் வராது
கெட்ட நேரத்தில் தணிந்து சாந்தமாக போக வேண்டும் . தைரியமாக இருக்க வேண்டும்
வீட்டிற்குள் கடை வைக்கபடாது
மனோ பூஜை பத்தியம் இல்லாதது எந்த நேரமும் கும்பிடலாம் .
பிள்ளைகளுக்கு ஒழுக்கம் பண்பாடு கற்பிக்க வேண்டும் ,தொழிலும் கற்று கொடுக்க வேண்டும் .
ஒன்றை பிடித்தால் வலுவாக பிடித்து கொண்டு ஒரே எண்ணத்தில் இருக்க வேண்டும் .
கட்டை இருக்கும் வரை இருந்து விட்டு ஆத்மா ஒரு இம்சை இல்லாமல் பிரிவது தான் புண்ணியம் .நோய் நொடி இல்லாமல் இருப்பதும் புண்ணியம் .
எதை செய்தாலும் இது நமது அல்ல என்று செய்ய வேண்டும் கடவுள் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும் .
யார் வந்து தண்ணீர் குடிக்க கேட்டாலும் தண்ணீர் இல்லை என்று சொல்லப்படாது .
சாபிடவர்கள் உப்பு இல்லை என்று சொல்லப்படாது .அப்படி சொன்னால் செய்தவர்கள் மனம் புண்படும் எனவே சொல்லப்படாது.
பெண்கள் கட்டின கணவர் வீட்டை பெரியதாக நினைக்கவேண்டும்
தெய்வ நம்பிக்கை , நம் உழைப்பு எப்போதும் இருக்க வேண்டும் .
நல்லது செய்யும் போதும், நன்மை செய்யும் போதும் தர்மம் செய்யும் போதும் அடுத்தவனுக்கு தெரியக் கூடாது , தெரிந்தாலும் நாம் சொன்னாலும் புண்ணியம் எல்லாம் போய் விடும் .
குழந்தைகளுக்கு வெள்ளாட்டு பால் கொடுத்தால் நோய் வராது .
பசி பட்டினி என்று வந்தால் சாப்பாடு போடவும் .
நல்ல பாம்பு வாசம் செய்தால் இலட்சுமி கடாட்சம் , விபூதி போட்டு கற்பூரம் கொளுத்தினால் போய்விடும்.
சுவாமிகள் கையெய் தூக்கி காண்பிப்பது மக்களுக்கு அமைதி வேண்டும் என்பதே .
கெட்டவனுக்கு நல்லது கெட்டது புரிய வைத்தால் நல்லவனாக மாறலாம் .
பிள்ளைகளை காலை நாலரை மணிக்கு எழுப்பி படிக்க வைத்தால் படிப்பு நன்றாக வரும் .
உலகத்தை காக்கும் கடவுளின் பாதம் உலகம் முழுவதும் பட்டிருக்கும் ஆகையால் தான் அந்த பாதத்திற்கு முதல் வணக்கம்
முதலில் காலுக்கு உதிரி பூக்கள் சூடிய பிறகு தான் சிரசில் பூ வைக்க வேண்டும்
இன்னும் குமபிட்டு இப்படி நடக்கிறது என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும் , எல்லாம் போய்விடும் .
கஷ்டம் வரும் காலங்களில் நபிக்கை அதிகமாக இருக்க வேண்டும்
நம்பிக்கை தான் தெய்வம் என்ன துன்பங்கள் வந்தாலும் உயிரே போவதானுலும் நம்பிக்கையை சிறிதும இழக்ககூடாது
மண்ணுக்கு மண் மாத்தனும் தண்ணீருக்கு தண்ணீர் மாத்தனும்
சிவ பூஜை செய்தால் மன அமைதி கிடைக்கும் . தகப்பனுடன் தாய் இணைந்து விடுகிறாள் .
எந்த நேரமும் கோபமில்லாமல் சந்தமாக இருக்க வேண்டும் .
தற்பெருமையும் கெளரமும் இருக்க கூடாது
இடாதவனுக்கு இட்டு காட்டு.
குப்புற பிறந்த குழந்தை அதிஷ்டகார குழந்தை,செல்வமாக
வாழ்வார்கள்.
பழுப்பு அரச இலையில் கையிலை தைத்தால் அழகாக இருக்கும்.