ஒருமுறை அர்ச்சுனனுக்கு கர்வம் வந்து விட்டது .பீமன் கதாயுதத்தை எடுத்து சண்டை போடுகிறான் ,நானோ ஒரு அம்பு விட்டால் போதும் என்று நினைத்தான்.மகாவிஷ்ணு அர்ச்சுனனை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றார் .
அங்கு பெண்கள் ஒரு பூச்செடியில் மலர் பறிக்க பறிக்க மீண்டும் பூக்கள் பூத்து கொண்டே இருந்தன.அர்ச்சுனன் அப்பெண்களிடம் சென்று யாருக்காக பூஜை?எப்படி இந்த பூ பறிக்க பறிக்க பூத்து கொண்டே இருக்கிறது என்று கேட்க அவர்கள் பீமனை பூஜிக்க என்றனர் .
பின்பு பசியை தூண்டிவிட்டார் மகாவிஷ்ணு .இருவருக்கும் நல்ல பசி .ஒரு வீட்டின் முன் பசி என்று கேட்டனர் ,எதுவுமில்லை என்று விரட்டினார் அவ் வீடு பெண்மணி ,தண்ணீராவது கொடுங்கள் என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று விரட்டினாள்.அவளை பார்த்து மகரசியாய் இரு அம்மா என்றார்.
இன்னொரு வீட்டிற்க்கு வந்து பசி என்று கேட்க நன்கு உபசரித்து மோர் கொடுத்தார் அந்த வீட்டு அம்மா. மோர் முழுவதையும் மீதி வைக்காமல் குடித்து விட்டார் மகாவிஷ்ணு. மீண்டும் ஒரு சொம்பு அர்ச்சுனனுக்கு கொடுத்தார்.பசி அடங்கியது.அப்போது அவ்வீட்டு பசுங்கன்றுதுள்ளி ஓடி அருகிலுள்ள கிணற்றில் விழுந்து விட்டது ,அதை கண்ட தாய்ப்பசுவும் உடன் கிணற்றில் விழுந்தது ,அந்த வீட்டு பெண்ணும் இதை பார்த்து கிணற்றில் விழுந்தார் , உடன் கணவனும் கிணற்றில் விழுந்து விட்டான் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவிடம் காப்பாற்றி இருக்கலாமே என்று கேட்க?போனால் போĨ5;ட்டும் என்று மகாவிஷ்ணு கூறி பேசாமல் இருந்தார் .
பின்பு இருவரும் நடந்தார்கள் நடக்கும் போது ஒரு முள் மகாவிஷ்ணுவின் காலில் ஏறி விட்டது அதை எடுக்குமாறு அர்ச்சுனனிடம் கூற அவன் இவர் மீது கோபமுற்று மனதிற்குள் படுபாவி அவர்கள் அனைவரையும் காப்பாற்றி இருக்கலாமே தண்ணீர் கூட கொடுக்காதவளை மகராசியை இரு என்றாய் ,பசி ஆத்தியவர்களை காப்பாற்றாமல் விட்டு விட்டாயே என்று முள்ளை வெளியே எடுப்பதற்கு பதில் நன்கு உள்ளே தள்ளி விட்டார். மகாவிஷ்ணு பின்பு முள்ளை எடுத்து விட்டு நன்றாக உற்று பார் என்றார் .அர்ச்சனன் மகாவிஷ்ணுவின் காலில் முள் குத்திய இடத்தை பார்க்க கன்று,பசு,கணவன்,மனைவி யாவரும் பாதம் வழியே சொர்கத்திற்கு செல்வதை கண்டான் .பின்பு மகாவிஷ்ணுவிடம் மனிப்பு கேட்டான் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக