கொங்கனர் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டார் .கல்யாணம் முடிக்க வழியில்லாமல் காவி தரித்து மலை காடுகளுக்கு சென்று சிவ சிவா என்று சொல்லிக்கொண்டு இருந்தார். காய் கனிகளை மட்டும் உண்டார். அப்படி இருக்கையில் ஒரு கொக்கு மரத்தின் மேல் இருந்து கீழே விழுந்தது. இவர் மேலே பார்க்கவும் கொக்கு கீழே விழவும் சரியாக இருந்தது.உடனே இவர் தவ வலிமை தமக்கு கூடி விட்டது என்று நினைத்தார்.நம் பார்வை பட்டவுடன் கொக்கு கருகி கீழே விழுந்து விட்டது என்று நினைத்தார். அவருக்கு நான் என்ற நினைவு வந்தவுடன் பசித்தது .மலையில் இருந்து கீழே இறங்கினார்.ஒரு வீட்டிற்கு சென்று பசிக்கிறது என்று கேட்டார்.அந்த அம்மா அமருங்கள் சமைத்து சாப்பாடு போடுகிறேன் என்று கூறி சமையல் செய்ய தொடங்கினார்.சிறிது தாமதமாக சமையல் ஆனது. இவருக்கு கோபம் வந்து விட்டது,அந்த அம்மாவை முறைத்து பார்த்தாராம். அந்த அம்மா கொங்கனரே நான் என்ன கொக்கா பொக்குன்னு போகிறதுக்கு என்று கேட்டார். நம்மை விட இந்த அம்மா விஷயம் தெரிந்தவர் என்று அங்கிருந்து கிளம்பி வேறு வீடிற்கு சென்று அங்கிருந்த ஆளிடம் பசிக்கிறது என்று கேட்டார்.அந்த ஆள் சிறிது நேரம் அமர்ந்திருங்கள் என்று கூறி ஒரு ஆட்டை வெளியே ஓட்டி சென்றார்.ஆட்டை கசாப்பு போட்டு விற்று விட்டு வந்து சமையல் செய்து முதலில் கண் தெரியாத தாயாருக்கு ஊட்டி விட்டு பின்பு கொங்கனரை சாப்பிட அழைத்தார் ,இவருக்கு கோபம் வந்து முறைத்தார் அதற்கு அந்த ஆள் உங்களைப்போல் அம்மாவை நான் அனாதையாக விட்டு விடவில்லை அம்மாவை கவனித்துவிட்டுதான் எனக்கு மறுவேலை என்றார்.இவனுக்கும் நம்மை விட விஷயம் அதிகம் தெரிந்துள்ளது நாம் அம்மாவை விட்டு வந்தது இவனுக்கு எப்படி தெரிந்தது என்று வியந்தார்.பின்பு தாயிடம் வந்து தொண்டு செய்தார்.
பின்பு புலிப்பாணி மந்திரம் கற்றுகொண்டார்.பக்கத்தில் உள்ள ஆடு மாடு மேய்பவர்கள் எல்லாம் இவரை பார்த்து புலி வாயை கட்டிவிடுவார் என்று புகழ்ந்தனர்.
பின்பு ஆசிரமம் வைத்து சிஷ்யர்கள் சேர்ந்தனர்.சிஷ்யர்களுக்கு சொல்லி கொடுக்க எதுவும் தெரியவில்லை,ஏதாவது சொல்லவேண்டுமே என்று இந்த சரீரம் மக்களுக்கே சொந்தம்,மக்கள் சந்தோஷமாக இருக்க வழி செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தார்.சிஷ்யர்களில் 32 அங்க லட்சணம் பொருந்தியவர் போகர் அவரை பார்த்தாலே தொட வேண்டும் போல் இருக்கும் .ஆசிரமத்திற்கு வரும் பெண்கள் அவரை தொட்டு பார்த்து சந்தோசம் அடைவார்கள்.மக்கள்கூட்டம் எல்லோரும் போகரை சுற்றியே இருக்கும் இதை பார்த்த மற்ற சிஷ்யர்கள் போகர் மீது வெறுப்புற்றும்,பொறாமையுற்றும் கொங்கனரிடம் புகார் செய்தனர் .கொங்கனர் போகரிடம் நீ தான் பெண் பிள்ளைகளோடு சிரித்து கொண்டு இருக்கிறாய் நீ சம்சாரியா என்று கேட்க நீங்கள் தானே எல்லோரையும் சந்தோஷமாக வைத்திருக்க சொன்னீர்கள் என்றார் .கொங்கனவர் மற்றவர்களின் பேச்சை கேட்டு போகரை நாட்டை விட்டே வெளியேற சொன்னார் .அதன் பின்னர் போகர் ஜப்பான் நாட்டிற்கு சென்று விட்டார்.அங்கு சென்று இறந்தவர்களுக்கு எல்லாம் உயிர்ப்பு சக்தி கொடுத்தார் மற்ற எல்லா விஷயங்களையும் கற்று கொடுத்தார் .கொங்கனவருக்கு இறக்கும் சமத்தில் ஞானம் வந்தது மற்ற சிஷ்யர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் வெட்டி அருமையான சிஷ்யனை இழந்து விட்டேனே என்று வருத்தப்பட்டார்.எப்படி இருந்தாலும் போகர் தான் என்னை அடக்கம் செய்ய வேண்டும் என்றார் நம்பிக்கையான ஒரு சிஷ்யனை கூப்பிட்டு போகர் எங்கிருந்தாலும் அழைத்து வரச் சொன்னார் .சிஷ்யன் ஜப்பானுக்கு சென்று எல்லா மருந்தும் என்னிடம் உள்ளது என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நாட்டினுள் சென்றார் .ஒருவன் கையில் அடிபட்டு ரத்தம் வர அதற்கு மருந்து கேட்க இதற்கு மட்டும் இல்லை என்று கூற ,அவரை ராஜாவிடம் கூட்டி சென்றனர்.போகருக்கு ஞான திருஷ்டி மூலம் விவரம் தெரிய வந்தது.தானே தண்டனை கொடுக்கிறேன் என்று கூறி மற்றவர்களை அனுப்பி விட்டார் . உப்பு சாப்பிட்ட இடத்தில் துரோகம் செய்ய கூடாது என்று மாறு வேடமிட்டு இந்தியா வந்தார்கள் .பின்பு திருப்பதியில் கொங்கனவரை போகர் அடக்கம் செய்தார்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக