ஆரவல்லி சூரவல்லிஇருவரும் ஆண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்தனர் .
இருவரும் சாகா வரம் பெற்றவர்கள் .அவர்களுக்கு ஒரே பெண் பல்வரிசை அவள் பெயர் .அவளை திருமணம் செய்து கொள்ள நிபந்தனைகளை விதித்தார்கள் .ஒரு பெரிய இரும்பு குண்டை கையாலே தேய்த்து கரைக்க வேண்டும் ,இரும்பு கம்பத்தை ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க வேண்டும்,சேவல் கோழியோடு சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும் .இப் போட்டிகளில் ஜெயித்தால் திருமணம் இல்லையென்றால் அடிமையாக இருக்க வேண்டும் .எவராலும் ஜெயிக்க முடியவில்லை எல்லோரும் அடிமையாகினர் .பீமன் போட்டிக்கு சென்றான் எல்லாவற்றிலும் ஜெயித்தான் ஆனால் இரும்பு கம்பத்தை ஒரே வெட்டில் மூன்று துண்டுகளாக்க முடியவில்லை இரண்டு துண்டுகள்தான் ஆகியது .பீமனையும் சிறையில் அடைத்து விட்டனர் .மகாவிஷ்ணு பெருசாளியாகப் போய் சிறையில் இருந்து பீமனை விடுவித்து வந்தார் . தர்மர் இதை அறிந்து ஒரு சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் காதிற்கு வந்தோம் பீமனை ஜெயிலில் விட்டு விட்டு வாருங்கள் போட்டியில் ஜெயிக்க பாருங்கள் என்றார் .மகாவிஷ்ணுவான கண்ணபிரான் சகாதேவனை கூப்பிட்டு சாஸ்திரத்தை எடுத்து பார்க்க சொன்னார் , அந்த பெண்ணின் கணவன் அல்லி முத்து என்று இருந்தது . அவன் துரியோதனின் தங்கையின் பிள்ளை அவர் தருமரிடம் பாசமாக இருப்பவர் தகவல் கூறி அழைத்துவரச் சொன்னார்கள் பின்பு அவனை அழைத்து கொண்டு துறவியிடம் சென்று ஆசி பெற்று முட்டை வாங்கி கொண்டு போட்டிக்கு அனுப்பினார்கள் . அல்லி முத்துக்கு இரும்பு கம்பத்தை வெட்ட மகாவிஷ்ணு சொல்லி கொடுத்தார் .கம்பத்தை வெட்டும் போது முதலில் கம்பத்தை U போல் வளைத்து பின்பு வெட்ட சொன்னார் .அல்லிமுத்து எல்லா போட்டிகளிலும் ஜெயித்துவிட்டான்.பேசியபடியே பெண்ணை மணம் முடித்து எங்கள் ராஜியத்திலேயே இரு என்றனர் .அல்லிமுத்து உங்கள் ராஜ்யமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் பெண்ணை மட்டும் கொடுங்கள் என்றான். நம்மை மதிக்கவில்லையே என்று பெண்ணிடம் விஷம் கலந்த பலகாரத்தை கொடுத்து உன் கணவனுக்கு மட்டும் ஊருக்கு செல்லும் வழியில் கொடு என்றனர் பெண்ணுக்கு பலகாரத்தில் விஷம் உள்ளது தெரியாது .வழியில் தின்ன கொடுத்தாள் தின்னவுடன் அவன் உடம்பு நீலம் பாய்ந்தது. அதைபார்த்து பல்வரிசை கதறி அழுதாள்.துறவியிடம் வரம் பெற்றதால் அல்லிமுத்து இறக்கவில்லை .ஆனால் அவன் நான் இறந்ததற்கு சமம் என்றான் அப்போது பாடிய பாடல் தான் இப்போது சுடுகாட்டிற்கு செல்லும்போது வெட்டியான் பாடுவது . இதை கேள்விப்பட்ட அர்ஜுனன் கோபமடைந்தான் அவர்களை வீழ்த்த சென்றான் . ஆரவல்லியும் சூரவல்லியும் சாகாவரம் பெற்றவர்கள் அர்ச்சுனன் பாணம் விட்டால்தான் இறப்பார்கள் .அர்ச்சுனன் வருவதை கேள்விப்பட்டு இருவரும் நாட்டை விட்டு ஓடிவிட்டனர் பின் கடலில் வீழ்ந்து உயிரை மாய்த்து கொண்டனர் .அவர்களின் ஆவி திருமூர்த்தி மலையில் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டு இருந்தது. மரமே நடந்து வருமாம் அப்படி சக்தி அவர்களுக்கு .திருமூர்த்தி மலையில் யாரும் ஏற முடியாது ஏறியவர்கள் திரும்பியது இல்லை .அப்படி இருக்கும் பொழுது நம் சுவாமிகள் திருமூர்த்தி மலைக்கு மேல் செல்லும் போது போகவேண்டாம் என்று எல்லோரும் தடுத்தார்கள்.சுவாமிகள் மலை மேலே ஏறிப் போய் படுத்து கொண்டார். மரங்களின் மீது நெருப்பும் பெரிய சத்தங்களும் கேட்டது சுவாமிகள் அமைதியாக இருந்தார் .ஆவிகளின் ஆரவாரத்தை அடக்கினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக