வியாழன், 23 ஜூன், 2011

இடும்பர் சிவன் கோயில்

இடும்பர் சிவன் கோயில்இருந்த இடத்தில் ஒரு துறவி வாழ்ந்து வந்தார்.
அவ்வூரில் நீண்ட நாட்களாக மழை இல்லாமல் இருந்தது .துறவிகள் கண் திறந்து பார்த்தால் மழை பெய்யும் என்று அவ்வூரில் உள்ள தாசி, முனிவர் சாப்பிடும் தழைகளில் உப்பு நீர் தெளித்தாள்.யார் இது போல் செய்தது என்று துறவி கேட்க ,மரத்தின் பின்னே ஒளிந்து இருந்த தாசி மழையில்லாமல் மக்கள் வேதனைப்படுகிறார்கள்.தங்கள் அருளால் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டினாள்.துறவியின் அருளால் மழை பொழிந்தது .தாசி மகிழ்ச்சியால் நடனமாடினாள்.தாசியின் கொலுசு ( சதங்கை ) அறுந்து விழுந்தது.துறவி அதை மாட்டினார். கணக்கு பிள்ளை ஒருவன் துறவியை தவறாக பேசினான் .துறவிக்கு கோபம் வந்தது . சிவலிங்கம் மூன்று துண்டுகளாக உடையுமாறு சாபமிட்டார் . உடனே சிவலிங்கம் படீர் என வெடித்தது .ஒரு பகுதி தண்ணீரில் சென்று விழுந்தது .மற்றொரு பகுதி விழுந்த இடத்தில் புல் கூட முளைக்கவில்லை.மற்றொரு பகுதி கோயிலிலேயே இருந்தது                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக