புதன், 3 நவம்பர், 2010

திருமணம்

திருமணம் 

திருமணம் அனைத்தும் பிரம்மாவின் முடிச்சுபடிதான் நடக்கும் .

ஒரு நாட்டில் ராஜா ராணி நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தனர் . அவர்களுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவளுக்கு 32 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை.
ராஜாவுக்கு தனது தங்கை மகனுக்கு மணமுடிக்க ஆசை . ராணிக்கு தனது தம்பிகள் நால்வரில் யாராவது ஒருவருக்கு மணமுடிக்க ஆசை .
ராஜா திருமண பேச்சை எடுத்தால் ராணியும் ராணி திருமண பேச்சை எடுத்தால் ராஜாவும் தட்டி கழித்து விடுவார்கள் .

இப்படி இருக்கையில் சிவபெருமான் பிரம்மனிடம் எப்போது இளவரசிக்கு திருமணம் நடக்கும்? யார் மாப்பிள்ளை ? என்று கேட்டார் . அதற்கு பிரமன் காட்டில் ஒரு குஷ்டரோகி இருக்கிறான் அவன்தான் மாப்பிள்ளை இன்றில் இருந்து  45 வது நாளில் திருமணம் நடக்கும் என்று கூறினார்.
அதற்கு சிவன் அது எப்படி நடக்கும் அவளோ இளவரசி அவனோ குஷ்டரோகி என்றார் .
தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 45 வது நாள்  வாருங்கள் சென்று பார்க்கலாம் என்று பிரமன் கூறினார் .
ஒரு நாள்  ராணி தனது மகளிடம் உனது தந்தை இந்த ஜென்மத்தில் உனக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார் , நான் கூறியபடி கேள் உன்னை ஒரு மரப்பெட்டியில் உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து விட்டு எனது தம்பிமார்களிடம் கூறுகிறேன் யார் வந்து பெட்டியை திறந்து உன்னை முதன் முதலில் பார்கிறார்களோ அவர் யாரகிருந்தாலும் அவரையே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி சத்யம் செய்ய சொன்னாள் . தாயின் கட்டளைப் படி இளவரசியும் சத்யம் செய்தாள். ராணி ராஜாவுக்கு தெரியாமல் ஒரு மரப்பெட்டி செய்து இளவரசியை உட்கார வைத்து அதில் பலகார பட்சணங்கள் , திருமாங்கல்யம் பட்டுடை அனைத்தும் வைத்து கொண்டியிட்டு ஒரு குறிப்பிட்ட தொலை தூரத்தில் வைத்து வருமாறு சேவகர்களை அனுப்பினார் . சேவகர்களும் அவ்வாறே அவர்களும் ராணி கூறிய படியே செய்தனர் .
பின் ராணி தனது தம்பிமார்களிடம் விவரத்தை கூறி இளவரசியை கண்டு பிடிக்க அனுப்பினாள்.
அந்தக்காலத்தில் அண்டரண்ட பட்சி என்று இருந்தது அது ஒரு பெரிய வீட்டையே தூக்கி கொண்டு போய்விடும் . அப்பட்சி பட்சிண வாசனையை கண்டு இளவரசி உள்ள பெட்டியை தூக்கி கொண்டு ஒரு காட்டிற்கு வந்தது . பெட்டியை திறக்க மயற்சி செய்து முடியாமல் பெட்டியை காட்டிலேயே விட்டுவிட்டு சென்று விட்டது .
இளவரசி தனது மாமன்மார்கள் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டு இருந்தாள். யாரும் வரவில்லை அந்திசாயும் நேரம் ஆகியும் யாரும் வரததால் பயந்து சட்டம் போட ஆரம்பித்தாள். அவ் வழியே வந்த குஷ்டரோகி யாரோ பாவம் என்று பேட்டியின் கொண்டியை திறந்தான். இளவரசி மாமன் என்று எதிர்பார்த்தாள் ஆனால்   குஷ்டரோகியை  கண்டு அதிர்ந்தாள் . தாயிடம் செய்த சத்யப்படி பெட்டியை யார் திறக்கிறார்களோ அவரை மணமுடிக்க ஒப்பு கொண்டதை நினைத்து பார்த்தாள்.விவரத்தை குஷ்டரோகி யிடம் கூறி திருமணம் செய்ய வற்புறுத்தினாள்.அதற்கு அவன் ஏற்கனவே நான் பவம் செய்து குஷ்டரோகியாக அவதிப் படுகிறேன் உன்னை திருமணம் செய்தால் பாவம் இன்னும் மிகுதியாகும் திருமணம் செய்ய மாட்டேன் என்றான். அதற்கு இளவரசி நீ எண்ணை திருமணம் செய்யவில்லை என்றால் நான் ஏன் உயிரை போக்கி கொள்வேன் அந்த பாவமும் உன்னை சேரும் என்றாள்.பிறகு குஷ்டரோகி அவளின் விருப்பபடி மாங்கலயம் அணிவித்து திருமணம் செய்தான் .அவனுக்கு குஷ்டம் இருந்ததால் அவனால் பலகார பட்சணங்களை கையால் எடுத்து சாப்பிட முடியவில்லை. இளவரசி அவனுக்கு அவள் கையால் ஊட்டி விட்டாள்.
பின் அவன் எந்த ஊர் எப்படி காட்டுக்கு வந்தான் என்று கேட்டாள். அதற்கு அவன் நானும் ராஜா வீட்டு பிள்ளைதான் ஏன் சிறு வயதில் ஒரு சாமியார் எங்கள் நாட்டுக்கு வந்திருந்தார் அவர் கந்தலாடை உடுத்தி அழுக்காக இருந்தார் என் அறியாமையால்  அவரை ஏளனம் செய்தேன் அவர் கோபம் கொண்டு குஷ்டரோகியாக அவதிப் படுவாய் என்று சாபமிட்டார் .உடனே எனக்கு குஷ்டம் வந்துவிட்டது மன்னிப்பு கேட்டேன் மன்னிப்பு கிடைக்கவில்லை . எனது தாய் தந்தையும் மன்னிப்பு கேட்டனர் சாப விமோசனம் கொடுக்குமாறு வேண்டினர் . அதற்கு அவர் சிவன் பிரம்மா விஷ்ணு மூவரும் ஒன்றாக வந்து உன்னை பார்த்தால் குஷ்டம் நீங்கும் என்றார் .
அந்த மூவரும் ஒன்றாக சேர்ந்து எப்போது என்னை பார்ப்பது எனது குஷ்டம் எப்போது நீங்குவது என்று கூறி அழுதான் .
           பிரம்மா கூறியபடி 45 வது நாள் சிவன் பிரம்மாவை அழைத்தார் வா காட்டிற்கு சென்று திருமணம் நடந்ததா என்று பார்த்து வரலாம் என்றார் .பிரம்மா சிவனை பார்க்க செல்லும் போது மகாவிஷ்ணு எங்கு செல்கிறீர்கள் நானும் உடன் வருகிறேன் என்று கூறினார் . மூவரும் ( சிவன் பிரம்மா மகாவிஷ்ணு )  காட்டிற்கு சென்று மணமக்களை கண்டனர் . இளவரசிக்கும் குஷ்டரோகிகும் தரிசனம் கொடுத்து சாபத்தை நீக்கினர் .
குஷ்டரோகி அழகான வாலிபனாய் மாறினான் .              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக