வியாழன், 21 ஏப்ரல், 2016

கோ தரிசனம் பாபவிமோசனம்.

சாது தரிசனம் பாபா விமோசனம்.
கும்பிடுகுற கோயிலை கெடுக்க கூடாது.

கூடுகிற கல்யாணத்தை கெடுக்க கூடாது.
கல்யாணம் ஆகாதவர், பிள்ளை இல்லாதவர்களும் பிள்ளையாரை சுற்றி வந்து, தலையில் மூன்று கொட்டு கொட்டவேண்டும். குறைகள் நீங்கும். கூடாதவைகளை கூட்டி வைப்பவர் பிள்ளையார்.
மரத்தின் ஆணி வேரை பிடி. கப்பும்,கிளையையும் பிடிக்காதே. வந்தா வேரோடு வா, எங்கோ முளைக்கிறதோ, அங்கே பிடி நீ.
கெட்ட நேரம் விலக : நூற்றியெட்டு பேருக்கு சாப்பாடு போட்டு, சாப்பிட்ட இலையை எடுக்கவும். ஏழைகள் இரண்டு பேருக்கு அரைசவரன் எடைக்கு குறையாமல் மாங்கல்யம் வாங்கி கொடுக்கவும்.
பிரம்மன் எழுத்தை யாராலும் மாற்ற முடியாது. தெய்வ நம்பிக்கை குரு நம்பிக்கைதான் நம்மை காப்பாற்றும். மற்றது ஒன்றும் செய்ய முடியாது.
குருவின் மேல் நம்பிக்கை வேண்டும்.

பல கடவுளை கும்பிடாதே. எல்லாம் குருவே, கடவுள் ஆவார்.
காலை நான்கு மணிக்கு எழுந்து படித்தால் நன்கு படிப்பு வரும்.

விலை மதிக்க முடியாத சொத்து படிப்பு ஒன்றுதான்.
நம்பிக்கையும் உறுதியும்  இருந்தால் எல்லாம் சற்று விலகிவிடும்.

ஒரே உறுதியான நம்பிக்கை இருந்தால் எந்த கிரகமும் ஒன்றும் செய்யாது.
பத்து பேருக்கு சாப்பாடு போடுவதில் வரும் புண்ணியத்தில் பாதியை சாப்பிட்ட இலையை எடுப்பவர்களுக்கு வந்து சேரும்.
சுவாமிகள் சொல்லும் தர்மம்.
கோயில் குறையாக நிற்கும்போது போது பூர்த்தி செய்யவும்.
அன்னதானம் செய்தல்
ஏழை எளியோருக்கு கல்யாணம் கட்டுதல்.

தண்ணீர் பந்தல், குடி நீர் வசதி அமைத்தல்.
அன்னதானத்தை விட சிறந்தது – தினை அரிசி நான்கு படியை, தினமும் மூன்று விரல்களால்  ( பெருவிரல்,நடுவிரல்,மோதிரவிரல்) எடுத்து எறும்புக்கு போடவேண்டும். நூறு பேருக்கு சாப்பாடு போடுவதை விட சிறந்தது.தினை அரிசி தீரும்போது விநாயகருக்கு சர்க்கரை பொங்கல் செய்து படைத்தது குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
சாதுக்களை நீ தேடி போகவேண்டும்.
மண்ணுக்கு மண் மாத்தனும், தண்ணீருக்கு தண்ணீர் மாத்தனும். விதி இருந்தால்தான் மாறும்.
வெள்ளருகால் தீராத நோய் இல்லை.
நிலைக்கண்ணாடியின் முன் நாம் உட்கார்ந்து கொண்டு நம் உருவத்தையே நாம் பார்த்துக்கொண்டு வரவேண்டும். மனம் ஒருமுகப்படும் போது, ஒடுங்கும் பொழுது நம் உருவம் நமக்கே கண்ணாடியில் தெரியாது.



பூஜை அறையில் குத்து விளக்கை எள் எண்ணை ஊற்றி ஏற்றி நம் பின் பக்கம் வைக்கவேண்டும்.நமக்கு முன்னால் நிலைக்கண்ணாடியை வைத்திருக்க வேண்டும். இவற்றின் நடுவில் உட்கார்ந்து கொண்டு சுடர் ஒளியை கண்ணாடியில் பார்த்துக்கொண்டு வர வேண்டும். கண்ணாடியில் விளக்கின் பிம்பம் தெரியாத நிலையை அடையும் பொழுது நமது மனம் ஒருமுகமாக நின்று விட்டதற்கு ஆரம்பம் ஆகும்.
ஓம் பராசக்தியே துணை. நமசிவாய நமஹா என்று எப்பொழுதும் ஜெபித்து வா.எல்லா நன்மைகளும் வரும். மனம் அலைபாய்வதும் அடங்கும். மனம் ஒருநிலைப்பட்ட பின் நமசிவாயநமஹா என்று உபாசிக்க வேண்டும்.ஓம் நமசிவாய நமஹா என்பதில் சக்தியும் அடங்கியுள்ளது.
அறுபத்தி மூன்று வயதுக்கு மேல் எந்த கிரகமும் சாந்தியாகும்.தொண்ணூறு வயதுக்கு மேல் எந்த தெய்வமும் ஒன்றும் செய்யாது.நூற்றி இருபது வயதுக்கு மேல் தெய்வப்பிறவி. உலகத்துக்கு பொதுவானவர்.கலசம் வைத்தி யாகம் வளர்பதற்க்கு ஒப்பாகும்.
நல்லது,கெட்டது,புரிய வைத்தால் நல்லவனாக மாறலாம்.
பிள்ளைகளை காலையில் நாலரை மணிக்கு படிக்க வைத்தால் படிப்பு நன்கு வரும்.
கூடி கெட்டவர்கள் இல்லை. பிரிந்து கெட்டவர்கள் அநேகர்.
மன்னிப்பு கேட்டால் கடவுளே கொடுப்பார்.
பசி பட்டினி என்று வந்தால் சாப்பாடு போடவும்.
ஓர் அளவு காசு இருப்பவனுக்கு தர்மம் செய்ய மனது வராது.
விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
தெற்கு,மேற்கு திசைகளில் தலை வைத்து படுக்க வேண்டும். வடக்கு புரண்டு திரும்பி படுக்கையில் இருந்து எழ வேண்டும்.

கிழக்கு வடக்கு திசைகளை பார்த்து சாப்பிடவேண்டும்.
திருஷ்டி- எலுமிச்சம் பழத்தை நான்காக அறுத்து குங்குமம் வைத்து கற்பூரம் வைத்து கொளுத்தி திருஷ்டி கழித்து சாறு பிழிந்து, வலது கையில் உள்ள எலுமிச்சம்பழ துண்டை இடது பக்கமும், இடது கையில் உள்ள எலுமிச்சம்பழ துண்டை வலது பக்கமும், மற்ற இரண்டு துண்டையும் முன்புறம் ஒன்றையும், பின் பக்கம் ஒன்றையும் போடவும்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஐந்து விரல்களும் சமமாக இல்லை. இதுவும் கடவுள் செயல்.இதுவும் நல்லதற்கே என்று இரு.
இப்பொழுது இருந்தே கோபத்தை குறைத்துக்கொள். எந்த நேரத்திலும் கோபம் இல்லாமல் சாந்தமாகவே இருக்கவேண்டும்.
விளக்கு - ஒரே திரிசல் குத்து விளக்கில் ஏற்றக்கூடாது.குறைந்தது இரண்டு திரியாகிலும் ஏற்ற வேண்டும். மூன்று திரிசல் கெட்டது போகும். நான்கு திரிசல் – சகலத்துக்கும் நல்லது. ஐந்து திரிசல்- சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
மண் அகல் விளக்கு சிறப்பானது.

திரியின் திசை, வடக்கு – சக்தி, தெற்கு சிவன், கிழக்கு சாந்தி.
விதியை தடுக்க அவன் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
வேகாத ஒரு புல் – அருகம்புல்.
வாடாத ஒரு பயிர் – அன்பு.

வருத்தம் இல்லாத ஒரு பாரம் – கரு உருவாகும் குழந்தை 
காட்டு முயல், பதினெட்டு அடி வேங்கை, கவரிமான்,காராம் பசு , தெய்வ அம்சம் பொருந்தியவை.
குறையில்லாத மனிதனே கிடையாது.
அகம்பாவம் என்றும் வரக்கூடாது.
பச்சை நிறம் உள்ள யாவும் உயர்ந்தது.
இன்னும் கும்பிட்டு இப்படி நடக்கிறதே என்றால் இவ்வளவு காலம் இருந்த நம்பிக்கையும் போய்விடும். எல்லாம் போய்விடும்.

கஷ்டம் வரும் காலங்களில் சுவாமிகளின் மேல் நம்பிக்கை அதிகமாக இருக்கவேண்டும்.
விதி முடிந்தால் நம்பிக்கை கை கூடாது.
நம்பிக்கை தான் தெய்வம். உயிரே போனாலும் நம்பிக்கையை சிறிதும் இழக்கக்கூடாது.
தற்பெருமையும், கௌரவத்தையும் ஒழி.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்ய, சுவாமிகள் கடைபிடிக்கச் சொன்னது, தாலி வாங்கக்கூட முடியாத ஏழைக்கு, ஐந்து பேர் சேர்ந்து தாலி வாங்கி கொடுத்தால் நல்லது. தாலியின் எடை குறைந்தது ஐந்து கிராம் ஆகிலும் இருக்கவேண்டும்.
கோயில் நான் கட்டி தருகிறேன் என்று போகாதே.தெரிந்தவர்கள் பத்துப்பேரிடம் காசு வாங்கி செய்ய வேண்டும்.பிரியப்பட்டதை கொடு என்று கேட்க வேண்டும்.

ஒருவனே கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து கோயில் நல்லபடியாக இருந்தாலும் கும்பாபிஷேகம் ஆன ஒரு வருஷத்தில் சாவான், அல்லது பின்னப்படுவான்.
தெய்வ நம்பிக்கை, நம் உழைப்பு இரண்டையும் கைவிடக்கூடாது.
நல்லவனுக்கு வரும் பணம், நல்ல வழியில் செலவாகும்.
செய்யும் தர்மம், நல்லவை செய்யும் போது,அடுத்தவனுக்கு தெரியக்கூடாது.தெரிந்தாலும்,சொன்னாலும், நாம் செய்த புண்ணியம் போய்விடும்.
பசி ஆற்றுவது, ஏழைகள் கல்யாணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவருக்கு கூரை புடவை,வேஷ்டி,தாலி ( ஐந்து பேர் சேர்ந்து ) கொடுத்து உதவுவது,கோயில் கட்டி முடிக்காத நிலையில் இருக்கும் பொழுது, மனம் மகிழ்ந்து கொடுத்து முடிக்க செய்வது சுவாமிகள் கூறும் தர்மம்.
விராலி தழை, நொச்சி தழை இருக்குமிடத்தில் கொசு வராது.

வெள்ளி, 1 ஏப்ரல், 2016

உபகாரம் பண்ணு என்றால், நானே பூர்த்தி பண்ணுகிறேன் என்று சொல்லாதே.என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று எப்பொழுதும் சொல்லாதே. என்னை நம்பாதே, என்னால் அந்த சமயத்தில் என்ன செய்ய முடிகிறதோ அதை முயற்சிக்கிறேன் என்று எப்போதும் பதில் சொல்லவேண்டும். அந்த சமயத்தில் என்ன முடிகிறதோ அதை செய்யவேண்டும்.
தர்மத்திற்கு, பசி பட்டினிக்கு நாம் ஒரு பங்கு ஒதுக்கவேண்டும்.
தினம் ஒரு கத்தை அவுத்திக்கீரை மாட்டுக்கு கொடுக்கவேண்டும்.
ஒரு மூட்டைக்கு ஒரு மரக்கால் கடவுளுக்கு ஒதுக்கு.கடவுளுக்கு ஒருகாணி நிலம் ஒதுக்கி பயிர் செய். அதிக மகசூல் கிடைக்கும்.
எதில் போனாலும் நேராக, நேர்மையாக போகவேண்டும். தைரிய லக்ஷ்மி கூடவே வரவேண்டும். உழைப்பு, அறிவு கொண்டு முன்னேறவேண்டும்.
கோபமுள்ள இடத்தில் குணம் இருக்கும்.
பூஜைக்கு உகந்த நேரம் விடியற்காலை 5.00 – 5.45.  இரவு  7.00-7.30 சத்தம் இல்லமால் உட்கார்ந்து இருக்கவும்.
ஆண் நெஞ்சு தரையில் பட ( மார்பு ) கும்பிடவேண்டும்.

பெண் முட்டிக்கால்,நெற்றி தரையில் பட கும்பிடவேண்டும்.